குலாமன் ஸகிய்யா (பரிசுத்த குமாரன்)
அன்புள்ள சகோதரன் ஜலால்டீன் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்
தாங்களின் கடிதம் கிடைத்து இரண்டு வாரங்களாகியும் பதில் போடாமைக்காக
முதலில் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். எந்த சாட்டுப்போக்கும் சொல்ல விரும்பவில்லை.
நீங்கள் என்னை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
உங்கள் பதில் கடிதத்தில் சில கேள்விகளை மிகவும் தெளிவாக கேட்டிருந்தீர்கள்.
நேரில் சந்தித்து பதில் அறிய விரும்புவதாகவும் அதுவே சிறந்த வழியென்றும் சொல்லியிருந்தீர்கள்.
உங்கள் எதிர்ப்பார்ப்பை நான் மதிக்கிறேன். சூழ்நிலை காரணங்களால் தற்பொழுது என்னால்
சந்திக்க முடியாத நிலையில் உள்ளேன். எனினும் எனது சகோதரர் ஒருவரையாவது நீங்கள் சந்திக்க
ஏற்பாடு செய்கிறேன். பதில் கடிதத்தில் உங்களை தொலைபேசி இலக்கத்தை எழுதியனுப்பினீர்களானால்
உதவியாக இருக்கும்.
நீங்கள் ஈஸா அல் மஸீஹ்வை நம்புவது எனக்கு மிகவும் சந்தோஷத்தை
தருகிறது. அவருடைய அர்ப்பணிப்பு எப்படியானது என்று கேட்டிருந்தீர்கள். அதனை பின்வரும்
கதைக்கூடாக விளங்கிக்கொள்ளலாம்.
பாசமான அண்ணன் தம்பி இருவர், தம்பி ஒரு தவறு செய்ய,
தகப்பன் கோபத்தோடு தண்டிக்கவர,
தானே அந்த தவறை செய்ததாக அண்ணன் ஒப்புக்கொண்டு தண்டனையும் பெறுகிறான்.
அண்ணனுடைய அர்ப்பணிப்புக்கூடாக ஓரளவு ஈஸாவின் அர்ப்பணிப்பை
புரிந்துகொள்ளலாம்.
ஈஸா அல் மஸீஹ், தான்
துன்யாவுக்கு அனுப்பப்பட்ட காரணத்தை ஒரு உவமைக்கூடாக இவ்வாறு தெளிவுபடுத்தினார்:
33. வேறொரு உவமையைக் கேளுங்கள்: வீட்டெஜமானாகிய ஒரு
மனுஷன் இருந்தான், அவன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை நாட்டி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாகவிட்டு, புறதேசத்துக்குப் போயிருந்தான்.
34. கனிகாலம் சமீபித்தபோது, அதின் கனிகளை வாங்கிக்கொண்டுவரும்படி தன் ஊழியக்காரரைத்
தோட்டக்காரரிடத்தில் அனுப்பினான்.
35. தோட்டக்காரர்அந்த ஊழியக்காரரைப்பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலைசெய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.
36. பின்னும் அவன் முந்தினவார்களிலும் அதிகமான வேறே ஊழியக்காரரை
அனுப்பினான்; அவர்களையும்
அப்படியே செய்தார்கள்.
37. கடைசியிலே அவன்: என் குமாரனுக்கு அஞ்சுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான்.
38. தோட்டக்காரர் குமாரனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி; இவனைக் கொன்று, இவன் சுதந்தரத்தைக் கட்டிக்கொள்வோம் வாருங்கள்
என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு;
39. அவனைப் பிடித்துத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளிக் கொலைசெய்தார்கள். (இன்ஜீல் மத்தேயு 21:33-39)
இந்த பகுதி ஈஸா அல் மஸீஹ் தன்னுடைய மரணத்தைக்
குறித்து தனது சஹாபாக்களுக்கு தெளிவுபடுத்திய பகுதியாகும்.
திராட்சைத் தோட்டம்
உலகத்தையும், ஊழியக்காரர் என்பது முன்னைய நபிமாரையும், குமாரன்
என்பது ஈஸா அல் மஸீஹ்வையும் குறிக்கும்.
குமாரன் என்பதை ஏற்க நீங்கள்
விரும்பினாலும் உங்கள் உள்ளம் இடங்கொடுக்காது என்று நினைக்கிறேன். இறைவனுக்கு மகனா? என்ற
அதிர்ச்சி ஏற்படுவது இயல்பு.
“நான் உனக்கு பரிசுத்த குமாரனை பரிசளிப்பதற்காக (வந்த) உமது இறைவனின்
தூதன் என்று அவர் கூறினார்.” (குர்ஆன் 19:19)
மர்யமுக்கு ஜிப்ரீல் கூறுவதாக பதிவாகியுள்ள குர்ஆன் வசனம் இது. “குலாமன்
ஸகீய்யா” என்று அரபியில் உள்ளது.
