புனித இறைவேதம் எம்மை வந்தடைந்த வரலாறு (4)


விலையேறப்பெற்ற முத்துக்கள் சீஷத்துவ பாடம் - 4

புனித வேதாகமம் (4)

(புனித இறைவேதம் எம்மை வந்தடைந்த வரலாறு)

இறைவன் தன்னுடைய சித்தத்தை வித்தியாசமான வழிகளில் வெளிப்படுத்தினான்.

நீங்கள் வேதாகமத்தை வாசிக்கும்பொழுது, இறைவன் அவனுடைய செய்தியாளர்களின் உள்ளத்தை பல்வேறுப்பட்ட விதங்களில் அகத்தூண்டியதை கண்டு கொள்வீர்கள். அவன் இந்த செய்தியாளர்களை அவர்களுடைய மனத்திற்கு எந்தவித சிந்தனையுமற்ற நிலையில் வைத்து வெறுமனே அவன் சொல்வதை சொல்வதெழுதல் போன்று எழுதும்படி பாவிக்கவில்லை. அவன் அவனுடைய வெளிப்படுத்தல்களை, அவர்களுடைய சொந்த வார்த்தைகளில் எழுதும்படி அவர்களுடைய உள்ளத்தை அகத்தூண்டினான். இதைக் குறித்திருக்கும் சில வேதாகம வசனங்களை வாசித்து, இந்த கூற்றை புரிந்துக்கொள்ளுங்கள்.

1.      நேரடியாக பேசி

·        ஆதம் (அலைக்கு) (ஆதியாகமம் 2:16-17; 3:9; 16-19)

·        நூஹ் (அலைக்கு) (ஆதியாகமம் 6:13-21)

·        இப்றாஹீம் (அலைக்கு) (ஆதியாகமம் 12:1-3; 22:1-2)

·        மூசா (அலைக்கு) (யாத்திராகமம் 3:4, 4:16)

·        யோசுவா (அலைக்கு) (யோசுவா 1:1-9)

·        சாமுவேல் (அலைக்கு) (1சாமுவேல் 3:1-14)

·        எரேமியா (அலைக்கு) (எரேமியா 1:4-19)

·        ஈசாவின் ரசூல் மாருக்கு (மத்தேயு 17:5)

2.      காட்சிகளுக்கூடாக, கனவுகளுக்கூடாக

·        இப்றாஹீம் நபிக்கு (ஆதியாகமம் 12:7; 15:1)

·        யஃகூப் நபிக்கு (ஆதியாகமம் 46:2; 28:12-17)

·        ஏசாயா நபிக்கு (ஏசாயா 6:1-10)

·        எசேக்கியேல் நபிக்கு (எசேக்கியேல் 1:1-28; 10:1-22)

·        தானியேல் நபிக்கு (தானியேல் 2:19; 7:1-28)

·        யூசுப் நபிக்கு (மத்தேயு 2:13)

·        ரசூல் பிதுரூஸுக்கு (அப்போஸ்தலர; 10:9-20)

·        ரசூல் பவுலுக்கு (அப்போஸ்தலர; 16:9-10; 9:3-4, 26:19)

·        ரசூல் யூவன்னாவுக்கு (வெளிப்படுத்தல் 1:1-2, 12-19)



3.      நபீமார்களுக்கூடாக

பழைய ஏற்பாட்டின் பெரும் பகுதி நபிமார்களாலேயே எழுதப்பட்டது. அவர்களுடைய இந்த இறைவாக்குகளில் இறைவன் தன்னுடைய சித்தத்தை வெளிப்படுத்தினான். அதேபோல் அதிக காலத்திற்கு பிறகு மாத்திரமே இடம்பெற்ற சம்பவங்களையும் முன்னறிவித்தான். இது ஒரு குறிப்பிட்ட கரிசனையில் வழங்கப்பட்டது.

