குர்ஆனை விசுவாசிக்கும் எவரும் வேதாகமம் கெடுக்கப்ட்டது எனும் கூற்றை ஏற்க மாட்டார்கள்,
விலையேறப்பெற்ற முத்துக்கள் சீஷத்துவ பாடம்
-
7
புனித இறைவேதம்
(7)
(நாம் ஏன் புனித இறைவேதத்தை இறைவார்த்தை என்று நம்பவேண்டும்?)
நேரடியாக கண்கண்ட சாட்சிகளின் அறிக்கைகள்.
இறைவேதமானது நேரடியாக கண்கண்ட சாட்சிகளின் அறிக்கைகளை கொண்டிருப்பது நாம் இறைவேதத்தை நம்புவதற்கான 2ம் காரணமாய் இருக்கின்றது. மேற்கண்ட இந்த சம்பவங்கள் அனைத்தும் சாட்சிகளற்ற எங்கோ ஒரு மூலையில் இடம்பெற்றவை அல்ல. அவைகள் பகிரங்கமாகவே இடம்பெற்றன. பனீ இஸ்றாயீல் மக்கள் அனைவரும் அவைகளை அறிந்திருந்தனர். புதிய ஏற்பாட்டின் சம்பவங்கள் பதிவு செய்யப்படும்போது இஸ்றாயீல் மக்கள் அவற்றை அறிந்திருந்தனர். அப்படி இல்லாதிருந்தால் அவைகள் பொய் என்று சொல்லி அவர்கள் அவற்றுக்கு எதிராக கலகம் செய்திருப்பர். ஆனால் ரசூல்மார் எப்பொழுதுமே தொடர்ந்தும் தொடர்ந்தும் நேரடியாக கண்கண்ட சாட்சிகளிடம் வினவும்படி சவாலிட்டனா். ரசூலாகிய பவுல் அகிரிஃப்பா அரசனுக்கு முன்பாக நின்று தனக்காக பேசும் பொழுது பின்வருமாறு கூறினா்,
'.... நான் கூறுவது உண்மையும் சரியானதுமாகும். அரசருக்கு இந்த விஷயங்கள் நன்றாகத் தெரியும். எனவே, நான் அவரோடு சுயாதீனமாய் பேசலாம். இவைகளில் ஒன்றும் அவருடைய கண்களுக்கு மறைவாக எங்கோ ஒரு மூலையில் நடக்கவில்லை” (அப்போஸ்தலர் நடபடிகள் 26:26).
ஈஸா அல் மஸீஹ்வின் சிலுவை மரணத்திற்கு கொஞ்ச நாட்களுக்கு பின்பு பித்ரூஸ் திரளான யகூதிகளைப் பார்த்து பின்வருமாறு கூறினார்:
“பனீ இஸ்றாயீல் மனிதர்களே, நீங்கள் அறிந்திருக்கும் வண்ணம் நசரேய ஊரை சேர்ந்தவராகிய ஈசா என்பவர் இறைவனால் மகிமைப்படுத்தப்பட்டவராய் உங்கள் மத்தியிலே அற்புதங்களையும் அடையாளங்களையும் நடப்பித்தார். அவர் இறைவனுடைய நோக்கத்திற்கும் அவனுடைய முன்னறிவின்படியும் உங்கள் கைகளிலே ஒப்புக்கொடுக்கப்பட்டார். துஷ்டத்தனமான மனிதர்களின் உதவியோடு நீங்கள் அவரை சிலுவையில் அறையப்படும் மவுத்திற்கு ஒப்புக்கொடுத்தீர்கள், ஆனால் இறைவன் அவரை மவுத்திலிருந்து உயிரோடு எழுப்பினான். மவுத்தின் வேதனையிலிருந்து அவரை விடுவித்தான். காரணம் மவுத்தானது அவரை பிடித்து வைத்துக் கொண்டிருக்க முடியாமற் போனது” (அப்போஸ்தலர் 2:22-24).
