நாம் ஏன் புனித இறைவேதத்தை இறைவார்த்தை என்று நம்பவேண்டும்? 5
விலையேறப்பெற்ற முத்துக்கள் சீஷத்துவ பாடம்: 5
புனித இறைவேதம் (5)
(நாம் ஏன் புனித இறைவேதத்தை இறைவார்த்தை என்று நம்பவேண்டும்?)
“இன்னும், நீங்கள் வேதத்தையுடையவர்களுடன் - அவர்களில் அக்கிரமமாய் நடப்பவர்களைத் தவிர்த்து, (மற்றவர்களுடன்) அழகிய முறையிலேயன்றித் தர்க்கம் செய்யாதீர்கள் . எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் உங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நாங்கள் ஈமான் கொள்கிறோம். எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே - மேலும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு, நடப்போர் (முஸ்லிம்கள்) ஆவோம்” என்று கூறுவீர்களாக.” சூறா 29:46, கூறுகின்ற வண்ணம் ஒரு முஸ்லீம் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இறைவன் வெளிப்படுத்தின கிதாப்புக்களின் அதிகாரத்தை கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.
இந்த கட்டளையானது சூறா 2:136ல் மேலும் விஸ்தரிக்கப்பட்டிருக்கின்றது. “(முஃமின்களே!) 'நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக.”
இப்பொழுது உங்களுக்கு குர்ஆன் குறிப்பிடும் அதே கிதாபுதான் இன்று கிறிஸ்தவர்களிடம் இருக்கின்றது என்று நான் எவ்வாறு அறிவேன்? இறைவனிடத்திலிருந்து உண்மையாகவே வெளிப்படுத்தல் வந்ததா இல்லையா என்று எப்படி எனக்கு தெரியும்? புனித இறைவேதம் எவ்வாறு இறைவனுடைய வார்த்தையாய் இருக்கின்றது? என்று சில கேள்விகள் எழலாம், அவற்றிற்கான பதிலை இன்று நாங்கள் உங்களுக்கு விஸ்தரிக்கட்டும்.
உண்மையான வஹீ (வெளிப்படுத்தல்) குறித்த பரீட்சை
நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு மேலாய் பலர் எழுந்து தங்களை இறைவனுடைய நபிமார்கள் என்று கூறினார்கள். அதிலே சிலர் சில உலகளாவிய மதங்களை ஸ்தாபித்தார்கள். இன்னும் சிலர் தொழுதுகொள்ளப்பட்டார்கள். இது எமக்கு எம்மோடு மிகவும் தொடர்புடைய ஒரு கேள்வியை எழுப்புகின்றது: மெய்யான சர்வ வல்லமையுள்ள உயிருள்ள இறைவனின் நபிமார்களுக்கும் பொய்யான வஞ்சிக்கின்ற நபிமார்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை நாம் எவ்வாறு கண்டுகொள்வது? என்பதே அந்த கேள்வியாகும். அந்த கேள்விக்கு பதிலை கண்டடைய வேதாகமம் எமக்கு உதவி செய்கின்றது:
உபாகமம் 18:21-22 வரையுள்ள வசனங்களை அவதானித்து வாசியுங்கள். “ரப்பு சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில், 22 ஒரு தீர்க்கத்தரிசி (நபி) ரப்பின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும்போனால், அது இறைவன் சொல்லாத வார்த்தை, அந்தத் தீர்க்கதரிசி (நபி) அதைத் துணிகரத்தினால் சொன்னான், அவனுக்கு நீ பயப்பட வேண்டாம்.”
நபித்துவம் என்பது பயான் (பிரசங்கம்) செய்வதை, கற்றுக்கொடுப்பதை விடவும் மேலானது என்பது மிகத் தெளிவாகும். அதேபோல் அது மக்களால் ஏற்றுக்கொள்ளப் படுவதை விடவும் அல்லது நல்நடத்தை என்று புகழப்படுவதை விடவும் மேலானது என்பதும் தெளிவாகும். உண்மையாக இறைவன் ஒரு செய்தியாளரை அனுப்பியிருப்பான் என்றால், அந்த செய்தியாளரின் செய்தியானது உண்மையாக இறை செய்திதான் என்பதை நிரூபிப்பதற்கு ஏதுவான ஆதாரத்தை வழங்கும்படி செய்தியாளர் எதிர்பார்க்கப்படுவார்.