·        பனீ இஸ்றாயீலரினதும் யகூதிகளினதும் சரித்திரம்

·        அல் - மஸீஹ்வின் வருகை

·        துன்யாவின் முடிவு காலத்தை வழிநடத்தும்     சம்பவங்கள்

இந்த அறிவானது சாதாரண மனித அறிவுக்கு   அப்பாற்பட்டது. ஆனால், இறைவாக்கான புனித வேதாகமம் இதை பின்வருமாறு விஸ்தரிக்கின்றது:

தீர்க்கதரிசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை. இறை மனிதா்கள் இறைவனுடைய ரூஹூல் குத்துஸ்ஸானவரால் ஏவப்பட்டுப் பேசினார்கள்.”          (2பேதுரு 1:21)

இங்கே சில உதாரணங்கள்:

·        சாமுவேல் நபி   (1சாமுவேல் 9:15-17; 13:13-14; 16:7-13)

·        நாத்தான் நபி   (2சாமுவேல் 12:1-15)

·        ஏசாயா நபி       (ஏசாயா 1:1-20; 58:1-59)

·        எரேமியா நபி     (எரேமியா 2:1-13; 3:6-23)

·        மல்கியா நபி      (மல்கியா 1:1-14)



4.       சரித்திர சம்பவங்களை பதிவு செய்வதன் மூலம்
இறைவன் தன்னை வெளிப்படுத்தி அவனுடைய சிருஷ்டியாகிய மனிதரோடு இடைப்படுகின்றான்.

          வாசியுங்கள்: 1கொரிந்தியர; 10:6,11

·         ஏன் இறைவன் இஸ்ராயீல் மக்களின் சரித்திரத்தை எழுத்தில் பதிவு செய்தான்?

புனித வேதாகமமானது காலங்களுக்கூடாக இறைவனுடைய நோக்கத்திற்கிணங்க இறைவனுடைய மக்கள் இறைவனுடைய செய்தியை புரிந்துகொள்ளும் திறமைக்கு ஏற்ற விதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்ப டுத்தப் பட்டது.

புனித வேதாகமத்தின் செய்தி (பழைய உடன்படிக்கை)

இந்த பெயர் இறைவன் இப்றாஹீமோடும் பின்பு அவருடைய சந்ததியாகிய பனீ இஸ்றாயீல் மக்களோடும் செய்துக்கொண்ட ஒப்பந்தத்தை தொடர;ந்து ஏற்பட்டதாகும். ஒரு உடன்படிக்கை யானது அதை செய்துக்கொண்ட இருவருக் கிடையில் ஒருவர; மற்றவருக்கு வழங்கும் வாக்குத்தத்தங்களையும் பரக்கத்துக்களையும் உள்ளடக்கும். இறைவன் தன்னுடைய வார;த்தையை வெளிப்படுத்த பெற்றுக்கொள்ளும் ஒரு இனமாக ஆகும்படி பனீ இஸ்றாயீல் ஜனங்களை தெரிந்துகொண்டான். ஆகையால் ஏற்கனவே இப்றாஹீம் இறைவனோடு ஒரு உடன்படிக்கைக்கு உட்பட்டிருந்தார். அவருடைய சந்ததியாகிய பனீ இஸ்றாயீல் மக்கள் இறைவனுக்கென்று இறைவனால் வேறுப் பிரிக்கப்பட்டவர்களாய் இருந்தார்கள். எனவே அவர்கள் இறைவன் அவர்களுக்கு வெளிப்படுத்தியிருந்த வார்த்தைக்கு கீழ்ப்படியவும் அவற்றை அவர்களுடைய பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கவும் வேண்டியவர்களாய் இருந்தார்கள் (உபாகமம் 6:4-7). அப்பொழுது எதிர்கால சந்ததியினர் அதை புரிந்துக்கொண்டு வாக்களிக்கப்பட்ட அல்-மஸீஹ்வை (அபிஷேகம் பண்ணப்பட்டவர்) பெற்றுக்கொள்வார்கள்.