யகூதிகளால் ஈஸா அல் மஸீஹ்வின் சிலுவை மவுத்தைப் பற்றிய குற்றச்சாட்டை ஒருபோதும் மறுதலிக்க முடியாதிருந்தது. அவர்கள் அவருடைய மஸீஹ் பட்டத்தையும் மவுத்திலிருந்து எழுந்திருப்பையுமே மறுதலித்தார்கள். இந்த சவாலை வழங்கிய பயானானது, (பிரசங்கம்) ஈஸா அல் மஸீஹ் சிலுவையில் அறையப்பட்டு ஏழு வாரங்களுக்கு பிறகு ஆயிரம் ஆயிரமான யகூதிகளுக்கு
வழங்கப்பட்ட ஒரு பயானாகும். ஈசா மெய்யாகவே சிலுவையில் அறையப்பட்டு மவுத்தாகியிருந்திருக்காவிட்டால், அன்றைய தினம் அந்த பயானை கேட்ட 3000ம் பேர் அந்த பயானுக்கு மாறுத்தரவாக ஈஸா அல் மஸீஹ்வின் மேல் ஈமான் கொண்டு அவரை ஏற்றுக்கொண்டிருந்திருப்பார்களா? இந்த சம்பவம் நடந்து சில நாட்களுக்கு பின்பு பித்ரூசும், இன்னும் சில ரசூல்மார்களும் சேர்த்து சிறையிடப்பட்டனர். அவர்களுடைய சிறையிருப்பைத்தொடர்ந்து யகூதிகளுடைய நியாய விசாரிப்பு சங்கமான சன்ஹெட்ரின் சங்கமானது அவர்களை நியாயம் விசாரித்தபோது பித்ரூசும் அவரோடு சேர்த்து சிறையிடப்பட்ட ரசூல்மார்களும் பின்வருமாறு பதிலளித்தனர்:
“நீங்கள் சிலுவையில் அறைந்து கொலை செய்த ஈஸா அல் மஸீஹ்வை மவுத்திலிருந்து எழுப்பின எங்கள் பிதாக்களின் இறைவனுக்கு நன்றி. பனீ இஸ்ராயீலினருக்கு பாவத்திலிருந்து தௌபாச்செய்து மனந்திரும்புதலைக் கொடுக்கும் ஆண்டவராகவும், இரட்சகராகவும் இறைவன் தாமே அவரை தம்முடைய வலதுபாரிசத்தின் அளவிற்கு உயர்த்திக்கொண்டான். நாங்கள் இந்த காரியங்களுக்கு கண்கண்ட சாட்சிகளாய் இருக்கின்றோம். இந்த ஈசா அல் மஸீஹ் அவர்களுக்கு கீழ்ப்படிகின்ற ஒவ்வொருவருக்கும் இறைவன் தாமே ரூஹூல்குத்தூஸானவரை அருளி யிருக்கின்றான்
(ரசூல்மார்ன் நடபடிகள் 5:30-32).
பவுலும் பித்ரூஸ்ஸைப்போல இந்த காரியத்தை மிக தெளிவான முறையிலே குறிப்பிட்டிருக்கின்றார். “இறை வாக்கியத்தின்படியே,” என்று அவர் இதை குறிப்பிடுகின்றார். (அதாவது
இங்கு இறை வாக்கியத்தின்படியே என்று பவுல் கூறுவது தௌராத்தில் அடங்கியிருக்கும் ஒரு இறைவாக்கு ஆகும்).
