பாவம், சட்டம் (ஷரீஆ) (1)


விலையேறப்பெற்ற முத்துக்கள் சீஷத்துவ பாடம்  10




பாவம்,  சட்டம் (ஷரீஆ)        (1)

(பாவத்தையும், சட்டத்தையும் (ஷரீஆ) குறித்து இறைவன் என்ன கூறுகின்றான்?)

1.        பாவத்தைக் குறித்து இறைவன் என்ன கூறுகின்றான்?

இப்பொழுது நாங்கள், இந்த துன்யாவில் காணப்படும் துக்கம், வியாதி அனைத்தும் எங்கிருந்து வருகின்றது என்று கண்டடைய ஆரம்பித்திருக்கின்றோம். ரோமா் 5:12இல் வாசிக்கும் வண்ணம் ஆதம் நபியின்  கீழ்ப்படியாமை நம் ஒவ்வொருவரையும் பாதித்திருக்கின்றது.

ரோமர் 5:12; ஒரு மனிதனுக்கூடாக பாவமும், பாவத்திற்கூடாக மரணமும் உலகத்தில் பிரவேசித்து, இவ்விதமாய் எல்லோரும் பாவம் செய்தபடியால், எல்லோருக்கும் மரணம் ஏற்பட்டது

நம் ஒவ்வொருவருக்கும் பாவத்தோடு பிரச்சினை இருக்கின்றது. எனவே, பாவம் என்றால் என்னவென்று பார்ப்போம்:

பாவத்தின் தன்மை

சட்டம் (ஷரீஆ) இறைவனின் தெய்வீக தராதரங்களில் தங்கியிருக்கின்றது. அது மனிதனை இறைவனின் சாயல் என்ற ஒழுக்கநெறிக்கு உரியவனாய் இருக்கும்படி கோருகின்றது. பரிபூரணமல்லாத, பரிபூரணத்திற்கு குறைவான எதுவும் பாவமாய் இருக்கின்றது. அதை குறித்து புனித கிதாப்பாகிய இறைவேதம் பின்வருமாறு கூறுகின்றது

பாவம் செய்யும் ஒவ்வொருவரும்  (ஷரீஅத் சட்டத்தை) மீறுகிறார்கள். உண்மையில், சட்டத்தை மீறுவது பாவம்” (யோவன் 3:4).

எல்லா குற்றச் செயல்களும் பாவமே…” (1யோவான் 5:17)

யாதொருவன் ஒன்றை நன்மை என்று அறிந்தான் என்றால் அவன் அதை கட்டாயமாகச் செய்யவேண்டும், அப்படி அவன் அதை செய்யாதப் பட்சத்தில் அது பாவமே (யாகோபு 4:17).

பாவம் என்பது எம்மை தீமைக்கு அல்லது நல்ல செயல்களை செய்யாதிருத்தலுக்கு வழிநடத்தும். வெறும் இறைவனுக்கு கீழ்ப்படியாமை மாத்திரமல்ல, அதுதீமையான இருதயத்திலிருந்துவரும்தீமையான சிந்தனைகளோடுஆரம்பிக்கின்றது.

 மனிதனுக்குள் இருந்து வெளியில் வருவதே மனிதனைதீட்டுப்படுத்துகின்றதுமனிதனின் உள்ளத்திலிருந்து தீமையான சிந்தனைகளும், பாலியல் சீர்கேடுகளும், களவும், கொலைவெறியும், விபச்சாரமும், பேராசையும், பகைமையும், வஞ்சகமும், காம எண்ணங்களும், பொறாமையும், அவதூறும், அகந்தையும், மதியீனமும் வெளிவருகின்றது.” என்று ஈஸா அல்  மஸீஹ் கூறினார் (மாற்கு 7:20-22).
பாவமே இறைவனிடமிருந்து தன்னை அந்நியப் படுத்திக் கொண்ட மனித இனத்தின்பலன்ஆகும் (கலாத்தியா; 5:19-21). இதினிமித்தம் மனிதன் இறைவனில் அன்புகூராமலும், அவனுக்கு பயப்படாமலும், மரியாதைக் கொடாமலும், அவனுடைய (எண்ணத்திற்கு) மதிப்பளிக்காமலும் இருக்கின்றான். எல்லா மனிதரும் பாவ உள்ளத்தோடுதான் பிறந்திருக்கின்றனர் (ஸபூர் 51:5). ஆகையால்தான் நாம் அனைவரும் பாவத்திற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றோம்:

