நிகரற்ற ஈஸா அல் மஸீஹ் - பகுதி 1


நிகரற்ற ஈஸா அல் மஸீஹ் - பகுதி 1

குர்ஆனிலும் இறைவேதத்திலும்  ஈஸா அல் மஸீஹ் அவர்களின் தனித்துவம்

1. குர்ஆனிலும் இறைவேதத்திலும்; ஈஸா அல் மஸீஹ் அவர்களைப்பற்றிய உண்மைகள்

2.         ஈஸா அல் மஸீஹ் அவர்களின் தனித்துவம்

3.  ஈஸா அல் மஸீஹ் அவர்களின் தனித்துவத்தைப் பற்றிய தாற்பரியங்கள்

4.         குர்ஆனில் ஈஸா அல் மஸீஹ் அவர்களைப் பற்றிய தனித்துவம் 

5.         ஈஸா அல் மஸீஹ் அவர்களின் தனித்துவத்திற்கான காரணங்கள்

6.         இறைவேதத்தில்; ஈஸா அல் மஸீஹ் அவர்களின் மகிமை

மிக நீண்ட காலமாக ஈஸாவை பின்பற்றுகிறவர்களும் ஏனையோரும்  ஈஸா அல் மஸீஹ் அவர்களைப் பற்றிய தங்களுடைய நம்பிக்கைகளின் வேற்றுமைகளைக் குறித்து விவாதித்து வருகின்றனர். ஆயினும் குர்ஆனும் இறைவேதமும் ஈஸா அல் மஸீஹ்வின் வாழ்க்கை, அவரது ஆள்தத்துவம் தொடர்பாக ஒத்த விடயங்களைக் கூறியுள்ளபோதிலும் அவற்றைப் பற்றிய கலந்துரையாடல்களுக்கு மிக குறைவான அளவிலேயே இடமளித்துள்ளனர்.

நிச்சயமாக, கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இவ் ஒத்த விடயங்களை ஆராய்வதற்கான காலம் வந்துவிட்டது. குர்ஆனும் இறைவேதமும் ஒத்துப்போகின்ற உண்மைகளை தீவிரமாக வெளிப்படுத்த ஆரம்பிக்கும் வரை நாம் ஒருபோதும் ஈஸாவைப் பற்றிய ஒரே நம்பிக்கைக்குள் பிரவேசிக்க முடியாதவர்களாய் இருப்போம். இவ்விரு கித்தாபுகளும் கூறுகின்ற உண்மைகளை வியாக்கியானம் செய்வதில் வேற்றுமைகள் காணப்படலாம். ஆயினும் இஸ்லாத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையிலான பொதுவான உண்மைகளின் தூய்மைத் தன்மையை நாம் உறுதியோடு கற்க முடியும். இது ஈஸா அல் மஸீஹை  குறித்ததான மெய்யான அறிவை பெற்றுக்கொள்வதற்கான படிக்கல்லாக அமையும்.

எந்தவொரு விடயத்தைக் குறித்தும் குர்ஆனும் இறைவேதமும் ஒத்துள்ள இடங்களை நாம் பயமின்றி கண்டறிய முடியும். அவ்விடயத்தை முன்புபோல, கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் விவாதிக்காமல், இனிமேல் அவற்றை உண்மையாக ஏற்றுக்கொள்ள முடியும். இறைவனுடைய வார்த்தை என இரு தரப்பினரும் விசுவாசிக்கும் பரிசுத்த நூல்களில் அவ் உண்மைகள் உள்ளடக்கப்பட்டிருப்பின், நாம் அவற்றை ஒருவருக்கொருவர் நிரூபித்துக் காட்டுவதை விட, மற்றையவர்களுக்கு நிரூபித்துக் காண்பிப்பதே அவசியமானது. எவ்வாறாயினும், அண்மைக் காலங்களில் இவ்விரு சமயங்களும் விடுதலைவாத கொள்கைகளால் பாதிக்கப்பட்டு, பெலவீனமடைந்துள்ளன. அக்கொள்கையை பெயரளவில் பின்பற்றும் சிலர் குர்ஆனிலும் இறைவேதத்திலும் ஈஸாவைப் பற்றி கூறப்பட்டுள்ள மிக எளிய போதனைகளைக் கூட, முழுமையாக புறக்கணித்துள்ளனர். அதன்மூலம் ஈஸா அல் மஸீஹ் பொதுவான மனுஷீக நிலைக்கு கொண்டுவந்து, அவரது மகிமையையும் கனத்தையும் அவரிலிருந்து எடுத்துப்போட முயற்சிக்கின்றனர். ஆகவே சரியான தகவல்களை, ஈஸா அல் மஸீஹ்வை குறித்து குர்ஆனும் இறைவேதமும் ஒத்துள்ள நான்கு முக்கிய விடயங்களை சுருக்கமாக விவரித்தும் நிரூபித்துக் காண்பிப்பது காலத்தின் அவசியமாகும்.


