நாம் ஈஸாவை பின்பற்றினால் எங்கே போவோம்?
நாம் ஈஸாவை பின்பற்றினால் எங்கே போவோம்?
அன்புள்ள சகோதரன்
நூருல் அமீன் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு
அலைக்கும்.
அநேக நாட்களாக உங்கள் பதில் கடிதத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.
இன்று காலை உங்கள் கடிதம் என் கரம் வந்தடைந்தவுடன் மிகவும் ஆசையோடு வாசித்தேன். உங்கள்
குடும்பத்திற்கு அல்லாஹ் கொடுத்த சுகத்திற்காக அவனுக்கு நன்றி கூறுகிறேன். அல்ஹம்துலில்லாஹ், என் குடும்பத்தார்
மீது நீங்கள் வைத்துள்ள அன்புக்காக உங்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். உங்கள்
வியாபார அலுவல்களுக்கு மத்தியில் அல்லாஹ்வுக்காக உங்கள் நேரத்தை ஒதுக்கி எழுதியமைக்காக
மீண்டும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன்.
உங்கள் பதில் கடிதத்தில் நான் நீங்கள் காண்பிக்கும் குர்ஆன்
வசனங்களையெல்லாம் மறுப்பதாக கூறியிருந்தீர்கள். அது உங்களுக்கு என் பதில் கடிதத்திலிருந்து
புரிந்த விடயமாக இருக்கலாம்.
அதனை நான் மறுத்து வாதிட்டால் எங்கள் இருவர் மத்தியிலிருக்கிற நல்லுறவு முறிய வாய்ப்புள்ளதால்
அதனை நாங்கள் விட்டுவிடுவோம். இனிவரும் கடிதங்களிலாவது உங்களுக்கு புரிகின்ற வண்ணம் எழுத முயற்சிசெய்கின்றேன். இதற்கு
முன்பு நீங்கள் எழுதிய கடிதங்களில் காண்பித்த சில குர்ஆன் வசனங்களுக்கு சாரியான தப்ஸீர் விளக்கத்தை
இக்கடிதத்தில் பார்ப்போம்.
சூரா ஆல இம்ரான் 42-55
3:42
'மலக்குகள் கூறிய சமயத்தில் மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உங்களைத்
தேர்ந்தெடுத்திருக்கிறான். உங்களை பாரிசுத்தமாகவும் ஆக்கியிருக்கிறான். உலகத்திலுள்ள பெண்கள் அனைவரைவிட
உங்களை மேன்மையாக்கி வைத்திருக்கிறான்”
3:43
'ஆகவே மர்யமே! நீங்கள் உங்களுடைய இறைவனுக்கு வழிப்பட்டு குனிந்து
வணங்குபவர்களுடன் நீங்களும் குனிந்து (சிரம்பணிந்து) வணங்குங்கள
இன்ஜீல் ஷரீப் எழுதப்படுவதற்கு முன்பு 400 வருஷங்கள் வேதத்தையுடையோருக்காக
பேசுவதற்கு ஒரு நபியும் இல்லாமல் இருந்தார்கள். அல்லாஹ்வின் ஜனங்களோ நம்பிக்கை இழந்து, திடனற்றுக்
கிடந்தனர்.
துன்யாவின் சாரித்திரத்தில் அது ஒரு இருளான சமயம், இயல்புக்கு
மிகவும் மாறாக அல்லாஹ் ஒன்றை செய்தான். ஜிப்ரீல் (அலை) மூலம் அல்லாஹ் இளம் கன்னிப்பெண்ணாகிய
மாரியமுடன் பேசினான்.
ஒரு சிறப்பான பணியை நிறைவேற்றுவதற்காக, அல்லாஹ் உங்களை தேர்ந்து கொண்டான்
என்று ஜிப்ரீல்
(அலை) அவர்கள் கூறினார்கள். ஆனால் முதலில் மர்யம் ஒரு உண்மையான முஸ்லிமாக இருக்கும்படி
தான் பெற்ற அழைப்பை உறுதி செய்து கொண்டார். அல்லாஹ்விற்கு தன்னை ஒப்புக்கொடுத்து, கீழ்ப்படிந்திருக்கும்படி
மர்யம் (அலை) அவர்களுக்கு சொல்லப்பட்டது.
3:44
'இவை மறைவான விஷயங்களாகும்.
