புனித இறைவேதம் எம்மை வந்தடைந்த வரலாறு


விலையேறப்பெற்ற முத்துக்கள் சீஷத்துவ பாடம் - 3

புனித இறைவேதம்  (3)

(புனித இறைவேதம் எம்மை வந்தடைந்த வரலாறு)

யாதொருவர் ஒரு பொக்கிஷம் அடங்கிய பெட்டியை கண்டுபிடிக்கும்பொழுது அதன் வெளித்தோற்றம் எவ்வாறு இருக்கின்றது என்று மாத்திரம் பார்த்தால் போதாது. அந்த பெட்டிக்குள்ளே எவ்விதமான பொக்கஷம் அடங்கியிருக்கின்றது என்பதை பார்க்கவேண்டுமானால், அவர் அந்தப் பெட்டியை திறக்க வேண்டும். புனித வேதாகமத்திற்கும் இது பொருந்தும். இவ்வளவு நேரம் நாம் இப் பொக்கிஷ பெட்டியின் வெளித்தோற்றத்தைப் பார்த்தோம். இப்பொழுது உங்களுக்காக அந்த பெட்டிக்குள் இருக்கும் பொக்கிஷங்களை நீங்கள் கண்டடையும்படி நாங்கள் அதை திறக்கப் போகின்றோம். அதை கண்டடைவதற்கூடாக நீங்கள் வளமடைவீர்கள் என்பதை குறித்து நாங்கள் நிச்சயமுடையவர்களாய் இருக்கின்றோம்.

ஒரு பிரதான செய்தி


நீங்கள் உங்கள் இறைவேதத்தை வாசிக்கும்பொழுது ஒரு வித்தியாசமான உண்மையை அவதானிப்பீர்கள். எழுதுவதற்கு பதினைந்து நூற்றாண்டுகளும், நாற்பதுக்கும் அதிகமான எழுத்தாளர்களாலும் அது எழுதப்பட்டிருந்த போதிலும், அது குறிப்பிடத்தக்க ஒற்றுமையை கொண்டிருப்பதே அந்த உண்மையாகும். இது பல்வேறுப்பட்ட எழுத்துக்களின் ஒன்றுத்திரட்டல் இல்லை. மாறாக ஒருவருடைய எழுத்தை மற்றவர் தொடரும் புத்தகத் தொடராகும். வேதாகமத்தின் அனைத்து புத்தகங்களும் பாவத்தின் பாரதூரமான விளைவுகள், இறைவனின் மகத்துவமான கிருபையின் அன்பு எனும் இரண்டு தொடர்ச்சியான பிரதான தலைப்புகளையே கொண்டிருக்கின்றன. ஆனால் நாங்கள் உண்மையாக கூறுவோமேயானால் இதன் எழுத்தாளர்கள் ஒருவரையொருவர் முகமுகமாக அறிந்திருக்கவில்லை. இறைவேதம் பின்வரும் இரகசியங்களை வெளிப் படுத்துகின்றது:

உங்கள் கையிலுள்ள வேதாகமத்தை புதிய ஏற்பாட்டில் 2தீமோத்தேயு 3:16க்கு திருப்பிக்கொள்ளுங்கள்.


இறை வார்த்தைகள் அனைத்தும் இறை ஏவுதலினால் அருளப்பட்டிருக்கிறது,  அவைகள் போதனைக்கும், கடிந்துக்கொள்ளுதலுக்கும் சீர்த்திருத்தலுக்கும் நீதியில் பயிற்சியளிப்பதற்கும் பிரயோசனமுள்ளவைகளாய் இருக்கின்றது.”

புனித வேதாகமம் இறை ஏவுதலால் ஆனது.

இறைவன் தன்னை தன்னுடைய சிருஷ்டியிலிருந்து பிரித்து, அவற்றோடு எந்த தொடர்பும் இல்லாமல், மௌனமாய் இருப்பவனல்ல. இறைவன் தன்னுடைய சித்தத்தை மனிதருக்கு வெளிப்படுத்தியிருக்கின்றான். புனித வேதாகமம் இறைவனுடைய வார்த்தையை உள்ளடக்கி யிருக்கின்றது. இறைவன் தன்னை வெளிப்படுத்தவும் அவனுடைய நோக்கத்தையும் சித்தத்தையும் எமக்கு அறிவிக்கவும் அவனுடைய இந்த வார்த்தையை பாவிக்கின்றான். இறைவனுடைய இந்த வஹியை குறித்த அடிப்படை அறிவில்லாமல், ஒருவரும் இறைவனுடைய சித்தத்தை செய்யமுடியாது. எவ்வாறு இறைவன் தன்னுடைய சித்தத்தை வெளிப்படுத்து கின்றான்? மேலே நீங்கள் பார்த்த வசனத்தில் இந்த பரிசுத்த வார்த்தைகளை எழுதிய ஒவ்வொரு எழுத்தாளரையும் (காபிள்கள்இறைவன் அகத்தூண்டினான் என்பதை நீங்கள் கவனித்தீர்கள். சொல்லர்த்தமாக கூறுவோமென்றால் அவன் தெரிந்துகொண்ட ஒவ்வொரு செய்தியாளரின் உள்ளத்திற் குள்ளும் அவன் அவனுடைய வார்த்தையைஊதினான்என்று பொருளாகும். உங்களுக்கு இது ஒரு புதிய விஷயமல்ல குர்ஆனின் அடிப்படை போதனையில் இது ஒரு அம்சமாக இருக்கின்றது. (சூறா 2:136, 5:47-48, 10:95, 21:7, 29:46).

பரீட்சை

1.        அகத்தூண்டுதல் (இறை ஏவுதல்) என்பதன் அர்த்தம் என்ன? ஒரு சிறு குறிப்பு எழுதுக.

2.        2தீமோத்தேயு 3:16லுள்ள இறை வார்த்தைக்கான நோக்கங்களில் மூன்றை எழுதுக

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?