1. குர்ஆனிலும் இறைவேதத்திலும் ஈஸா அல் மஸீஹ்வைப் பற்றி கூறப்பட்டுள்ள   உண்மைகள்

). கன்னி பிறப்பு

இம் முதலாவது காரணி - இஸ்லாத்தினதும் கிறிஸ்தவத்தினதும் சில விசித்திர மனிதர்களால் மறுதலிக்கப்படுகின்றது - அது குர்ஆனிலும் இறைவேதத்திலும் வெளிப்படையானதும் எவ்வித சந்தேகத்திற்கிடமில்லாததுமான ஒரு போதனையாகும். அத்துடன் அதன் அடிப்படை இரு புத்தகங்களினாலும் தாங்கப்படுகின்றது. அது குர்ஆனில் ஒன்றிற்கும் மேற்பட்ட இடங்களில் கூறப்பட்டுள்ளது. ஆயினும் குறிப்பாக, சூறா 19இல், 16-34 வசனங்களில் அதிக விபரமாகக் கூறப்பட்டுள்ளது. இக் கருத்தினை நிரூபிக்கும் முகமாக அப் பகுதியின் வசனங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
19:16. (நபியே!) இவ்வேதத்தில் மர்மமைப் பற்றியும் நினைவு கூர்வீராக் அவர் தம் குடம்பத்தினரை விட்டும் நீங்கி, கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் இருக்கும்போது,

19:17.
அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரயீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார்.

19:18. (
அப்படி அவரைக் கண்டதும்,) ''நிச்சயமாக நாம் உம்மை விட்டும் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன்; நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (நெருங்காதீர்)"" என்றார்.

19:19. ''
நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசத்தமான பதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்"") என்று கூறினார்.

19:20.
அதற்கு அவர் (மர்யம்), ''எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?"" என்று கூறினார்.

19:21. ''
அவ்வாறேயாகும்; 'இது எனக்கு மிகவும் சலபமானதே; மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம்; இது விதிக்கப்பட்ட விஷயமாகும்" என்று உம் இறைவன் கூறுகிறான்"" எனக் கூறினார்.

19:22.
அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார்; பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார். 

மரியம் ஒரு மனிதனால் கர்ப்பந்தரித்திருந்தால், ஏன் ஒரு மலக்கு தோன்றி, அவள் பெறவுள்ள பிள்ளையைப் பற்றி அவளுக்கு விபரிக்க வேண்டும்? அவள் அடையப்போகும் கர்ப்பம் தொடர்பாக அவளது மனநிலையை சரிப்படுத்தி, அவளை அமைதிப்படுத்துவதற்காக மட்டும் மலக்கு வரவில்லை, மாறாக இத் தனித்துவம் வாய்ந்த நிகழ்வானது, இப்பிள்ளையை மனுக்குலத்திற்கான வெளிப்பாடாக்கும் இறைவனுடைய சித்தத்தின் விளைவே என கூறுவதற்கே என்பது இவ் வசனங்களிலிருந்து தெளிவாகின்றது. அவரை அவள் விசேஷித்த விதமாக பெறவுள்ளாள், ஏனெனில் அவளது மகனைக் குறித்து விசேஷ விடயம் வைக்கப்பட்டிருந்தது. இரண்டாவது, வேறெந்த வியாக்கியானங்கள் இவ் வார்த்தைகளின் அர்த்தத்தை மாற்றக்கூடும்: இக் குழந்தை கர்ப்பம் தரிக்கும்போது மரியாள் கன்னியாய் இருந்தாள் என்பதை இவ் வார்த்தைகள் தெளிவாகக் காண்பிக்கின்றன.

