பாவத்தையும், சட்டத்தையும் (ஷரீஆ) குறித்து இறைவன் என்ன கூறுகின்றான்?)


விலையேறப்பெற்ற முத்துக்கள் சீஷத்துவ பாடம்  12

பாவம், சட்டம் (ஷரீஆ)    (3)

(பாவத்தையும், சட்டத்தையும் (ஷரீஆ) குறித்து இறைவன் என்ன கூறுகின்றான்?)

இறைவனின் சட்டம்

இறைவனின் சிருஷ்டிப்பாகிய இந்த முழு துனியாவையும் பாவம் மோசமடையச் செய்திருப்பதை நாம் பார்க்கும் போது  (ஆதியாகமம் 3:17-19),  பாவம் எப்படிப்பட்டது, அதன் தாற்பரியம் எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்கின்றோம். இறைவன் தனது சட்டத்தை எமக்குத் தந்திருக்கின்றான். அதிலிருந்து எமக்கு எது சரி, எது பிழை என்று அறிந்துகொள்ள முடியும். சட்டம் என்பது நடத்தையைக் குறித்த ஒரு நிரந்தரமான தராதரம் ஆகும். அதாவது சட்டம் நமது நடத்தை எத்தகையது என்று காண்பிக்கின்றது. நமது நடத்தை சரியானதா, பிழையானதா என்று ஷரீஆ காண்பிக்கின்றது. சட்டம் துனியாவை ஆளுகின்றது. அதாவது நட்சத்திரங்கள், கிரகங்கள், விஞ்ஞானம், கணிதம், உயிரியல் இன்னும் சிருஷ்டிப்பின் அனைத்தினதும் செயல்களை சட்டம்,  நியதி  ஆளுகை செய்கின்றது.

இந்தச் சட்டங்கள் இறைவனின் சிருஷ்டிப்பின் ஒரு பகுதியாக இருக்கின்றன. இந்த துனியாவிலுள்ள அனைத்து இன மக்கள் குழுவும், அவர்கள் பழைமைவாதிகளாய் இருக்கலாம், அபிவிருத்தியடைந்தவா்களாய் இருக்கலாம். யாராய் இருந்தாலும் சரி, அவர்கள் தங்களுடைய நாளார்ந்த விடயங்களை நடத்த சட்டம் அவசியமாகின்றது. இறைவன் மனிதனை ஒடுக்க அல்ல, மாறாக, அவன் தன்னை காப்பற்றிக்கொள்ளும்படி அவனுக்கு சட்டத்தைக் கொடுத்தான். அதாவது ஒரு விவசாயி ஒரு அபாயகரமான இடத்தில் தனது மந்தைகளை பாதுகாக்கும்படி அவற்றைச் சுற்றி வேலி போடுவதுபோல, மனிதனும் பாவத்திலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளும்படி இறைவன் மனிதனுக்கு சட்டத்தைக் கொடுத்திருக்கின்றான். அவனுடைய சட்டங்களுக்கு கீழ்ப்படிவது அனைத்து மனிதருக்கும் சமமான சந்தர்ப்பங்கள் இருக்கின்றது என்பதை உறுதிப் படுத்துகின்றது.

இறைவன் தனது சித்தத்தை வெளிப்படுத்துகின்றான்

1.         மனிதனின் மனசாட்சியில்

இறைவனின் சட்டத்தை எழுத்தில் பெறாத யகூதிகளற்ற மற்ற இனத்தார், எழுத்து மூல சட்டத்தில் கோரப்படுபவை தங்கள் இருதயங்களில், மனசாட்சியில் எழுதப்பட்டிருக்கின்றது என்று சாட்சி பகிர்வதோடு, அவர்களுடைய மனசாட்சி இப்பொழுது அவர்களை பாவிகள் என்று குற்றப்படுத்துகின்றது என்று ரோமர் 2:15; தீத்து 1:15 வசனங்கள் கூறுகின்றது.


