விலையேறப்பெற்ற முத்துக்கள் சீஷத்துவ பாடம்  8
 
இறைவன்


(இறைவன் தன்னை குறித்து என்ன கூறுகின்றான்?)

நாம் இறைவேதத்தை ஈமான் கொள்வதற்கு நமக்கு மிகவும் சிறந்த ஒரு காரணம் இருக்கின்றது என்பதை நீங்கள் இப்பொழுது கண்டுகொள்வீர்கள். இறைவேதத்தை வாசிக்க பலமுறைகள் இருக்கின்றன. அதிலே ஒரு முறைதான் முழு இறைவேதத்தையும் அவதானத்தோடு வாசித்தல். இந்த முறையை நீங்கள் விரும்புவீர்கள் என்றால், புதிய ஏற்பாட்டை வாசிப்பதிலிருந்து இதை ஆரம்பியுங்கள். இது, பழைய ஏற்பாட்டை நீங்கள் நன்றாக புரிந்திட உங்களுக்கு உதவிடும். வாசிப்பதற்கு முன் இறைவனின் வழிநடத்துதலை வேண்டி பின்வரும் துஆ வைச் செய்யுங்கள்:

இறைவா, இந்த புத்தகம் உன்னுடைய வார்த்தை என்பதை நான் காண எனக்கு உதவிப் புரிவாயாக, சத்தியத்தைக் கண்டு அதற்கு கீழ்ப்படிய எனக்கு உதவிடுவாயாக.’

உங்கள் துஆவுக்கு இறைவன் பதிலளித்து, சத்தியத்தைக் கண்டடைய உங்களுக்கு உதவிடுவான்.
இரண்டாவது முறைதான் இறைவேதத்தில் காணக் கிடைக்கின்ற தலைப்புக்களை தரிந்து, அவை சம்பந்தப்பட்ட வேதப் பகுதிகளை ஆராய்ந்து இறைவேதத்தை கற்றல். இந்த பாடத்தில் எஞ்சிய பகுதிகளில் நாம் இந்த வேதாகம கற்கை முறையை பயன்படுத்துவோம். எனவே, எம்மோடு ஒத்துழைத்து கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து வசனங்களையும் வாசியுங்கள். அப்பொழுது, இறைவனைப்பற்றிய உங்கள் புரிந்துணா்வும், இந்த துனியாவைக் குறித்து அவன் கொண்டிருக்கும் திட்டம் பெரிதான ரீதியில் வளச்சியடைவதையும் நீங்கள்  கண்டு கொள்வீர்கள்.

இறைவன் தன்னை வெளிப்படுத்தல்

இறைவனை குறித்து நாம் அறிந்துக் கொள்ளும் யாவும் வெளிப்படுத்தலுக்கூடாகவே எமக்கு தெரியப்படுத்தப் படுகின்றன. இறைவன் தன்னை பலவிதத்தில் வெளிப்படுத்தியிருக்கிறான்:

·             தனது சிருஷ்டிப்பின் கிரியைக்கூடாக (ரோமா;   1:20; சங்கீதம் 19:1-4)
·             மனிதனின் மனசாட்சியில்            ரோமா; 2:14-15)
·             சரித்திர சம்பவங்களில்                    (சங்கீதம் 78:12-16)
·             புனித இறைவேதத்தில்                    (2தீமோத்தேயு 3:16)
·             அவனுடைய ஹயாத்தான வார்த்தையாகிய ஈஸா அல் மஸீஹ்வுக்கூடாக   (யோவான் 1:1-4; 9-14; எபிரேயா; 1:1-2; சூறா 4:171).

கீழ்ப்படிய விருப்பமுள்ளவர்களாய் இருங்கள்

இறைவேதத்தைக் குறித்து இல்லாத பொய்யான காரியங்களை ஏற்கனவே உங்கள் மனதில் போட்டிருக்கின்ற படியால், ஒரு இஸ்லாமியராகிய உங்களுக்கு தப்பான முன் எண்ணம் இல்லாமல் வேதாகமத்தை வாசிப்பது என்பது இயலாத ஒன்று என்பது தெளிவான ஒரு காரியம். ஒரு முஸ்லீம் அல்லாதவா் குர்ஆனை வாசிக்கும் போதும், இதே காரியம்தான் நடைபெறுகின்றது. ஆனால், எல்லாவற்றிற்கும் முன்பாக நம்முடைய தப்பான முன்னெண்ணங்களுக்கு அல்ல, இறைவனுக்கே நாம் கீழ்ப்படிய வேண்டும் என்பதை நாம் உறுதியாக்கிக் கொள்ளவேண்டும். சரீரப் பிரகாரமாக ஈஸா அல் மஸீஹ் இவ்வுலகில் வாழும் காலத்தில், ஒருநாள் பின் வருமாறு யகூதிகளுக்கு சவாலிட்டார்:

ஒருவன் இறைவனின் விருப்பத்தைச் செய்யவேண்டும் என்றால், அவன்தாமே என்னுடைய போதனைகள் இறைவனிடமிருந்து வருகின்றதா, அல்லது நான் எனது சுயமாகக் கதைக்கின்றேனா என்று கண்டு கொள்ளட்டும்என்றார்.   (யோவான் 7:17 )

நீங்களும், நானும் நிச்சயமாக இறைவனின் சித்தத்தை செய்யவே நாடுகின்றோம். எனவே, நாம் துஆவோடு முன் சென்று, அவன் நமக்கு என்னத்தை வெளிப்படுத்துகின்றான் என்பதைக் கண்டு கொள்வோமாக.