இவ் விடயத்தை மேலும் வலியுறுத்திக் கூற வேண்டிய அவசியம் நிச்சயமாக இல்லை. ஈஸாவின் கன்னி-பிறப்பைக் குறித்த குர்ஆனின் மொழிநடை சந்தேகத்திற்கு இடமின்றி காணப்படுகின்றது. அதற்கு ஆதாரமான மற்றுமொரு பகுதி, சூறா 4:156இல் கூறப்பட்டுள்ளது. அவ் வசனத்தில் மரியம் திருமணத்திற்கு அப்பால் நெறியற்ற முறையில் ஈஸாவை கர்ப்பம் தரித்தாள் எனும் யூதர்களின் அடிப்படை குற்றச்சாட்டுக்கு நீங்கலாயிருந்தாள். மீண்டுமாக சூறா 21:19, ஈஸா அல் மஸீஹின் பிறப்பினை, எல்லாக் குற்றச்சாட்டுகளுக்கும் நீங்கலான திருமணமாகாத ஒரு பெண்ணுக்குள் நிகழ்ந்த இறைவனுடைய நேரடி கிரியையாக விபரிக்கின்றது.

மேலும் குர்ஆனில் ஈஸாவின் முதற்பெயர் குறிப்பிடப்படும்போது மரியமின் மகன்” என்றே குறிப்பிடப்பட்டுள்ளமை பரந்தளவில் இவ் உண்மையை நிரூபிக்கின்றது. செமித்திய சமூகத்தினரிடையே பொதுவாக ஒரு மனிதன், அவரது தந்தையின் மகனாகவே பெயரிடப்படுவர். உதாரணமாக, முகம்மது இப்னு அப்துல்லா, முகம்மது இப்னு இஸ்ஹாக் (இஸ்லாத்தின் ஆரம்ப வரலாற்று நபர்), சய்யிது இப்னு சாபித் போன்றன. ஆனால் ஆண்கள் தம் தாயாரின் பெயரால் அழைக்கப்படுவதை நாம் காண முடியாது. அவ்வாறானால் குர்ஆனில் ஏன் ஈஸா எப்போதும் மரியாளின் மகனாக அழைக்கப்பட்டார் (ஈசா இப்னு மரியம்). வெளிப்படையாக இப் பெயர் மீண்டும் மீண்டும் கூறப்படுதலும் அந்நாமத்தின் வழமைக்கப்பாலான குணாதிசயங்கள் ஈஸா அல் மஸீஹ் அவரது தாயாருக்கு மட்டும் பிறந்தவர் என்பதை நிச்சயமாக உரிமைகோருகின்றது. இம் முதற்பெயர் அடிக்கடி பயன்படுத்தப்படுவது, ஈஸா அல் மஸீஹ்வின் பிறப்பின் தனித்தன்மைக்கு ஆதாரமாக இருக்கின்றது அல்லவா? குர்ஆனில் பெண்களின் பெயர்கள் அவர்கள் இல்லாத சந்தர்ப்பத்திலேயே வெளிப்படையாகக் கூறப்பட்டது. கன்னியாக இருக்கும்போதே ஒரு மகனைச் சுமந்த ஒரே பெண்மணியாக, மனுக்குலத்தின் வரலாற்றில் முக்கிய இடத்தில் இருப்பதாலேயே ஈஸாவின் தாயாரின் பெயர் அடிக்கடி குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விடயம் ஒன்றே குர்ஆனில் மரியம் பெறும் மேன்மையை விளக்கக் கூடியதாயுள்ளது. குர்ஆன் ஈஸா அல் மஸீஹ்வின் கன்னி-பிறப்பினை போதிக்கின்றது என முடிவுக்கு வருவது சரியானது.

