ஈஸாவின் தனித்துவத்திற்கான காரணங்கள் (அ)
நிகரற்ற ஈஸா அல் மஸீஹ் - பகுதி 8
குர்ஆனிலும் இறைவேதத்திலும் ஈஸா அல் மஸீஹ் அவர்களின் தனித்துவம்
5.
இயேசுவின் தனித்துவத்திற்கான காரணங்கள்
அ). ஈஸா இறை குமாரன்
கன்னிப் பிறப்பு
ஈஸா இறை குமாரனானால்
அவர்
மாம்சத்தில்
பிறக்கையில்,
ஒரு
கன்னியினிடத்தில்
பிறப்பது
மிக
அத்தியாவசியமாய்
இருக்கிறது.
இறை குமாரனாய்
இருப்பதற்கு
அவர்
அனைத்திலும்
நித்தியமானவராய்
இருக்க
வேண்டும்.
ஆகையால்
அவர்
மாம்சத்தில்
வந்தபோதும்
இறை
குமாரனானபடியால்
சரீரப்
பிரகாரமான
தகப்பனிடத்தில்
பிறந்திருக்கவில்லை.
மனித
இனத்தின்
உயிர்
ஆண்
வித்தில்
இருக்கிறது.
ஈஸா
இறை
குமாரனாக
இருப்பதினால்
அவர்
சரீரப்
பிரகாரமான
தகப்பனிடத்தில்
உருவாக்கம்
பெறவில்லை.
சரீரப்
பிரகாரமான
தகப்பனிடத்தில்
பிறக்கும்
எந்த
மனிதனும்
முழுவதும்
மனிதனாகவே
இருப்பான்.
இறைவன்
ஒருவரே
இறை
குமாரனுடைய
தந்தையாக
இருக்க
முடியும்.
இது கன்னி பிறப்பின் முக்கியத்துவத்தையும் அதற்கான காரணத்தையும் விளக்குகிறது. இறுதியில் நாம் கன்னிப்பிறப்பின் விசேட தன்மையைப் பார்க்கின்றோம். அதற்கான முக்கியத்துவம் இப்போது உணரப்படுகின்றது (மெய்ப்பிக்கப்படுகின்றது). ஈஸா ஒரு கன்னிப் பெண்ணிடத்தில் பிறந்திருக்க வேண்டும். அவர்
இறை
குமாரனாய்
இருப்பதற்கும்
அவர்
மனிதனாக
உருவெடுக்கும்
முன்னதாகவே
அவர்
இருக்கிறார்.
ஈஸாவின் அசாதாரணமான பிறப்பிற்கான காரணம், அதன் அவசியம் என்பன இதன் ஊடாக தெளிவாக்கப்படுகின்றது. ஈஸா
அல் மஸீஹ் இறை குமாரனாய் இருந்ததின் நிமித்தமாக இறைவனுடைய விசேட பங்கு, தலையீடு மூலம் அவர் இவ்வாறான தனித்துவமான வழியில் பிறந்தார். எனவே தான் இறைவன் (இயற்கையான களிமண்ணால் உருவாக்கப்பட்ட ஆதம் உட்பட்ட) மற்றைய எல்லா மனிதர்களும் உலகத்தில் பிரவேசிக்க இயற்கையான நியதியை ஏற்படுத்தியிருந்தார். ஆனால் ஈஸாவின் பிறப்பில் விசேட பங்களிப்பு காணப்பட்டது. ஆதம் எதிலிருந்து உருவாக்கப்பட்டானோ,
அதே
தூசியினால்
மற்றைய
அனைத்து
மனிதர்களும்
உருவாக்கப்பட்டார்கள்.
ஆனால்
ஈஸா இறை
ஆவியினால்
கர்ப்பம்
தரித்தார். எனவே அவர் இறை குமாரன். எனவே இப் பூமியில் இப்படி தனித்துவமான ஆரம்பத்தினை அவரது வாழ்வில் கொண்டிருந்தார் - ஏனெனில் அவர் தன்னில்தான் தனித்துவமானவர்.
எனவே
இறை
குமாரனாவார். இந்த அதிசயமான கர்ப்பந்தரித்தலை விளங்கப்படுத்த வானதூதர் மரியமிடத்தில் வந்தபோது சொன்னது இதைத்தான்:
“அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்.. ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்”
(லூக்கா 1:32,35).
இயேசுவின் பாவமற்ற தன்மை
இறைவனுக்கு விரோதமாக
ஈஸா அல் மஸீஹ்
பாவம்
செய்திருப்பாரானால்
ஒரு
கிறிஸ்தவனும்
அவரை
தேவனுடைய
குமாரனாக
விசுவாசித்திருக்க
மாட்டான்.
அவர்
இறை குமாரனாய்
இருப்பதற்கு
பாவமற்றவராய்
இருப்பது
அவசியமாகும்.
பிதாவும்
குமாரனும்
ஒருவரானபடியால்
ஈஸா அல் மஸீஹ்
சொன்ன
பிரகாரம்
யோவான்
10:30, குமாரன்
எப்போதும்
அவரது
பிதாவின்
சித்தத்தை
செய்வார்.
இதை
நாம்
அவர்
செய்வதில்
காண்கிறோம்
பின்வரும்
வார்த்தையில்:
“அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார் அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்” (யோவான் 5:19).
அவர் இறை குமாரனானால், அவர் பிதாவோடு ஒருவராய் இருக்க வேண்டும். ஆகையால் அவர் தனது சொந்த சுய சித்தத்தில் எதனையும் செய்ய முடியாது. அவர் எதையாகிலும் தன்னிச்சையாக சுயவிருப்பத்தின்படி செய்வாரானால் அவர் பிதாவோடு ஒருவராகவோ, அல்லது பிதாவானவர் செய்வதை நடப்பிக்கிறவராகவோ இருக்க முடியாது. எனவே அவர் இறை குமாரனாய் இருக்கலாகாது. எவனொருவன் மிகச் சரியாக இறை சித்தத்தை செய்கிறானோ அவர் இறைவனுக்கு விரோதமாக பாவம் செய்ய முடியாது. ஆகவே நாம் பார்க்கக்கூடியதாயிருக்கிறது என்னவென்றால் ஈஸா அல் மஸீஹ் பாவமற்றவராய் இருப்பது எவ்வளவு சாலச்சிறந்தது அவர் இறை குமாரனாக இருப்பதால் - ஏனெனில் இறை குமாரன் மட்டுமே பிதாவின் சித்தத்தை எப்பொழுதும் செய்கிறவராய் இருக்கிறார். ஈஸா அல் மஸீஹ் கூறினார்:
“பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறேன்” (யோவான் 8:29).
எனவே நாம் ஈஸா அல் மஸீஹ்வை மாத்திரமே குற்றமற்றவரும் பாவமற்றவருமாய் காண்கிறோம். சாதாரண மனிதன் அவனது சுய விருப்பில் காரியங்களை செய்கின்றான். ஆனால் இறை குமாரன் மட்டுமே பரத்திலிருக்கிற தனது பிதாவின் சித்தத்தை செய்கிறவராய் இருக்கிறார்.
(தொடரும்)
Comments
Post a Comment