இவைகளை நாம் வஹியின் மூலம் அறிவிக்கின்றோம். அன்றி மர்யமை யார் பொறுப்பேற்றுக் கொள்வது
என்று அவர்கள் தங்கள் எழுதுகோல்களை எறிந்தபோதும் நீங்கள் அவர்களுடன் இருக்கவில்லை.
அவர்கள் தர்க்கித்துக் கொண்டபோதும் நீங்கள் அவர்களுடன் இருக்கவில்லை.
மலக்குகள் இடையே சுவர்க்கத்தில் நடைபெற்ற செயற்பாடுகளை
பார்க்கும்படி குர்ஆன் நமக்கு உதவிசெய்கிறது. மர்யமை பாதுகாக்கும் மலக்காக இருக்கும்படி
அனைத்து மலக்குகளும் விரும்பியதை நம்மால் பார்க்கமுடிகிறது. இந்த பிரச்சினையை தீர்த்துக்கொள்ள
மலக்குகள் தங்களுக்குள்ளே சீட்டுப்போட்டு அல்லாஹ் நியமித்த வேலைக்கு சரியான மலக்கை
நியமித்தார்கள்.
சுவர்க்கத்தில் இதைவிட மிகவும் ஆச்சாரியமான சம்பவம்
நடந்ததாக நாம் குர்ஆனில் வாசிக்க முடியாது. இந்த துன்யாவின் எல்லா ஜனங்களுக்காகவும்
அல்லாஹ் சிறப்பான ஒரு காரியத்தை
செய்தான். இதற்கு முன்போ அல்லது இதற்குப் பிறகோ இவ்வளவு சிறப்பான ஒரு சம்பவம் நடந்ததேயில்லை.
3:45
(மேலும், மர்யமை நோக்கி) மலக்குகள் 'மர்யமே!
நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய (ஆகுக! என்ற) ஒரு வார்த்தையைக் கொண்டு உங்களுக்கு (ஒரு
குழந்தையை அளிக்க) நற்செய்தி கூறுகிறான்” என்றும் 'அதன் பெயர் அல் மஸீஹ் ஈஸா” இப்னு
மர்யம் என்பதாகும். அவர் இம்மை மறுமையில் மிக்க கம்பீரமானவராகவும், (இறைவனுக்கு)
மிக்க நெருங்கியவர்களில் ஒருவராகவும் இருப்பார்” என்றும் கூறினார்கள்.
ஈஸா அல் மஸீஹ்வை பெற்றெடுக்க மர்யம் தெரிந்து கொள்ளப்பட்டதை 45-ம் ஆயத்தில் அறிவிக்கிறது.
உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லீம்கள் 'ஈஸா அல் மஸீஹ்” அவர்களுக்கு இரண்டு
பெயர்களை வைத்திருக்கிறார்கள் 'ஈஸா கலிமதுல்லாஹ்” (அல்லாஹ்வின் வார்த்தை)
மற்றும் 'ஈஸா ரூஹுல்லாஹ்” (அல்லாஹ்வின் ஆவி) ஏன் ஈஸாவை இந்த இரண்டு பெயர்களாலே அழைக்கிறோம்? இதற்கான பதிலை சூரா
ஆல இம்ரான் 3:45 மற்றும் சூரா அல்
அன்பியா 21:91-ல் பார்க்கலாம். மர்யமிற்குள்
அல்லாஹ் தன்னுடைய வார்த்தையை வைப்பேன் என்று கூறுகிறான். யார் அல்லது என்ன அல்லாஹ்வின்
'வார்த்தை”? இதை சாரியாக புரிந்துகொள்ள சூரா அல்
அன்பியா 21:91-ஐ ஓதுங்கள், '...தன் கற்பைக் காத்துக்கொண்ட
(மர்யம் என்ப) வரை (யும் நீங்கள் ஞாபகமூட்டுங்கள். ரூஹின் மூலம் அவருடைய கர்ப்பத்தில்
நாம் ஊதினோம். அவரையும் அவருடைய மகனையும் உலகத்தாருக்கு ஒரு அத்தாட்சியாகவும் ஆக்கினோம்” ஈஸாவை நாம் ஏன் ஈஸா கலிமதுல்லாஹ் என்றும் ஈஸா ரூஹுல்லாஹ்
என்றும் சொல்லுகிறோம்? குர்ஆன் அதை தெளிவாக்குகிறது, 'ஈஸாவே வார்த்தை (கலிமா)
மற்றும் ஆவி (ரூஹ்) யானவர். வேறு எந்த நபரும் அல்லது நபியும் இந்த பட்டத்தை பெறவில்லை.