ஒரு மதம் மெய்யான மதமென்பதை நிரூபிப்பதற்கு சில ஆதாரங்கள் காட்டப்பட வேண்டும் என்பது அந்த மதத்தின் ஒரு அத்தியாவசிய அம்சமாக இருந்த போதிலும், அநேக மதங்கள் இவ்வாறு ஆதாரம் வழங்குவதைக் குறித்து ஒரு போதும் கரிசனைக் கொண்டிருந்ததில்லை. அநேகமாய் ஈமான் என்பது உணர்வின் அடிப்படையில்தான் இருக்கின்றதே தவிர, உண்மையை அல்லது சத்தியத்தை அடிப்படையாய் கொண்டு இல்லாதிருக்கின்றது. செல்வாக்குள்ள தலைவர்கள் மனிதர்களின் மனங்களை ஆளுகைச் செய்யும் போக்கையுடையவர்களாய் இருக்கின்றார்கள். அவர்களுடைய இந்த போக்குக்கு உட்பட்டு அவர்களை பின்பற்றுகிறவர்களில் சிலர் குழப்பம் அடைந்தவர்களாய் காணப்படுகின்றார்கள். நாம் மேலே வாசித்த உபாகம கிதாபின் வசனங்களில் வஞ்சிக்கும் (போலி) நபிமார்களை அடையாளம் காணும், பொருட்டு அவர்களுக்கு எதிரான பரிசோதனைச் செய்யும்படி இறைவன் சில காரியங்களைத் தருவதை அவதானிக்கின்றோம். இந்த காரியங்கள் கூறப்பட்டு 700வருடங்களுக்கு பின்பு வாழ்ந்த நபி, ஏசாயா விக்கிரக (வழிபாடு) ஆராதனைக்காரர்களுக்கு எதிராக இந்த பரீட்சையை செய்ததிற்கூடாக இதன் உண்மைத்துவத்தை நிரூபித்து காட்டினார். '......வரும் காரியங்களை எங்களுக்கு அறிவியுங்கள், எதிர;காலம் என்னத்தைக் கொண்டிருக்கின்றது என்று எங்களுக்கு கூறுங்கள்”
(ஏசாயா 41:23). இதனுடைய அர்த்தம் என்னவென்றால், ஒரு மெய்யான நபி எதையும் கூட்டியோ குறைத்தோ சொல்லமாட்டான். உள்ளதை உள்ளவாறு சொல்லுவான் என்பதே. இறைவாக்குறைத்தல் என்றால், கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்பவைகளை குறித்த இறைவனின் சித்தத்தை வெளிப்படுத்தல் என்று பொருள்படும்.
எதிர்காலத்தைக் குறித்த தீர்க்கதரிசனம் நிறை வேறப்படுதல் ஒரு செய்தி உண்மையென்பதற்கு இறைவன் கொடுக்கின்ற ஆதாரமாகும். ஒரு நபி தீர்க்கதரிசனம் உரைக்கின்றபடியால் அவர் நபியாக இருக்கின்றார். எதிர்காலத்தைக்குறித்த ஒரு தீர்க்க தரிசனமானது நிச்சயமாக மனித நோக்குக்கு அப்பாற்பட்டதாய் இருக்கவேண்டியது கட்டாயம். அதேபோல் அந்தத்தீர்க்கதரிசனம் வெறும் சம்பவங்களோடு பொருத்தி பார்ப்பதற்கு போதிய விபரம் உடையதாய் இருக்கவும் கூடாது. நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு மேலாக இறைவன் தன்னுடைய செய்தியைக் கொண்டு அவனுடைய நபிமார்களை அகத்தூண்டியது மாத்திரமல்ல எதிர்காலத்தில் சம்பவிக்கப் போகும், காரியங்களைக்குறித்த தீர்க்க தரிசனங்களையும் அவர்களுக்கு வழங்கி அதற்கூடாக அவர்கள் அவனிடத்திலிருந்து வந்தவர்கள் என்பதை உறுதி செய்திருக்கின்றான்.
ஒரு நல்ல பரீட்சிப்புக்கு எதிர்காலத்தைக்குறித்த தீர்க்கதரிசனமானது அற்புதங்களை விடவும் மேலானதாய் இருக்கின்றது.