அரபுமொழி தெரிந்த யாராவது இருந்தால் ‘குலாம்’ என்றால் என்ன என்றும்
‘ஸகீய்யா’ என்றால் என்ன என்றும்
தனித்தனியாக கேட்டுவிட்டு பின்பு இரண்டையும் சேர்த்து கேளுங்கள்.
இறைகுமாரன் எனும்போது இறைவனுக்கு
பிறந்த மகன் என்று அர்த்தமல்ல. இறைவார்த்தையாகிய கலிமதுல்லாஹ் இந்த துன்யாவுக்கு வந்த
போது மனிதமொழியால் அடையாளமிடப்பட்டு, கூப்பிடப்பட்ட விதம்தான் இறைகுமாரன் என்பதாகும்.
இப்பொழுது எனக்கு நாயாக மாறவேண்டும் என்று
வைத்துக்கொள்ளுங்கள். நான் நாய் போன்று உருமாறினால் என்னை எப்படி கூப்பிடுவீர்கள்.
நாய்புத்திரன் அல்லது நாய்மனிதன் என்றுதானே கூப்பிடுவீர்கள். நாயாக மாறினாலும் நான்
மனிதன் என்பதை மறுக்கமாட்டீர்கள் அல்லவா?
இப்படித்தான் இறைவனின் வார்த்தை மனிதனாக
வந்தபடியால் அந்த வார்த்தையை இறைகுமாரன் என்று அழைக்கின்றனர். குர்ஆன் ‘கலிமதுல்லாஹ்’ ‘ரூஹுல்லாஹ்’ என்று
அழைக்கின்றது. ஆகவே தகப்பன் மகன் என்று விளங்கிக்கொள்ள தேவையில்லை.
அடுத்து இறைவார்த்தை ஏன்
மனிதனாக வர வேண்டும்? எனும் கேள்வி எழும்பலாம். அல்லாஹ்வுடைய
ஆற்றல் ‘தான் நாடியதை
தன்னால் செய்ய முடியும்’ எனும் சத்தியத்தை
நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அல்லாஹ்வால்
அது முடியாது, இது முடியாது என்று சொல்வதற்கு மனித அறிவு எம்மாத்திரம்?.
இறைவார்த்தை மனிதனாக வந்ததால் நான் பெற்ற பயன்கள்சில:
· நான் பசியாயிருந்தால் ஈஸா
எனது பயியை உணர்வார்.
· நான் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கும் போது ‘நானும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தேன், உனது பிரச்சினையை என்னால் புரிந்துகொள்ளமுடியும்’ என்று
கூறுகிறார்.
· முழு பிரபஞ்சத்தின் அதிபதியான அவர் ஒரு ஏழை குடும்பத்தில்
பிறந்து, வளர்ந்தது எனது எல்லாவித கஷ்டங்களையும் அவர் அறிவார்
எனும் நம்பிக்கையை எனக்கு தருகிறது.
இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம். ஏன் மனிதனாக வந்தார் எனும்
கேள்வியை கேட்க எனக்கு தகுதியில்லை. அதனால் ஏற்பட்ட நன்மைகளை அனுபவிப்பதோடு, அவர் சொன்ன கட்டளையை
பின்பற்றுகிறேன். அதுதான் ஈஸா அல் மஸீஹ் என்னை நேசிப்பது போன்று நான் உங்களை நேசிக்கவேண்டும்.
அந்த கடமையைதான் இந்த கடிதத்திற்கூடாக நான் செய்கின்றேன்.
தொடரும் கடிதங்களில் ஏனைய
சந்தேகங்களுக்குமான பதில்களை நாங்கள் ஆராய்வோம். உங்கள் விமர்சனங்களையும் கருத்துகளையும்
விரும்பிவரவேற்கின்றேன். தொடர்ந்தும் எங்களுக்கு எழுதுங்கள். கூடிய சீக்கிரம் எமது
சகோதரர் ஒருவர் உங்களை சந்திக்க ஏற்பாடு செய்கின்றேன்.
“யா அல்லாஹ் எங்களுக்கு நேரான வழியை காட்டுவாயாக” ஆமீன்
இப்படிக்கு
இறைநேசன்
சகோ,
ReplyDeleteஇயேசுவை பற்றிய தங்கள் நம்பிக்கை என்ன? அவர் சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்தார் என நம்புகின்றீர்களா?
சகோதரரே, இந்த தளத்தில் எனது சாட்சியைதான் எழுதியுள்ளேன். அதில் உங்களுக்கு புரிந்துகொள்ளலாம் எனது ஈமான் என்ன என்பதை.
Deleteஇந்த கேள்விக்கான பதில்கள் தொடரும் கட்டுரைகளிலும் இடம்பெறும்.
நன்றி.
கர்த்தருக்கே மகிமை... மிகவும் அருமை பிரதர்..
ReplyDelete