இறைவேதத்தின் படி இறைவனின் தன்மை

இறைவனின் ‘99 நாமங்கள்உங்களுக்கு நன்குத் தெரியும் என்றால், பின்வரும் அவனுடைய நாமங்களை நிச்சயமாக நீங்கள் அறிந்திருப்பீர்கள். இறைவனின் நாமம் அடங்கிய இறைவேத வசனங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. விரும்பினால் நீங்கள் அவற்றை பார்க்கலாம். ஒவ்வொரு குணாதிசயத்தினதும் அர்த்தத்தையும், அது தரும் செய்தியையும் தியானியுங்கள்
இறைவனே எல்லாவற்றையும் சிருஷ்டித்த சிருஷ்டிகன்: ஆதியாகமம் 1:1; சங்கீதம் 8;  அப்போஸ்தலா; 17:24-27; கொலோசெயா; 1:15-17; எபிரேயா; 1:1-3.

இறைவன் சா்வ வல்லமையுள்ளவன்: ஆதியாகமம் 17:1; யாத்திராகமம் 6:3; எண்ணாகமம் 24:4; சங்கீதம் 91:1; ஏசாயா 13:6; வெளிப்படுத்தல் 1:8; 4:8; 11:17.

இறைவன் தூய்மையானவன்: ஏசாயா 6:3; லேவியராகமம் 11:44; யோசுவா 24:19; 1பேதுரு 1:15-16; வெளிப்படுத்தல் 15:4; 4:8.

இறைவன் சகலமும் அறிந்தவன்: 1சாமுவேல் 16:7; சங்கீதம் 139:1-4, 23:-24; எரேமியா 17:10; மத்தேயு 6:8-18,32; 10:30; யோவன் 1:48-49; 2:25; 6:64.

இறைவன் எங்கும் இருக்கக் கூடியவன் (சா்வ வியாபி): சங்கீதம் 139:5-12; மத்தேயு 18:20; 28:20.

இறைவன் நீதியும், நியாயமுமானவன்: ஆதியாகமம் 6:5-7; யாத்திராகமம் 34:7; உபாகமம் 10:17-18; 32:4; சங்கீதம் 11:7; ரோமா; 2:4-11; எபிரேயா; 10:30; 1பேதுரு 1:17.

இறைவன் நித்தியமானவன் (என்றும் இருப்பவன்): ஆதியாகமம் 21:33; சங்கீதம் 90:1-2; 102:27-28; ஏசாயா 40:28; 51:6.
இறைவன் ரூஹ் ஆக (ஆவியாக) இருக்கின்றான்: யோவான் 4:24; 2கொhpந்தியா; 3:17.

இறைவன் மகிமையானவன்: எண்ணாகமம் 14:21; உபாகமம் 10:17; சங்கீதம் 8:1; 104:1; ஏசாயா 6:1-3; 57:15; மத்தேயு 16:27; யோவான் 1:14; 17:5; 1தீமோத்தேயு 6:14-16; வெளிப்படுத்தல் 4:11.

இறைவன் நியாயாதிபதியாய் இருக்கின்றான்: ஆதியாகமம் 18:25; சங்கீதம் 7:11; யோவான் 5:22-27; அப்போஸ்தலா; 10:42-43.

இறைவன் இரக்கமுள்ளவன்: யாத்திராகமம் 34:6; சங்கீதம் 103:8-13; மீகா 7:18; யோவான் 3:16-18.

இறைவன் மனித அறிவு, ஆற்றல் என்பவைகளால் கண்டுபிடிக்கப்பட முடியாதவன்: ரோமா; 11:33-34; 1கொhpந்தியா; 2:6-7; 1தீமோத்தேயு 6:16.

இறைவன் உணா்ந்து அறிந்து கொள்ளப்படக் கூடியவன்: ரோமா; 1:19-20; 2:14-15; அப்போஸ்தலா; 14:17; 17:26-27.

இறைவன் காணப்பட முடியாதவன்: யாத்திராகமம் 33:20-23; யோவான் 1:18; கொலோசெயா; 1:15; 1தீமோத்தேயு 1:17; 6:16; 1யோவான் 4:12-20.

இறைவன் இரட்சகன்: சங்கீதம் 106:21; ஏசாயா 44:6; 45:21; 63:7-10; தீத்து 11-14; யு+தா 25ம் வாக்கியம்.