அதாவது இது இன்றளவும் ஜீவிக்கும் கண்கண்ட சாட்சிகளினால் உறுதிப்படுத்தப் பட்டிருக்கின்றது என்று கூறுகின்றார். இதை அவர் கிரேக்க நாட்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு எழுதும்போது குறிப்பிடுகின்றார். அது பின்வருமாறு,
“நான் பெற்றுக்கொண்டதை உங்களுக்கு ஒப்புவித்தேன், அது என்னவென்றால் இறைவாக்கியங்களின் படியே ஈஸா அல் மஸீஹ் அவர்களுக்காக மவுத்தாகி அடக்கம் பண்ணப்பட்டு ஹயாத்தோடு எழுந்து பித்ரூசுக்கும் ஏனைய பன்னிரெண்டு பேருக்கும் காட்சியளித்தார். அதற்கு பின்பு
500க்கும் மேற்பட்ட சகோதரர்களுக்கு ஒரே நேரத்தில் காட்சியளித்தார். அவர்களில் அநேகர் இன்றும் ஜீவிக்கின்றார்கள். சிலர் மௌத்தாகி விட்டார்கள். அதன் பின்பு அவர் யஃக்கூபுக்கும் ஏனைய ரசூல்மார்களுக்கும் காட்சியளித்தார்” (1கொரிந்தியர; 15:3-7).
சில காலத்திற்குப் பிறகு பித்ரூஸ் கண்கண்ட சாட்சிகளின் அறிக்கையை வலியுறுத்தும் பொழுது, இதற்கு ஒத்தாசையாக சில காரியங்களை எழுதுகின்றார். ஈஸா அல் மஸீஹை பற்றிய தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலானது அதிக உறுதிவாய்ந்தாக இருக்கின்றது என்று எழுதுகின்றார். தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலானது அவ்வாறு பொய்யானதாக இருக்க முடியாது என்று அறியத் தருகின்றார்.
'நம்முடைய ஆண்டவராகிய ஈசா மஸீஹ்வின் வல்லமையையும் வருகையையும் குறித்து நான் உங்களுக்கு கூறினபோது, நாங்கள் புத்திசாலிதனமாக உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகளையல்ல பின்பற்றினோம். மாறாக அவருடைய மகிமைக்கு நாங்களே கண்கண்ட சாட்சிகளாய் இருந்தோம் என்று உங்களுக்கு கூறினோம். வானத்திலிருந்து, பிதாவாகிய இறைவனிடமிருந்து ஒரு சத்தம் உண்டாகி “இவர் என்னுடைய நேச குமாரன் இவரில் நான் பிரியமாய் இருக்கின்றேன்,” என்று கூறும் சத்தத்தோடு கூடிய மகிமையை அவர் பெற்றுக் கொண்டதை நாங்கள் கண்டோம்.
அவர் மறுரூபமாகிய அந்த மலையில் அவரோடு நாங்கள் இருக்கும்பொழுதே இந்த சம்பவம் நடந்ததை நாங்கள் கண்டோம். மேலும் அதிகம் உறுதிவாய்ந்த தீர்க்கதரிசன வசனங்களும் எங்களிடத்தில் உண்டு. நீங்கள் அதற்கு நன்றாக உங்களுடைய அவதானத்தை செலுத்துங்கள். இருளான இடத்தில் வெளிச்சம் பிரகாசிப்பது போலவும் அதிகாலையின் வெளிச்சமும், அதிகாலையின் நட்சத்திரமும் உங்கள் இருதயங்களில் உதயமாகும் வரையும் நீங்கள் இந்த இறைவாக்கியங்களை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். மேலும் இறைவாக்கியங்களெல்லாம் இறைவாக் குறைத்தவர்களின் சொந்த வியாக்கியானத்திலிருந்து வெளிவரவில்லை யென்பதையும் நீங்கள் கட்டாயம் அறிந்துக்கொள்ள வேண்டும். அதாவது தீரக்க தரிசனங்களானது ஒருபோதும் மனிதருடைய சுய சித்தத்தினால் உண்டாயிருக்கவில்லை. ரூஹூல் குத்ஸ்ஸானவரினால் வழிநடத்தப்பட்டே, இறை மனிதர்கள் இறைவனிடமிருந்து வார்த்தையைப் பெற்றே அதை மக்களுக்கு எடுத்துரைத்தனர்” (2பேதுரு 1:16-21).
இதை குறித்து நீங்கள் 1யோவான் 1:1-4 வரையுள்ள பகுதியிலும் வாசிக்கலாம்.