            மூசா (அலை) இந்த ஜனத்துக்கு தலைவனாய் இருக்கும்படி இறைவனால் அழைக்கப்பட்டார். அவரின் கீழ் இந்த உடன்படிக்கை திரும்பவும் புதுப்பிக்கப்பட்டது. யாத்திராகமம் 20:1-17 வரையுள்ள பகுதியில் கொடுக்கப்பட்ட பத்து கட்டளைகள் இறைவனால் தெரிந்து கொள்ளப்பட்ட இறைவனுடைய ஜனங்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை விஸ்தரிக்கின்றது.

      யாராவது இக்கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல் போனால் அவர்கள் திரும்பவும் எவ்வாறு ஒப்புரவாக்கப்பட வேண்டும் என்பதை விளக்கு வதற்கு இறைவன் இந்த பத்து கட்டளைகளோடு சேர்த்து இன்னும் சில அறிவுறுத்தல்களையும் கொடுத்தான் (லேவியராகமம் 4ம் அதிகாரம், 16ம் அதிகாரங்கள்). அதைத் தொடர்ந்து உண்மையுள்ள இறை மனிதரின் சரித்திரத்தையும், பனீ இஸ்றாயீல் மக்களின் கீழ்படியாமையையும் நாங்கள் வாசிக்கின்றோம். திரும்பவும் அந்த ஜனங்களை தன் பக்கமாக இழுத்துக் கொள்ளுவதற்கு இறைவன் அவர்களிடத்திற்கு அநேக நபிமார்களை அனுப்பி அவர்களுக்கு சில தண்டனைகளையும் கொடுத்தான்.

      ஆயினும் அதற்கு அவர்களுடைய மாறுத்தரவு கொஞ்சமாக அல்லது ஒரு தற்காலிக மாறுத்தரவாகவே இருந்தது. இறுதியில் தன்னுடைய நேரம் வந்தபொழுது (கலாத்தியர; 4:4) இறைவன் அவனுடைய குமாரனாகிய ஈஸா அல்-மஸீஹ்வை இவ்வுலகிற்கு அனுப்பினான். ஈஸாவுக்கூடாக இறைவனுடைய புதிய உடன்படிக்கை செயல்பட ஆரம்பித்தது. அவரில் பழைய ஏற்பாட்டு இறைவாக்குகள் நிறைவேறின (லூக்கா 24:44-45). அவர் மாத்திரமே இறைவனுடைய சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுகின்ற ஒருவராய் இருந்தார். காரணம் அவர் தூய்மையானவர். அவர் இறைவனுக்கேற்ற குற்றமற்ற ஒரு குர்பானாய் ஆவதற்கு தகுதியுள்ளவராய் இருந்தார். யஹ்யா நபியவர்கள் ஒருமுறை ஈசாவை காண்பித்து இவ்வாறு கூறினார்:

            'இதோ உலகத்தின் பாவங்களை சுமந்து தீர;க்கின்ற இறை ஆட்டுக்குட்டி     (யோவான் 1:29).

            பின்பு புதிய ஏற்பாடானது ஈஸா அல் மஸீஹ்வின் வாழ்க்கை அவருடைய செயல்கள், அவருடைய மரணம், உயிர்த்தெழுதல் என்பவைகளை விஸ்தரிக்கின்றது. அதேபோல் இந்த சத்தியமானது எவ்வாறு அவரை பின்பற்றியவர்களின் ஜீவியங்களை மாற்றியது, எவ்வாறு அவரை பின்பற்றுபவர்களையும் மாற்றும் என்பதையும் அவர் திரும்ப எவ்வாறு வருவார் என்பதையும் விஸ்தரிக்கின்றது. நாம் தொடர்ந்து படித்துகொண்டு போகும்பொழுது இந்த காரியங்க ளெல்லாம் உங்களுக்கு தெளிவாக புரியும்.



பரீட்சை 4

1.       இறைவன் தன்னை வெளிப்படுத்திய நான்கு  விதங்களை எழுதுக.

2.       யாருடைய மத்தியஸ்தத்துக்கூடாக இறைவன் பனீ இஸ்றாயீல் மக்களோடு தனது உடன்படிக்கையை செய்தான்?
         
         

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?