இறை வேதமும் ஈஸா அல்மஸீஹ்வின் கன்னி-பிறப்பினை போதிக்கின்றது என்பதை சரியாகச் சிந்திக்கும் எந்தவொரு மனிதனும் நிராகரிக்க மாட்டான். கிறிஸ்தவ திருச்சபையின் வரலாற்றில், திருச்சபையும் இந் நம்பிக்கையில் நிலைநின்றதால் இக்கோட்பாடு வேதாகம அடிப்படையானது என்பதை மட்டும், இப் பகுதியை நாம் மேற்கோள் காட்டுவதன் மூலம் நிரூபிப்பது போதுமானது:

26ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில்,
 27தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள்.
 28அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.
 29அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.
 30தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்.
 31இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.

                        (லூக்கா 1:26-31).

இந்த பகுதியில் ஈஸாவின் தாயார்கன்னிஎன இருமுறை கூறப்பட்டிருக்கிறது. அவள் ஜிப்ரீலுக்கு மறுமொழி கூறுகையில், 'இது எப்படியாகும்? புருஷனை அறியேனேஎன்றாள் (லூக்கா 1:34). அதற்கு பின்னர் ஜிப்ரீல், இப் பிறப்பு மனித முயற்சியால் உண்டாவதல்ல, ரூஹுல் குத்தூஸின் வல்லமையினால் உண்டாவது என விளக்கினான். வேதாகமத்தில் கன்னி-பிறப்பைப் பற்றிய மற்றுமொரு தெளிவான விவரிப்பு காணப்படுவது சிறப்பானது.

18இயேசு கிறிஸ்துவினுடைய ஜனனத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.
19அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.
 20அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.
 21அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.

 (மத்தேயு 1:18-21).

ஈஸா அல் மஸீஹ்வின் பிறப்பு ரூஹுல் குத்தூஸின் கிரியையின் விளைவே என மீண்டும் ஒருமுறை விபரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குர்ஆனிலும் இச் சம்பவத்தின் அதிசயத்தை யூசுபுக்கு விபரிப்பதற்கு ஜிப்ரீல் தோன்றினான் என கூறப்பட்டுள்ளது. ஈஸாவின் தாயார் ஒரு மனிதனால் ஈஸாவைக் கருவுற்றிருந்தால், இவ்விதமாக மலக்குமார் தோன்றி, ஈஸாவின் பிறப்பைப் பற்றி விபரிக்கும் நிகழ்வுகள் இருக்க வேண்டியதென்ன?

இவ் வசனங்களே, அவற்றிற்கு ஆதாரமாயுள்ளதுடன் ஈஸாவின் பிறப்பைப் பற்றிய கேள்விக்கே இடம் அளிக்கவில்லை. மலக்கு மரியமுக்கும் யூசுபுக்கும் ஈஸா அல் மஸீஹ்வின் கருவுறுதல் ரூஹுல் குத்தூஸானவரின் விசேஷித்த இடைப்படுதலால் நிகழ்கின்றது என்பதை விபரிப்பதற்காக அவர்கள் முன் தோன்றினான்.

அதனால் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் ஈஸா அல் மஸீஹ்வின் பிறப்பில் குர்ஆனும் இறை வேதமும் ஒன்றித்துள்ள ஒரு விடயம் உண்டு. இவ்விரு நூல்களும் ஈஸா இறைவனின் ஏற்பாட்டினால் ரூஹுல் குத்தூஸானவரின் வல்லமைக்கூடாக கன்னிப்-பெண்ணிடத்தில் பிறந்தார் என்ற உண்மையை போதிக்கின்றன.
தொடரும்…

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?