சரித்திர ஆசிரியர்கள் நற்செய்தியை உறுதிப் படுத்துகின்றார்கள்…
புனித கிதாபு உண்மையென்று நாம் ஏன் அறிய வேண்டும் என்பதற்கான 3ம் காரணத்தை நான் உங்களுக்கு குறிப்பிட விரும்புகின்றேன். எந்தவொரு பழைய சரித்திர பதிவேடுகளை அல்லது பதிவுகளை நாம் எடுத்துக்கொண்டாலும் அவைகள் கூடுதலாக யுத்தங்கள், வீரர்கள், அந்த காலத்தில் வாழ்ந்த தலைவர்கள் என்பவைகளைக் குறித்தே அதிகமாக கூறும். வேறு காரியங்கள் மிக குறைவாகவே பதிவு செய்யப்பட்டிருக்கும். அதிலும்
கலிலேயா, யூதேயா போன்ற ஒதுக்குப்புறமான இடங்களில் இடம்பெற்ற சம்பவங்களை அந்த சரித்திரங்களில்
பதிவு செய்யப்பட்டிருப்பதாக எதிர்பார்ப்பது கொஞ்சம் கஷ்டமான காரியமேயாகும். அப்படியே அவர்கள் அதை பதிவுசெய்திருந்தாலும் அந்த சம்பவங்கள் யுத்தங்கள் என்பவைகளில் அதற்கு தலைவர்களாய் இருந்த ராஜாக்கள், அதிகாரிகளே பிரதானமானவர்களாக காட்டப்பட்டிருப்பர். அப்படியிருந்தும் புனித வேதாகம பதிவுகளை உறுதிப்படுத்தும் வண்ணமாக சில குறிப்புகளை நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது. கொர்நேலியஸ் டெசிடஸ் (கி.பி 54-117) என்பவர் ரோம பேரரசின் மிக சிறந்த சரித்திர ஆசிரியனாக இருந்தார். அவர் பின்வருமாறு
எழுதினார்,
“கிறிஸ்தவா்கள்
என்ற பெயர் திபேரியு என்பவன் ஆட்சி செய்யும்போது,
பொந்துயு பிலாத்து என்பவன் தேசாதிபதியாய் இருந்த காலத்தில், சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து (அல்-மஸீஹ்) என்பரின் பெயரிலிருந்தே வருகின்றது. அவரைப் பற்றிய செய்தியானது அவர் மௌத்தான இடமாகிய யூதேயாவையும்
கடந்து ரோம பேரரசின் தேசங்களுக்குள்ளும் ஒரு தொற்று நோயைப்போல் பரவுகின்றது.”
டெசிடஸிற்கு கிறிஸ்தவர்கள்
மேல் எந்தவிதமான அனுதாபமும் இருக்கவில்லை என்பது மேற்கண்ட அவருடைய கூற்றிலிருந்து தெளிவாகின்றது.
ஆகையால், கிறிஸ்தவத்தைக் குறித்து அவர் கூறிய மேற்கண்ட கூற்றானது மிகவும் பெறுமதிவாய்ந்த
ஒரு ஆதாரமாய் உள்ளது.
ஜோசபஸ், இவர் ஈஸா அல்-மஸீஹ் அவர்களுக்கு பின் 70ம் ஆண்டில் ரோமர்களால் எருசலேம் அழிக்கப்பட்டபொழுது அதிலிருந்து தப்பியவராவார்.
