ஈஸா அல் மஸீஹின் தனித்துவம்

நிகரற்ற ஈஸா அல் மஸீஹ் - பகுதி 5

குர்ஆனிலும் இறைவேதத்திலும்  ஈஸா அல் மஸீஹ் அவர்களின் தனித்துவம்


2.         ஈஸா அல் மஸீஹின் தனித்துவம்

குர்ஆனிலும் இறைவேதத்திலும் ஈஸா அல் மஸீஹ்வின் வாழ்க்கை பற்றி போதிக்கப்பட்டுள்ள நான்கு அம்சங்களை நாம் பட்டியலிட்டோம். இவ் அம்சங்களிலிருந்து நாம் ஈஸாவைப் பற்றி கற்றுக்கொள்ளக்கூடிய விடயங்கள் என்ன? முதலாவது, மனுக்குலத்தின் வரலாற்றில் தனித்துவமான ஒரு நபரை இது எமக்கு குறித்துநிற்கின்றது. இரண்டாவது, இத் தனித்துவம் வேறு எந்த நபரும் கொண்டிராததும், ஒரு நபருக்கே உரிய உயரிய கனத்தையும் குறிக்கின்றது. இந்த தொடரில் ஈஸா அல் மஸீஹின் தனித்துவத்தைப் பற்றி இதுவரை நாம் கருத்திற்கொண்ட நான்கு அம்சங்களையும் சுருக்கமாக ஆராய்வோம்.

).    கன்னி பிறப்பு

கன்னியினிடத்தில் பிறந்ததன் மூலம் ஈஸா அல் மஸீஹ் தம் வாழ்வில் அசாதாரண, தனித்துவமான ஆரம்பத்தைக் கொண்டிருந்தார். மனுக்குலத்தின் வரலாற்றில் இவ்விதமாக அசாதாரண விதத்தில் பிறந்த ஒரே நபர் அவரே.

).   ஈஸா அல் மஸீஹின் பாவமற்ற தன்மை

அவர் மாத்திரமே பாவமற்ற வாழ்வு வாழ்ந்தார். குர்ஆனும் இறைவேதமும் இணைந்து சாட்சிபகர்வது போல், மற்ற அனைத்து மனிதர்களும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எண்ணத்தினாலோ, செயலினாலோ தீமை செய்துள்ளனர். ஆனால் ஈஸா மாத்திரமே பாவமற்ற, முழுவதும் தூய்மையான ஒரு வாழ்வு வாழ்ந்தார். ஆகவே அவரது வாழ்வு தனித்துவமாக ஆரம்பிக்கப்பட்டது மட்டுமன்றி, அவ்விதமாகவே தொடர்ந்தது.


).     பரமேறுதல்

ஈஸா அல் மஸீஹின் வாழ்க்கை அசாதாரணமான விதத்தில் ஆரம்பித்ததனால், அவ் வாழ்வின் இறுதிக் கட்டம் அதைவிடவும் வித்தியாசமானதாக இருந்தது. ஏனைய மனிதர்கள் மண்ணுக்கு திரும்பும்போது, ஈஸா பரத்திற்கு ஏறினார். இவ்விதத்திலும் அவர் தனித்துவமானவரே - குர்ஆனும் வேதாகமமும் ஒத்து போதிப்பதுபோல, வேறெந்த மனிதனும் தன் உடலில் எவ்வித மாற்றமும் ஏற்படாமல் ஜீவனுள்ள இறைவனுடைய சந்நிதானத்திற்குச் செல்லவில்லை. மலக்குகள்கூட செல்வதற்கு அனுமதிக்கப்படாத இறைவனுடைய உன்னத சிங்காசனத்திற்கு செல்ல அவரால் மாத்திரமே முடிந்தது. வேறெந்த மனிதனும் இவ்விதம் செய்ததாக குர்ஆனோ, இறைவேதமோ போதிக்கவில்லை. இவ்விடயத்திலும் ஈஸா அல் மஸீஹ் தனித்துவமானவரே.

).     இரண்டாம் வருகை

ஈஸா அல் மஸீஹ் இறை சந்நிதானத்திலிருந்து மீண்டும் வருவார் என கிறிஸ்தவ, முஸ்லீம் சமூகங்கள் எதிர்பார்த்திருக்கின்றன. மேலும் அவர் மாத்திரமே நியாயத்தீர்ப்பின் நாளை தீர்மானிப்பவர் எனவும் குர்ஆனும் வேதாகமும் போதிக்கின்றன. ஈஸா அல் மஸீஹின்  வருகையின்போது, அவர் வந்து நிறைவேற்றவுள்ள காரியங்களைப் பற்றி கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் கொண்டுள்ள எதிர்பார்ப்பு வித்தியாசப்படலாம். ஆயினும் அனைத்தினதும் நியாயாதிபதியாய் அவர் முழு உலகத்தையும் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு எல்லா கிரியையும் நடப்பிப்பபார் என இருதரப்பினரும் எதிர்பார்த்துள்ளனர்இந் நிகழ்வு மட்டுமே அவர் ஏனைய மனிதர்களுக்கு மேலாக உயர்ந்திருக்கிறார் என காண்பிக்க போதுமானதுடன், மனிதர்கள் மத்தியில் அவரை தனித்துவமானவராகவும் காண்பிக்கின்றது - இது மகிமையுடனும் மாட்சிமையுடனுமான தனித்துவம் ஆகும்.

