அழைப்பு


அன்புள்ள சகோதர சகோதரிகளுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஏக இறைவன் எம்மீது ஒரு பெரிதான கடமையை சுமத்தியுள்ளான். அதாவது ஏக இறைவனிடம் சென்றடையும் வழியை எமது சமுதாயத்திற்கு காண்பிப்பதாகும். இது மிகவும் சவால்மிக்க கடமையாக இருந்தாலும், சத்தியத்தை தேடுவதில் உங்களைப்போல் ஆர்வமுள்ளவர்களுடன் பகிர்ந்துகொள்வது மிகவும் இலகுவான காரியமாகும்.

இன்ஜில் வேதத்தில் இவ்வாறு ஒரு கதை உள்ளது. “ஒரு மேய்ப்பன் இருந்தான். அவனிடம் 100 ஆடுகள் இருந்தது. ஒரு நாள் அதில் ஒன்று கானாமற் போய்விட்டது. அந்த மேய்ப்பனோ மிகவும் கவலைக்கொண்டவனாய், 99 ஆடுகளையும் விட்டுவிட்டு, கானாமற்போன ஒரு ஆட்டை தேடிக்கொண்டு சென்றான். அவன் அதை தேடிப்பிடித்ததும் மிகவும் சந்தோஷத்தோடுகூட அந்த ஆட்டை தோளில் போட்டுக் கொண்டு, தன் இருப்பிடம் நாடி வந்தான்.” இவ்வாறுதான் இறைவனும் தான் படைத்த மனிதன் வழிவிலகிச் செல்லும்போது, அவனைத் தேடிக் கண்டுபிடித்து தனது ஜமாஅத்துக்குள் சேர்த்துக் கொள்கிறான். இதைத்தான் எமக்கூடாகவும் இறைவன் செய்கிறான். பல வருடங்களின் பின்னரும் உங்களைத் தேடுகிறான் என்றால் பாருங்களேன்!.

மேலும் சத்தியத்தை தேடும் பணியில் தொடர்ந்தும் நாங்கள் ஈடுபடுவோம். உங்கள் கேள்விகள் சந்தேகங்களை எங்களுக்கு எழுதுங்கள். பதில் எழுத ஆயத்தமாக உள்ளோம். “இறைவா, எங்களுக்கு நேரான வழியை காட்டுவாயாகஎன்ற துஆ எப்பொழுதும் எங்கள் உதடுகளில் ஒலிக்கட்டும்.

எங்கள் ஆக்கங்களை இங்கே பதிவு செய்கிறோம். வாசித்து உங்கள் விமர்சனங்களை எங்களுக்கு எழுதுங்கள்.


இப்படிக்கு உங்கள் நண்பன்

           இறைநேசன்

Comments

Post a Comment

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?