பிற்காலத்தில் இவர் இஸ்றாயீல் வம்சத்தவருக்கான ரோம சரித்திர ஆசிரியனாய் இருந்தார். இவர் கி.பி 93ல் எழுதிய கூற்று பின்வருமாறு:
“ஈஸா அல் மஸீஹ் ஒரு ஞானமுள்ள மனிதராய் இருந்தார். அவர் அற்புதங்களையும்
ஆச்சரியமான காரியங்களையும் செய்கிறவராய்
இருந்தார். மகிழ்ச்சியோடு சத்தியத்தை பெற்றுக்கொள்ளும் மனிதர்களுக்கு அவர் ஒரு நல்ல ஆசிரியராய் இருந்தார். அவர் அநேக யகூதிகளையும், யகூதிகள் அல்லாதவர்களையும்
தன் பக்கமாக இழுத்து கொண்டார். அவர் அல் மஸீஹ் ஆக இருந்தார். எங்கள் மத்தியில் இருந்த அதிகாரிகளின் ஆலோசனைக்கு இணங்க ரோம பேரரசின் அதிகாரியாகிய
பொந்தியு பிலாத்தென்பவர் அவரை சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.
அவரை நேசித்தவர்கள்
ஒருபோதும் அவரை பின்பற்றுவதை
கைவிடவில்லை. அதனால் அவர் வபாத்தாகி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, அவர்களுக்கு காட்சியளித்தார்.
இதை குறி்த்தும், இன்னும் அவரைக்குறித்த ஏனைய அருமையான காரியங்களைக் குறித்தும் நபிமார்கள் ஏற்கனவே முன்னுரைத்திருந்தனர். அவரிலிருந்து கிறிஸ்தவர்கள்
என்னும் பெயரை பெற்றுக்கொண்ட
சமூகத்தினர் இன்றைக்கும் இருக்கின்றனர்.” (யகூதிகளின் பழங்காலம், புத்தகம் 18ம் அதிகாரம், 3:3ம் வசனம். இது லண்டனைச் சேர்ந்த வில்லியம் விஸ்டோன், மில்னா், சொவெர்பி
என்பவா்கள் ஆங்கிலத்திற்கு
மொழிப் பெயா்த்த “ஃப்லேவியஸ் யோசஃபாஸின் பணி” என்ற நூலின் பக்கம் 392லிருந்து எடுக்கப்பட்டது). இப்படியாக
அநேக ஆதாரங்கள் இருக்கின்றபடியால், நேர்மையாக ஆராயும் எவரும் சத்தியத்தைக்
குறித்தும் இறைவாக்கான வேதாகமத்தைக்குறித்தும் கேள்வி கேட்க மாட்டார்கள்.
புனித வேதாகமம் கெடுக்கப்பட்டதா?
கிறிஸ்தவர்களும் யகூதிகளும் சேர்ந்து வேத வாக்கியங்களை
கெடுத்துவிட்டார்கள் என்று சிலவேளைகளில்
சில முஸ்லீம்கள் சொல்லக் கேட்கின்றோம். அரேபியாவில் இருந்த சில யகூதிகள் முஹமதுவுக்கு
சத்தியத்தை காட்டாமல் ஒளிக்க முயற்சித்தா்கள் என்று குர்ஆன் கூறுகின்றது (சூறா 2:75-79; 146:159-160). அவர்களில் சிலர் தங்களுக்கென்று சொந்தமாக வேத வாக்கியங்களை உருவாக்கி வைத்திருந்தனர் என்றும், பணத்திற்காக அதை விற்பனைச் செய்தனர் என்றும் குர்ஆன் (சூறா 2:79) கூறுகின்றது. ஆனால்,
குரர்ஆன் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இந்த குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. இந்த குற்றச்சாட்டுக்கள் உண்மையென்றால், ஒன்றிணைய முடியாதிருந்த யகூதிகளும், கிறிஸ்தவா்களும்
(சூறா 2:113), பரிசுத்த கிதாப்பான புனித இறைவேதத்தை கெடுக்க ஒனறாகக் கூடி சதியாலோசனை செய்திருப்பார்கள் என்றே இது அர்த்தப்படவேண்டும். அரேபிய தீபகற்பத்தில்
இது நடைபெறுவது சாத்தியமாக இருந்திருந்தால், அதற்கு முன்பதாகவே மூலத்திலிருந்து பிரதிப்பண்ணப்பட்டு, உலகின் பல பாகங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு பல மொழிகளுக்கு மொழி பெயர்க்கப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான பிரதிகளைக் குறித்த விடயம் என்ன?