     “ஒருகாலத்தில் நாமும் அவா்களைப்போல (இன்று இறைவனண்டை வராதிருக்கின்ற மக்களைப்போல), நமது பாவ சுபாவத்திற்கும், அதன் ஆசை இச்சைகளுக்கும், அதன் சிந்தனைகளுக்கும் ஈர்க்கப்பட்டு, அவற்றை பின்பற்றி வந்தோம். அதினால் இன்று அவர்கள் இருப்பதுபோல, நாமும் சுபாவத்தினால் இறைவனுக்கு பகைஞராய் இருந்தோம் (எபேசியா; 2:3).

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பாவம் நமக்குள்ளே பாவ உள்ளத்தை உருவாக்குகின்றது. ஆகையால்தான் நாம் அதன் பிரதிபலனை அனுபவிக்கின்றோம்.

) பாவத்தின் வேர்

எல்லா பாவத்தினதும் அடிப்படை சுயநலம், இறைவனை நேசிப்பதற்கும், அவனுக்கு கீழ்ப்படிவதற்கும் பதிலாக மனிதன் தன்னையே நேசித்து தனது காரியங்களையே செய்ய அவற்றிற்கு கீழ்ப்படிகின்றான். பாவம் சுய அன்பு, சுய சித்தம், சுய சுவாரஸ்யம் எனும் சுயத்தின் உயரிய தெரிவாய் இருக்கின்றது. ஒருவன் நல்ல செயல்களை செய்து கொண்டே பாவம் செய்துக் கொண்டிருக்க முடியும். அநேகநல்ல செயல்கள்சுய அன்பில் ஆரம்பித்துஇ அதை செய்பவா; தனது சுய நன்மைக்காகவே இதை செய்கின்றவராய் இருக்கின்றார். அப்படிப்பட்ட நல்ல செயல்கள் பிரயோசனமற்றவை என்று ஈசா மஸீஹ் கூறினார்                (மத்தேயு 6:1-8).

நம்முடைய எல்லா நல்ல செயல்களும் இறைவனின் பார்வையில் அழுக்கான கந்தைத் துணியாக இருக்கின்றன என்று இறைவன் ஏசாயா நபி மூலம் உரைத்திருக்கின்றான் (ஏசாயா 64:6). நம்முடைய நல்ல செயல்கள் அதிகமாய் நமது பெருமைக்காக செய்யப்படுகின்றதாய் இருக்கின்றபடியால், அவை பாவம் என்று அர்த்தப்படுகின்றன. நமது பாவங்களை இறைவன் அவனது இரக்கத்தால் மன்னிக்க வேண்டும் என்று நினையாமல், இப்படிப்பட்ட நல்ல செயல்களால் நாம் இறைவனிடமிருந்து நமது பாவத்திற்கான தௌபாவை சம்பாதித்துக்  கொள்ள முடியும் என்று நினைக்கின்றோம். நாம் நம்முடைய முழு உள்ளத்தால், முழு ஆத்மாவால், முழு மனதால் இறைவனை நேசிக்க ஆரம்பித்தால் (மத்தேயு 22:37; உபாகமம் 6:5) மாத்திரமே நமது சுய அன்பு, சுய சித்தம், சுய ஆர்வம் என்பவைகள் குறைந்து நம்மேல் இருக்கும் பாவத்தின் ஆதிக்கம் வலிமையிழக்க ஆரம்பிக்கும்.

எனவே, அன்புதான் சட்டத்தை (ஷரீஆவை) நிறைவேற்றுகின்றதாய் இருக்கின்றது” (ரோமர் 13:8-10; கலாத்தியர் 5:14; யோவான் 7:18; 1கொரிந்தியர் 5:15; கலாத்தியர் 2:20-21).