2.         இறைவேதத்தில்

புனித கிதாப்பாகிய இறைவேதத்தில் இறைவனுடைய சட்டம் ஆண்டவனுடைய சட்டம் என்றும், மூஸா நபி அவர்களின் சட்டம் என்றும் அழைக்கப்படுகின்றது. காரணம் யாத்திராகமம் 20ம் அதிகாரத்தில் இறைவன் அதை மூஸா நபி மூலமே பனீ இஸ்றாயீல் மக்களுக்கு வழங்கினான். இந்த சட்டம் ஈஸா அல் மஸீஹ்வால் திரும்பவும் புத்துயிரளிக்கப்பட்டு, வியாக்கியானம் செய்யப்பட்டது (மத்தேயு 5ம் அதிகாரம் தொடங்க 7ம் அதிகாரம் வரை வாசியுங்கள்). இறைவனின் சட்டம் பத்து கட்டளைகளில் சாரம்சப்படுத்தப்பட்டுள்ளது. அது மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையிலுள்ள உறவு விவகாரங்களையும், மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் இருக்கும் உறவு விவகாரங்களையும் உள்ளடக்குகின்றது.

பத்துக் கட்டளைகள்

நாம் புனித கிதாப்பாகிய இறைவேதத்தில் வித்தியாசமான சட்டங்களை காண்கின்றோம். ஒழுக்கநெறி சட்டமானது மனித இனத்திற்கான இறைவனுடைய மாறாத நித்திய சித்தத்தைகொண்ட தரமான சட்டமாக இருக்கின்றது. இது தவிரவும் சடங்காச்சார சட்டங்களும் இருக்கின்றன. அவை இறை சமூகத்திற்கு கொண்டுவரப்படும் குர்பான்களை குறித்த சட்டங்கள். அவற்றைக்குறித்து லேவியராகமம் புத்தகத்தில் 1ம் அதிகாரம் தொடங்க 7ம் அதிகாரம் வரையுள்ள அதிகாரங்களில் வாசிக்கின்றோம். பழக்க வழக்கம் குறித்த சட்டங்கள். இந்த சட்டங்கள் சில சந்தா்ப்பங்களில் எது சரி, எது பிழை என்பதை விவரிக்கும் சட்டங்களாகும். இவற்றைக்குறித்து யாத்திராகமம் 21ம் அதிகாரத்தில் வாசிக்கின்றோம். ஒழுக்கநெறி சட்டங்கள் அனைத்தும் பத்துக் கட்டளைகளில் சுருக்கப்பட்டிருக்கின்றன.

அவை:

அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து உன்னை விடுவித்து வெளியில் கொண்டுவந்த இறைவனாகிய ஆண்டவன் நானே

1.         என்னையல்லாமல் உனக்கு வேறு தெய்வங்கள் இருக்கக்கூடாது

2.         வானத்திலும், பூமியிலும், தண்ணீருக்கு அடியிலும் எந்தவொரு விக்கிரகத்தையும் நீ உனக்காக உருவாக்கக் கூடாது. அவற்றை வணங்கவோ, தொழுதுக் கொள்ளவோ கூடாது.”

3.         ஒருவனும் இறைவனுடைய நாமத்தை வீணாக வழங்கினவனாய் இறைவனால் பிடிப்படாதப்படி, இறைவனுடைய நாமத்தை வீணிலே வழங்கக் கூடாது

4.         “ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசரிக்கவேண்டும் என்பதை ஞாபகம் வைத்துகொள். ஆறு நாட்களும் நீ உனது வேலைகளைச் செய். ஏழாம் நாள் உன் இறைவனுடைய தூய நாளான ஓய்வு நாள். அதில் நீயோ, உனது பிள்ளைகளோ, உனது வேலைக்காரனோ, வேலைக்காரியோ, உனது மிருகங்களோ, உன்னிடத்திலிருக்கும் அந்நியனோ ஒரு வேலையும் செய்யக்கூடாது.”