அவர் ஏறத்தாழ 2000 வருடங்களாக உன்னதத்தில் (பரலோகத்தில்) இருக்கின்றபோதும், அவர் இறை சந்நிதானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நாளில் இருந்தவண்ணமாகவே, (வயதில்) எவ்வித மாற்றமும் இன்றி, மீண்டும் வருவார். கடந்த நூற்றாண்டுகளாக மரணமோ, காலமோ அவரில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த முடியவில்லை. இவ்விடயத்திலும் குர்ஆனும்  இறைவேதமும் ஒத்துள்ளன.

வரலாற்றில் எந்த மனிதனும் பூமியில் இவ்வித அசாதாரண ஆரம்பத்தையோ, முடிவையோ கொண்டிருந்ததாக நாம் வாசிக்க முடியாது. அத்துடன் ஈஸாவைத் தவிர வேறெவரும் இப்போது கிறிஸ்தவர்களாலும் முஸ்லீம்களாலும் மீண்டும் வருவதாக எதிர்பார்க்கப் படுவதுமில்லைஇறை அர்ஷிலிருந்தும் அவ்விதமே!  இவ் உண்மைகளின் வெளிச்சத்தின் அடிப்படையில், ஈஸா அல் மஸீஹ்வே தனித்துவமான மனிதன் என்பதே நாம் எடுக்கக்கூடிய ஒரே முடிவாகும். அவருக்கு நிகரானவர் எவருமில்லை. அவரது பிறப்பில், குணாதிசயத்தில், முடிவில், இறுதி மகிமையில் அவர், இந்த பூமியில் வாழ்ந்த அனைத்து மனிதர்களுக்கும் மேலாக உயர்ந்திருக்கிறார்.

இயேசுவின் தனித்துவம் என்பது, சாதகமான சூழ்நிலைகளின் விளைவோ அல்லது மனித சார்புத் தன்மையின் விளைவோ அல்ல, மாறாக தன்னுடைய மகத்துவத்திற்கு, அனைத்து விதத்திலும் தாமே பொறுப்பாயுள்ள இறைவனுடைய விசேஷித்த திட்டத்தின் விளைவே என்பதனை நினைவிற்கொள்ளுங்கள். மனிதர்கள் மத்தியில் ஈஸாவை தனித்துவமாக்கியவர் இறைவனே. அவரது வல்லமையினாலும் சித்தத்தினாலுமே நாம், வாழ்வின் ஆரம்பம் முதல் இறுதி வரை விசேஷித்த மகத்துவத்தையும் கனத்தையும் கொண்ட ஒரு நபரை காணக்கூடியதாயுள்ளது. அவரது மாட்சிமை பரலோகத்தி லிருந்து தோன்றி, வருகின்றது.


இவை அனைத்தும் முக்கிய கருத்துக்களை வலியுறுத்து கின்றன. சில வினாக்கள் இச் சூழ்நிலைகளினாலேயே எழுப்பப்படுகின்றன. ஏன் இறைவன் ஈஸா அல் மஸீஹ்வை இவ்வித தனித்துவத்தினால் முடிசூடினார். அவரது வாழ்வின் இவ் விதிவிலக்கான தன்மைகளில் மறைந்துள்ள விடயம் என்ன? இவ்வித தன்மைகளை வேறெந்த உயரிய மனிதருடனும் பகிர்ந்துகொள்ளாத, தன்னில்தானே இவ்வனைத்தையும் கொண்டுள்ள வேறு மனிதன் யார்? இறுதியாகவும் மிக முக்கியமாகவும்அவர் மற்ற மனிதரைப் போன்ற சாதாரண ஒரு மனிதனாய் இருக்க முடியாது என வலியுறுத்தும், அவரது வாழ்விலும் ஆள்த்தன்மையிலும் அவர் கொண்டுள்ள இவ் விசேஷித்த தன்மைகள் - ஈஸாவையல்லாமல் யாரைக் குறித்து நிற்கின்றன? இக் கேள்விகளுக்கான அடிப்படை பதில்களைக் காணும் முகமாக குர்ஆனையும் இறைவேதத்தையும் ஒப்பிட்ட கற்கையை இந்த தொடர் கட்டுரையின் அடுத்துவரும் பகுதியானது அவதானிக்கும்.

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?