இறைவன் அற்புதங்கள் செய்யும்படி சில இறை மனிதர்களுக்கு வல்லமை அளித்திருக்கின்றான், உதாரணமாக சுகமாக்குவதற்கு, (2இராஜாக்கள் 5), மரித்த ஒருவரை உயிரோடு எழுப்ப (1கொரிந்தியர; 17; லூக்கா 2:11; 8:41; அப்போஸ்தலர் 9:36, கற்பாறையில் இருந்து தண்ணீர் வரச்செய்ய (யாத்திராகமம் 16, வானத்திலிருந்து அக்கினி இறங்கச்செய்ய (1ராஜாக்கள் 18:30-31; 2நாளாகமம் 6:7) கோடாரியை தண்ணீரில் மிதக்கச் செய்ய (2இராஜாக்கள் 6:5) இன்னும் இது போல் அநேகம். இதைக் குறித்து அல்-ஹாஜ் மௌலானா ஃபசூல் கரீம் என்பவர் மிஸ்கத்துல் மசாபிஹ் எனும் தனது புத்தகத்தில் 44ம் அத்தியாயம்: பக்கம்2468ல் ஒரு விளக்கக் குறிப்பில் சரியாக கூறியிருக்கின்றார். அது என்னவென்றால் தீர்க்கதரிசனமானது அற்புதங்களை விடவும் உயரியது, காரணம், 'தீர்க்கதரினமானது…. சரித்திர ரீதியாக நிரூபிக்கப்படக் கூடியது, ஆனால் ஒரு அற்புதம் அவ்வாறன்று. அற்புதமானது இறைவனுடைய வல்லமையை வெளிக்காட்டும். தீர்க்கதரிசனமானது இறைவனுடைய முன்னறிவை மெய்ப்பித்துக் காட்டும். ஞானமானது வல்லமையை விடவும் பெரிதானதாய் இருப்பதுபோல தீர்க்கதரிசனமானது அற்புதத்தை விடவும் பெரிதானதாய் இருக்கின்றது” சில அற்புதங்கள் ஜின் வல்லமைகளைக்கொண்டு மந்திரவாதிகளால் நகல்படுத்த கூடியதாய் இருந்தபோதிலும், ஒரு அற்புதம் ஒரு தீர்க்கத்தரிசியின் மெய் தன்மையோடு இணைக்கப்பட்டு, அவருடைய செய்தியின் முரண்படாத் தன்மை ஏற்கனவே உள்ள வெளிப்படுத்தல்களோடு பரீட்சிக்கப்பட்டு, அவருடய தெய்வீக அகத்தூண்டலுக்கு நிரூபனமாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுவே புனித வேதாகமத்தின் செய்திகளும், நபித்துவமும் ஏற்றுக் கொள்ளப்பட்டவிதம். இதன் அடிப்படையிலேயே முஹம்மதுவின் நபித்துவமும் கேள்விக் கேட்கப்பட்டது.
முஹம்மது நபியின் நபித்துவம் கேள்வி கேட்கப்பட்டபோது (சூறா 17:90-97) இந்த கோட்பாடு அங்கு குறிப்பிடப்பட்டது. முஹம்மதுவை கேள்வி கேட்டவர்கள் அவருடைய செய்தியை உறுதிப்படுத்தும் வண்ணம் மூசா பூமியில் இருந்து நீருற்றை ஏற்படுத்தியதுபோல், சுலைமான் ஒரு தங்க வீட்டை உருவாக்கியது போல் அல்லது யஃகூப் வானத்திற்கும் பூமிக்கும் இடையில் ஒரு ஏணியை உண்டாக்கியதுபோல் நீரும் ஒரு அடையாளத்தை ஆதாரமாக் காட்டும் என்று முஹம்மதுவிடம் கூறினார்கள். இதற்கு முஹம்மது நபி உரைத்த பதில்கள் சூறா 17:93,59; 13:7; 6:37; 2:118-119களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இவைகள் அவரை குற்றப்படுத்தியவர்களுக்கு திருப்தியை ஏற்படுத்தாதபோது அவருக்கு எரிச்சலும் பொறாமையும் எழும்பிற்று.
பரீட்சை 5
1. ஒரு மெய்யான தீர்க்கதரிசியை அடையாளம்
காணுவது எப்படி?
2. தீர்க்கதரிசனமானது ஏன் அற்புதங்களை விடவும் சிறந்ததாய் இருக்கின்றது?
Comments
Post a Comment