இறைவன் நல்லவன்: சங்கீதம் 118:1; 36:7-9; 63:3-4; 34:8; 31:19.

இறைவன் உண்மையுள்ளவன்: உபாகமம் 7:9; 32:4; யோசுவா 23:14-16; தீத்து 1:2; சங்கீதம் 117; 118:1-4; யாத்திராகமம் 34:6; 2தீமோத்தேயு 2:13; 1யோவான் 1:9.

இறைவன் பொறுமையுள்ளவன்: எண்ணாகமம் 14:18; நெகேமியா 9:16-21; யாத்திராகமம் 16:13-15; சங்கீதம் 103:8; லூக்கா 13:6-9; ரோமா; 9:22-23; 2பேதுரு 3:9.

இறைவன் அருளுகின்றவனும், போஷித்து காப்பாற்றுபவனுமாவான்: மத்தேயு 6:25-34; உபாகமம் 29:2-6; யாத்திராகமம் 16:13-15; சங்கீதம் 41:1-3: 67:6-7; 104:27-28; 145:15-21; 147:7-9.

இறைவன் ஆலோசனை வழங்குகின்றான், வழிகாட்டுகின்றான்: சங்கீதம் 25:4-5; யோவான் 6:45; 1கொhpந்தியா; 2:13; யாத்திராகமம் 4:15; யோபு 36:22; சங்கீதம் 94:12; லூக்கா 12:12; யோவான் 14:26.

இறைவன் உதவியாளன்: எபிரேயா; 13:6; சங்கீதம் 33:20; 46:1-3; 124:8; அப்போஸ்தலா; 26:19-23; ரோமா; 8:26. 

இறைவன் என்றென்றும் ஹயாத்தோடு இருப்பவன்: ஆதியாகமம் 16:14; சங்கீதம் 42:2; எரேமியா 17:13; யோவான் 5:26; ஆதியாகமம் 15:45; வெளிப்படுத்தல் 1:48.

இதுவரையும் இறைவனின் தன்மைகளைக் குறித்து பார்த்தோம், இப்பொழுது இறைவனின் குணாதிசயங்களை குறித்து பார்ப்போம். இவைகள் சிலவேளை உங்களுக்கு புதியவைகளாய் இருக்கமுடியும். ஆனால், இவை புனித வேதாகமம் இறைவனைக் குறித்து கூறும் சத்தியங்கள்.

இறைவன் அனைத்து மூஃமின்களுக்கும் (ஈசாவின்மேல் நம்பிக்கைக் கொள்பவா்களின்தகப்பனாய் இருக்கின்றான்: ஏசாயா 9:6; எரேமியா 31:9;  மத்தேயு 5:16-48; 6:8-9,32; யோவான் 8:41; 14:6; 15:16; ரோமா; 8:15; கலாத்தியா; 4:6; எபேசியா; 4:6; 1யோவான் 1:3; 2:1; 2:23.

இறைவன் அன்பாய் இருக்கின்றான்: வெளிப்படுத்தல் 21:2; ஏசாயா 62:5; எரேமியா 31:3; 2கொரிந்தியா; 11:2; எபேசியா; 3:19; 1யோவான் 4:7-8.

இறைவன் சமாதானமாய் இருக்கின்றான்: எபேசியா் 2:14; 1கொரிந்தியா; 14:33; ரோமா; 15:33; 16:20; 2கொரிந்தியா; 13:11; பிலிப்பியா் 4:9; 1தெசெலோனிக்யோ; 5:23;    எபிரேயா; 13:20.

இறைவன் இரக்கமுள்ளவன்: தீத்து 3:4-5; நெகேமியா 9:17; ரோமா் 2:4; 1பேதுரு 2:3.

இந்த பாடம் எமது வாழ்க்கைக்கு மிக முக்கியமானதாய் இருக்கின்றபடியால், நேரம் எடுத்து மிக கவனமாக மேலே கொடுக்கப்பட்ட புனித கிதாபின் வாக்கியங்கள் ஒவ்வொன்றுக்கூடாகவும் சென்று இறைவனின் தன்மைகளையும் குணாதிசயங்களையும் நன்றாக விளங்கிக் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகின்றோம். அது நிச்சயமாக இறைவனின் பரக்கத்தை உங்கள் வாழ்க்கைக்குள் கொண்டு வரும்.


பரீட்சை: 8

1.            மேலே நீங்கள் தியானித்து கற்றுக்கொண்ட இறைவனின் நாமங்களில் குறைந்தது ஐந்து நாமங்களை எழுதி அவை ஐந்தும் உங்கள் வாழ்க்கைக்கு எவ்வளவு பிரயோசனமாய் இருக்கின்றது என்று ஒரு சிறு குறிப்பு எழுதுக.
2.            மேற்கண்ட வேத வசனங்களுக்கூடாக இறைவன் எப்படிப்பட்டவன் என்று நீங்கள் அறிந்து கொண்டீர்கள்?

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?