பாவம், சட்டம் (ஷரீஆ) (2)


விலையேறப்பெற்ற முத்துக்கள் சீஷத்துவ பாடம்  11

  

பாவம், சட்டம் (ஷரீஆ) (2)


(பாவத்தையும், சட்டத்தையும் (ஷரீஆ) குறித்து இறைவன் என்ன கூறுகின்றான்?)

பாவத்தின் ஆரம்ப மூலம்

மனிதன் முதல் முதலில் பாவம் செய்யும்போது, அவன் சர்ப்பத்தால் (ஷைத்தான், இப்லீஸ்) தூண்டப்பட்டான், வஞ்சிக்கப்பட்டான். மனிதன் ஷைத்தானுக்கு செவிக் கொடுக்கவும், ஏற்கனவே அவனுக்குள் இருந்த இறைவனுடைய வார்த்தைக்கு எதிராக ஷைத்தானின் வஞ்சகமான வார்த்தைகளை தனக்குள் ஏற்று அவற்றின்படி செய்யவும் விருப்பம் கொண்டான். ஷைத்தானைக் குறித்து ஈஸா அல்மஸீஹ் பின்வருமாறு கூறினார்:
அவன் (ஷைத்தான்) ஆரம்பம் முதல் கொலை பாதகனாய் இருக்கின்றான், அவன் சத்தியத்தின்படி நடப்பதில்லை, அவனுக்குள் சத்தியம் இல்லை, அவன் பேசும்போது, அவனுடைய சொந்த மொழியாகிய பொய்யையே பேசுகின்றான். அவன் பொய்யனும், பொய்க்கு பிதாவுமாய் இருக்கின்றான். (யோவான் 8:44).

மேற்கண்டவற்றை கூறுவதற்கு முன்பாக ஈசா கீழ்ப்படியாத யகூதிகளைப்பார்த்து:
நீங்கள் உங்கள் பிதாவாகிய தீயவனுக்கு சொந்தமானவா;கள்; எனவே அவனுடைய ஆசைகளை நிறைவேற்றவே விரும்புகின்றீர்கள் என்று கூறினார்.”

ஒவ்வொரு பாவியும் ஷைத்தானுக்கு அடிமையாக இருக்கின்றான் (ரோமா; 6:16). பாவத்தால் முற்றிலும் கேடான நம்முடைய மனதில் ஷைத்தான் செயல்புரிவதற்கு ஒரு உறைவிடம் இருக்கின்றது என்பதை மறந்து விடாதீர்கள்.

சோதிக்கப்படும்போது, இறைவன் என்னை சோதிக்கின்றான் என்று ஒருவனும் சொல்லாதிருப்பானாக. இறைவன் தீயவற்றால்; சோதிப்பதில்லை, ஆனால், ஒவ்வொரு மனிதனும் அவனவன் தன் தன் சுய ஆசை இச்சையினால் சிக்குண்டு சோதிக்கப்படுகின்றான். பின்பு அந்த இச்சையானது அவனுக்குள் கருக்கட்டி பாவத்தை பிறப்பிக்கின்றது, பாவம் நன்றாக அவனுக்குள் வளரும்;போது, அது அவனுக்கு மரணத்தை பிறப்பிக்கின்றது. (யாகூபு 1:13-15).



பாவத்தின் பிரதிபலன்

·         பாவம் எம்மை இறைவனிடமிருந்து பிரிக்கின்றது (ஏசாயா 59:2)
·         பாவம் நமது துஆவை பிரயோசனமற்றதாக்குகின்றது (மீகா 3:4; ஏசாயா 1:15; 59:2-3)
·         பாவம் சரீர பிரகாரமாகவும், ஆவிக்குரிய ரீதியாகவும் நம்மை மரணமடையச் செய்கின்றது (ரோமா; 6:23; எபேசியர் 2:1. 4 லூக்கா 15:24. 32)
·         பாவம் நம்மை சுவர்கத்திற்கு செல்லவிடாது தடுக்கின்றது. (1கொரிந்தியர் 6:9-10; கலாத்தியர் 5:19-21; எபேசியர்; 5:5:5; வெளிப்படுத்தல் 21:27).
·         பாவம் மனிதனை அவன் இருக்கவேண்டிய தரத்திலிருந்து குறைந்த நிலைக்குள்ளாக்கி, பேராசைக்கும், பாவ இச்சைகளுக்கும், சுய நலத்திற்கும் அவனை அடிமைப் படுத்துகின்றது.
·         பாவம் மனிதனிடத்திலுள்ள அவனுடைய சுத்த மனசாட்சியை மெய்யான மகிழ்ச்சியை திருப்தியை திருடுகின்றது.  

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?