5.         “உனது இறைவன் உனக்கு அருளும் நாட்டில் நீ அதிக காலம் வாழ்ந்திருக்கும்படி நீ உன் தாயையும், உன் தகப்பனையும் கனம் பண்ணுவாயாக

6.         “கொலை செய்யாதிருப்பாயாக

7.         “விபச்சாரம் செய்யாதிருப்பாயாக

8.         “களவு செய்யாதிருப்பாயாக

9.         “உன் அயலானுக்கு விரோதமாக பொய்சாட்சி   சொல்லாதிருப்பாயாக

10.       “உன் அயலானின் வீட்டை இச்சியாதிருப்பாயாக. உன் அயலானின் மனைவியையோ, அவனுடைய வேலைக்காரனையோ, வேலைக்காரியையோ, அவனுடைய எருதையோ அவனுடைய வேறும் யாதொரு  பொருளையும் இச்சியாதிருப்பாயாக.”
            (யாத்திராகமம் 20:2-17)

இறைவனுடைய இந்த பத்து கட்டளைகளையும் ஈஸா அல் மஸீஹ் இரண்டு கட்டளைகளுக்குச் சுருக்கினார்:

1.         உன் இறைவனாகிய நாயனை உன் முழு உள்ளத்தாலும், உன் முழு ஆத்துமாவாலும், உன் முழு மனதாலும் நேசிப்பாயாக இதுவே முதல் மகா பரிதான கட்டளை.

2.         அதற்கு ஒத்ததான இரண்டாம்  கட்டளை, உன்னைப் போல் உன் அயலானை நேசி என்பதே”.
இறைவனுடைய சட்டங்களும், நபிமார்களின் வார்த்தைகள் அனைத்தும் இந்த   இரண்டு கட்டளைகளுக்குள் அடங்கும் என்று ஈஸா அல் மஸீஹ் கூறினார்.   (மத்தேயு 22:37-40).

நாம் ஷரீஆவை மீறினால்...

ஒருவர் இறைவனின் இந்த பத்து கட்டளைகளையையும் மேலேயிருந்து இறைவன் பிடித்திருக்கும், கீழே மனிதன் அதன் ஒரு முனையை பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய சங்கிலி கோர்வைக்கு ஒப்பிட்டார். அப்படியென்றால், அந்த சங்கிலி அறுந்து நாம் கீழே விழ அந்த சங்கிலியின் எத்தனை வலயங்கள் உடையவேண்டும்? ஒன்று உடைந்தால்கூட போதும் நாம் கீழே விழுந்துவிடுவோம். நாம் கீழே விழுவதற்கு எத்தனை முறை அந்த சங்கிலியை உடைக்கவேண்டும்? ஒருமுறை உடைத்தால் கூட போதும். இந்த உதாரணம் இறைவேதத்திலேயே நன்றாக தெளிவுப்படுத்தப்பட்டிருக்கின்றது: “ஒருவன் இறைவனின் சட்டங்களை கடைப்பிடிக்கிறேன் என்று சொல்லி பெருமையாகக் கூறியும், அதில் ஒரு சட்டத்தை மீறி நடந்தால்கூட அவன் இறைவனின் எல்லா சட்டங்களையும் உடைத்துப்போட்டளவு குற்ற வாளியாகவே இருக்கின்றான். (யாக்கூபு 2:10).

ஒரு நீதியான நியாயத்தீர்ப்பு வழங்கப்படுவதற்கு ஏற்ற ஒரு தராதரத்தை உருவாக்கவே இறைச் சட்டங்கள் கொடுக்கப்பட்டது. அது அதைவிட குறைந்த காரியத்திற்காகவும் அல்ல, அதைவிட கூடுதலான காரியத்திற்காகவும் அல்ல. சட்டங்கள் ஒருபோதும் ஒருவரையும் மன்னிக்கமுடியாது. அது ஒருபோதும் நியாயம் தீர்ப்பதும் இல்லை. ஆனால், சட்டங்களைக் கொண்டே இறைவன் நம்மை நியாயம் தீர்க்கின்றான். எனவே, சட்டங்களின் வெளிச்சத்தில் இறைவனுக்கு முன்பாக பாவியாக நிற்கும் மனிதன் சட்டங்களைக் கொண்டு ஒருபோதும் தனது உடைந்துப்போன உறவை இறைவனோடு புதுப்பித்துக் கொள்ள முடியாது.