அவைகள் எல்லாம் எவ்வாறு கெடுக்கப்பட முடிந்தது? இன்றுள்ள பழைய ஏற்பாட்டு, புதிய ஏற்பாட்டு மொழி பெயா்ப்புக்கள் எல்லாம் குறைந்தப்பட்சம்
குர்ஆனுக்கு
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட கையெழுத்துப் பிரதிகளைச் சார்ந்தவையாகும். புனித கிதாபு கெடுக்கப்பட்டிருக்கும் என்றால், அது மேற்கூறப்பட்ட காலத்திற்கு முன்பே நிகழ்ந்திருக்கவேண்டும். குர்ஆனை
விசுவாசிக்கும் எவரும் வேதாகமம் கெடுக்கப்ட்டது எனும் கூற்றை ஏற்க மாட்டார்கள், காரணம், அது கெடுக்கப்பட்டிருக்கும் என்றால், வேதாகமத்தை இறைவனுடைய வார்த்தை என்று விசுவாசியுங்கள் என்று குர்ஆன் முஸ்லீம்களை நோக்கி ஒருபோதும் சொல்லியிருக்காது (சூறா 42:14-15; 29:46; 10:94). வேதாகமத்தின் மாசில்லாத் தன்மையைக் குறித்து குர்ஆன் சாட்சி பகிர்கின்றது.
‘மேலும் உம்முடைய
இறைவனின் வார்த்தை உண்மையாலும்
நியாயத்தாலும் முழுமையாகிவிட்டது - அவனுடைய வார்த்தைகளை
மாற்றுவோர் எவரும் இல்லை
- அவன் (எல்லாவற்றையும்) கேட்பவனாகவும், (யாவற்றையும்) அறிபவனாகவும்
இருக்கின்றான்.’ (சூறா 6:115).
இறுதி நிரூபணம்
குர்ஆன் வேதாகமத்தின்
நம்பகத் தன்மையைக் குறித்து சாட்சி பகிர்ந்தாலும், நாம் வேதாகமத்தை விசுவாசிப்பதற்கு குர்ஆன் எமக்கு கூறத் தேவையில்லை. எவறேனும், முன் நியாயதீர்ப்பின்
சிந்தையில்லாமல் திறந்த மனதோடு வேதாகமத்தை வாசிப்பாரேயென்றால், அவார் நிச்சயமாக அதன் சத்தியத்தால் மனம் மாற்றப்படுவார் என்பது நிச்சயம். நீங்கள் துஆ வோடு வேதாகமத்தை வாசிப்பீர்கள் என்றால், வேதாகமத்தை எழுத அதன் ஆசிரியர்களை உந்தி ஏவிய (அகத்தூண்டிய) ரூஹூல் குத்தூஸ்ஸானவா்
வேதாகமத்தின் சத்தியத்திற்குள் உங்கள் மனதை மாற்றி, புனித வேதாகமம் உண்மையென்றும், அது உங்களுக்கான இறைவனுடைய வார்த்தை என்றும் நீங்கள் ஏற்றிடச் செய்வார். எனவே, அதை திறந்த மனதோடு வாசியுங்கள்,
சத்தியத்தை அறிய இறைவன்தாமே உங்களுக்கு உதவிட அவனுக்கு இடங்கொடுங்கள்.
பரீட்சை. 7
பின்வரும் கேள்விகளுக்கு பதிலளியுங்கள்:
1. நீங்கள் ஏன் வேதாகமத்தை விசுவாசிக்கவேண்டும் என்பதற்கு மூன்று காரணிகளைத் தருக.
2. இயேசுவைக் குறித்த எந்த விடயத்தை யூதா்கள் மறுதளித்தார்கள்?
( ஈசா(அலை) கூறினார்கள் :) “நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான்;
ReplyDeleteஆகவே அவனையே வணங்குங்கள்
இதுவே நேரான வழியாகும். ( குர்ஆன் 3:51)