பாவமானது இறைவனுக்கு முன்னுரிமைக் கொடுத்து அவனை நேசிப்பதற்குப் பதிலாக சுயத்தை நேசிப்பதற்கு தெரிவு செய்யப்படும் அடிப்படையானதும், நேர்மறையானதும் அல்லது விருப்பமுள்ள தெரிவாயும் இருக்கின்றது. இறைவனை தனது வாழ்வின் மையமாகக் கொண்டு, நிபந்தனையின்றி தன்னை இறைவனுக்குச் சரணடையச் செய்வதற்குப் பதிலாக பாவியான மனிதன் தனது வாழ்விற்கு தன்னையே மையமாகக் கொண்டு தன்னை இறைவனுக்கு எதிரியாக்கி, தன்னுடைய சுய விருப்பங்களை தனது உயரிய செயலாக்கி,  தனது சுய சித்தத்தை உயரிய ஆளுநராக்குகின்றான்

). முழு துன்யா மக்களும் பாவிகள்

பாவம் உலக ரீதியானது, முழு உலகிலுள்ள அனைத்து மனித இனமும் பாவத்தின் கீழ் இருக்கின்றது (ரோமா; 3:22). சிலர் மற்றவர்களைவிடவும் மிக மோசமாகவும், பகிரங்கமாகவும் பாவம் செய்வர். ஆனால், மற்றவர்கள் அப்படி செய்யாவிட்டாலும் தங்கள் மனம், உள்ளம், சிந்தனை, உணர்வு என்பவற்றால் மற்றவர்களுக்கு விளங்காமலேயே பாவம் செய்கின்றவர்களாகதான் இருக்கின்றனர். எனவே, பாவம் எல்லோரையும் இறைவனிடமிருந்து பிரித்திருக் கின்றது. இதற்குள் சகல மனித இனத்தவரும் அடங்குவர்.

·         பாவம் செய்யாதவர் ஒருவரும் இல்லை…” (1இராஜாக்கள் 8:46)
·         “…இறைவனே உனக்கு முன்பாக நீதிமான் ஒருவனும் இல்லை” (சங்கீதம் 143:2)
·         நான் சுத்தமாய் இருக்கின்றேன், எனக்குள் பாவம் இல்லை என்று யாரால் கூறமுடியும்?” (நீதிமொழிகள் 20:9)
·         எல்லோரும் பாவம் செய்து இறைவனின் மகிமையற்றவர்களாய் இருக்கின்றனா்” (ரோமா; 3:23)
·         நமக்குள்ளே பாவம் இல்லை என்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கின்றவர்களாய் இருப்போம். சத்தியம் நமக்குள்ளே இராது” ( 1யோவான் 1:8)

முதல் மனிதனாகிய ஆதம் நபி முதல் பாவத்தை செய்தவா் (ஆதியாகமம் 3:16-19; குர்ஆன் சூறா 2:36; 7:22-23). எல்லா நபிமார்களும்கூட பாவிகள் என்று புனித கிதாப்பாகிய இறைவேதமும் குர்ஆனும் கூறுகின்றது.

·         இப்றாஹீம் நபி பாவம் செய்தார்  (ஆதியாகமம் 12:9-20; சூறா 26:82)

·         மூஸா நபி பாவம் செய்தார்   (யாத்திராகமம் 2:12; உபாகமம் 32:51; சூறா 28:15-16)

·         யூனுஸ் நபி பாவம் செய்தார்     (யோனா 1:1-12; சூறா 37:142)

·         தாவூது நபி பாவம் செய்தார்   (2சாமுவேல் 11:1-12; சூறா 38:24-25)

·         குர்ஆனின் கூற்றுப்படி முஹம்மது நபிகூட இறைவனிடம் பாவ மன்னிப்பு (தௌபா) கேட்கும்படி கூறப்பட்டார் (சூறா 47:19; 48:1-2)
·         ஆனால், ஈஸா ஒருவரே பாவமற்றவராய் இருக்கின்றார். அவா் பாவம் அறியாதவராய் இருந்தார். (2கொரிந்தியா; 5:21). அவர் பாவம் செய்யவில்லை  (1பேதுரு 2;2:21).

·         அவர் பாவமற்றவராய் இருந்தார் (எபிரேயா; 4:15).  (இந்த வேதாகம வசனங்களோடு குர்ஆன் சூறா 19:19யும் வாசியுங்கள்).




பரீட்சை: 10

1.        பாவம் முதலில் யார் யாருக்கு இடையில் பிரிவினையை  ஏற்படுத்தியது?
2.   பாவம் மனிதனுக்கும், மனிதனுக்கும் இடையில் என்னத்தை ஏற்படுத்தியது?
3.         இன்று இந்த துன்யா இந்த அளவு சீர்கெட்டு போயிருப்பதற்கு காரணம் என்ன?


Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?