ஆகையால், சட்டங்களைக் கடைப்பிடிப்பதற்கூடாக ஒருவரும் இறைவனுக்கு முன்பாக தன்னை நீதிமான் என்று கூறமுடியாது. சட்டங்கள் மூலம் நாம் பாவத்தைக் குறித்த அறிவை மாத்திரமே அடைகின்றோம்.” (ரோமர் 3;:20).        

இறைச் சட்டம் இல்லாதப் பட்சத்தில் பாவம் இன்னதென்று எதைக் கொண்டு நான் அறிவேன்?”   (ரோமா; 7:7).

இறைச் சட்டத்தைக்கொண்டு இறைவனின் பார்வையில் எது சரியென்று நாங்கள் அறிந்துகொள்ள முடியும். இறைவனின் சட்டங்களை கைக்கொள்ளும் முயற்சியாக நாம் இறைவனை எமது முதல் முக்கிய உத்வேகமாக்கிக் கொள்வோம் என்றால், நாம் இன்னும் மன்னிக்கப்படாதிருக்கின்ற நமது பாவங்களை மறப்பதற்கு தூண்டப்படுகின்றவர்களாய் இருக்கின்றோம். இறைவனுடைய பரிபூரண தராதரத்திற்கமைய இறைவனுடைய சட்டங்களை பரிபூரணமாய் கடைபிடிப்பது முடியாத காரியமா?.      

புனித கிதாப்பாகிய வேதாகமம் பின்வருமாறு கூறுகின்றது.

எங்களுக்குத் தெரியும் இறைச் சட்டங்கள் ஆவிக்குரியவை; ஆனால் நானோ ஆவிக்குரியவனல்ல, நான் பாவத்திற்கு அடிமையாக விற்கப்பட்டவன் (காரணம் நாம் அனைவரும் பாவத்தினிமித்தம் இறைவனுக்கு அந்நியர்களாய் இருக்கின்றோம்.). நான் செய்வது இன்னதென்று எனக்குத் தெரியாது. நான் செய்யவேண்டிய நல்ல காரியத்தை நான் செய்வதில்லை, நான் வெறுக்கின்ற தீமையையே நான் செய்கின்றேன்என்னுடைய பாவத் தன்மையினிமித்தம் எனக்குள் நல்லக் காரியங்கள் குடியிருக்கவில்லை என்று எனக்குத் தெரியும். நல்லதை செய்யவேண்டும் என்ற சிந்தனை எனக்கு இருக்கின்றது; ஆனால் என்னால், அதை நடைமுறைப்படுத்த முடியாதவனாய் நான் இருக்கின்றேன். எனவே, நான் விரும்புகின்ற நன்மையைச் செய்யாமல், நான் விரும்பாத தீமையே செய்து வருகின்றேன்.” (ரோமா; 7:14-19).

சட்டத்திற்கு எதிரான சட்டம்

நீங்கள் தொடர்ந்து புனித கிதாப்பாகிய இறைவேதத்தை வாசித்து கொண்டு போகும்போது, மேலே சொல்லப்பட்ட காரியத்திற்கான காரணம் என்னவென்பதைக் கண்டடைவீர்கள்.

ரோமர் 7:21-23வரை வாசியுங்கள்

இந்த பாவ சட்டம்ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருந்து செயல்பட்டு தீயவனால் கட்டுப்படுத்தப்படுகின்றது. அது என்னை பாவம் செய்ய கட்டாயப்படுத்துகின்றது. இறைவனுக்கு கீழ்ப்படிய விரும்பும் எனது மனதின் சட்டத்திற்கும்எதிராக என்னை பாவம் செய்ய தூண்டுகின்றது. இந்த பாவ சட்டமானது ஆதம் நபி அவர்களின்  பாவத்தினிமித்தம் இவ்வுலகில் பிறக்கும் அனைத்து மனிதரும் பிறப்பிலேயே சுவீகாரத்துக்கொண்டு வந்த பாவ சுபாவமாகும்.

பாவ மனித இயல்பானது இறைவனின் ஆவிக்குரிய காரியங்களுக்கு எதிராய் செயல் புரிகின்றது. அதேபோல், இறைவனின் ஆவிக்குரிய காரியங்களும் மனித பாவ தன்மைக்கு எதிராக செயல்புரிகின்றது. அவை ஒன்றுக்கொன்று நேர் எதிராய் இருக்கின்றது. ஆகையால் நீங்கள் செய்ய வேண்டியதை செய்ய விடாதப்படி அது தடைச் செய்கின்றது” (கலாத்தியா; 5:17).

இது ஒரு எதிப்பார்ப்பு இல்லாததா?

ஆகையால், இறைவனின் பரிசுத்த தராதரத்திற்கு இசைவான தூய இறைச் சட்டங்களை கைக்கொள்ள முயற்சிக்கையில் வேறு எதுவும் அல்ல, இதுவே நம்மை அதைரியப்படுத்துகின்றது. இறைவன் நம்முடைய நல்ல அமல்களை மாத்திரம் அல்ல பார்க்கின்றான் என்று ஈசா கூறினார். எம்முடைய சிந்தனைகளைக் கொண்டுகூட இறைவன் நம்மை குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்குகின்றான்.                                                                                                                                                                                                                                                                                                                                        

விபச்சாரம் செய்ய வேண்டாம் என்று சொல்லப்பட்டதை கேள்விப்பட்டிருக்கின்றீர்கள். ஆயினும், யாதொருவன் தன் உள்ளத்தில் ஒரு பெண்ணை இச்சையோடு பார்க்கின்றானோ, அவன் அவளோடு விபச்சாரம் செய்தாயிற்று என்று நான் உங்களுக்கு கூறுகின்றேன்.” (மத்தேயு 5:27-28).

இதற்குப் பின்பு எதிர்காலத்தில் இறைச் சட்டங்களை நாம் நன்றாக கடைப்பிடிக்க முயற்சிப்போம் என்று நாம் நினைத்தாலும் நம்மால் அதை அப்படிச் செய்ய முடியாது, காரணம், ஏற்கனவே நாம் அதை மீறி விட்டோம். நம்முடைய பாவ சுபாவத்தின் நிமித்தம் நாம் அதை மீறவே செய்வோம். இது, எமது வாழ்க்கைக்கான இறைவனின் அங்கீகரிப்பை நாம் ஒருபோதும் அடைய விடாது செய்கின்றது. நாம் ஏற்கனவே இறைவனின் நித்திய நியாயத்தீர்ப்புக்கு உட்பட்டவர்களாய் இருக்கின்றோம். மனித அளவில், உயரிய அறநெறிகளைக் கொண்டிருந்த பவுல் கூறியதுபோல நாமும் பின்வருமாறு கூறவேண்டியிருக்கின்றது: “எவ்வளவு தூயர் மிகுந்தவன் நான். இந்த மவுத்துக்கு ஏதுவான சரீரத்திலிருந்து என்னை விடுவிப்பது யார்?” (ரோமா; 7:24).

இறைவனுக்கு நன்றி உரித்தாகட்டும். இதற்கு பதிலை இறைவன் தனது வார்த்தையாகிய வேதாகமத்தில் கொடுத்திருக்கின்றான்.


பரீட்சை:

பின்வரும் கேள்விகளுக்கு பதிலளியுங்கள்:

.      இறைவன் ஏன் சட்டங்களை நமக்கு அருளினான் என்பதற்கு இரண்டு காரணங்களை குறிப்பிடுக.
.     நாம் சட்டங்களை மீறினவா;களாய் கருதப்படுவதற்கு எத்தனை இறைச் சட்டங்களை மீற வேண்டும்?
.       உங்களுடைய சொந்த பெலத்தால் இறைவனுடைய சட்டங்களை உங்களால் கைக்கொள்ள முடியுமா?
.        நம்முடைய பாவ தன்மை நம்மை எவ்விதம் பாதிக்கின்றது?

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?