அல்லாஹ்வின் 'வார்த்தை” மற்றும்
'ஆவி” மர்யமின்
கர்ப்பத்தில் வைக்கப்பட்டு மாமிசமாகி குழந்தையாக பிறந்தார். அல்லாஹ் மர்யமிடம் 'ஈஸா
மஸீஹ்” என்று
பெயர் வைக்க சொன்னான். மஸீஹ் என்றால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் அல்லது வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவர் என்று அர்த்தம். ஈஸா பிறப்பதற்கு 758 வருடங்களுக்கு முன்னே
ஏசாயா நபி இவ்வாறு எழுதியிருக்கிறார்.
'...இதோ, ஒரு
கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனை பெறுவாள், அவருக்கு
ஷஇம்மானுவேல்’ என்று
பெயரிடுவாய்” (ஏசாயா. 7:14)
இம்மானுவேல் என்ற எபிரேய வார்த்தையின் அர்த்தம் இறைவன் நம்மோடிருக்கிறான்.
ஈஸா இம்மையிலும், மறுமையிலும் எல்லோராலும்
கனப்படுத்தப்படுவார். மேலும் அவர் அல்லாஹ்விற்கே மிக்க நெருக்கமானவராகவும் இருப்பார்.
குர்ஆன் ஈஸாவை “அல்லாஹ்வின்
வார்த்தை என்றும், அல்லாஹ்வின் ரூஹ் என்றும் 'வாக்குத்தத்தம்
பண்ணப்பட்டு அபிஷேகம் பண்ணப்பட்ட
ஒருவர் என்றும் (எல்லா) உலகத்தாருக்கும் ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்” (அல் அன்பியா 21:91) என்று ஈஸாவை
நமக்கு தெளிவாக படம்பிடித்துக் காட்டுகிறது. நாம் முன்பு போகாத இடத்திற்கு போக வேண்டுமானால்
நம்மை வழிநடத்த ஒரு அடையாளத்தை தேடுவோம். நாம் ஈஸாவை பின்பற்றினால் எங்கே போவோம்?
3:46 'அன்றி
அவர் தொட்டியில் இருக்கும் பொழுதும், வாலிப பருவத்திலும் மனிதர்களுடன்
பேசுவார். தவிர நல்லொழுக்கமுடையவர்களில் ஒருவராகவும் இருப்பார்.
ஈஸாவின்
பிறப்பு முழு உலகிற்கும் ஒரு செய்தியாகவும், நல்லொழுக்கமுடைய ஒருவராகவும் இருந்தார்.
ஈஸா எப்படி நல்லொழுக்கமுடையவர்? சூரா மர்யம் 19:19-ல் ஈஸா ஒரு பரிசுத்தமான மகனாக இருப்பார் என்று அல்லாஹ்
மர்யமுக்கு சொன்னார், ஈஸா யாரையும் கொலை செய்யவில்லை, ஈஸா பணத்திற்காக
ஆசைப்படவில்லை,
அவர் நிக்காஹ்
செய்யவில்லை. மதத்தலைவர்களிடம் காணப்பட்ட நேர்மையற்ற அசுத்தங்களுக்கு எதிராகப் பேசினார், அவர் ஒவ்வொரு நாளும் தொழுது, துஆ செய்தார், 40 நாட்கள்
இரவும் பகலும் ஒன்றும் சாப்பிடாமல் நோன்பு பிடித்தார், நமக்கு
தீமை செய்பவர்களை அன்பு கூறச் சொன்னார் என்று இன்ஜில் ஷரீப் நமக்கு போதிக்கிறது. ஈஸா எப்பொழுதும்
பாவம் செய்யவே
இல்லை. ஈஸா எப்பொழுதாவது பாவம் செய்திருப்பாரானால் அவர் அல்லாஹ்வின் கலிமதுல்லாஹ் அல்லது
ரூஹுல்லாஹ்வாக அல்லாஹ்வோடு இருக்கும்படி சுவர்க்கத்திற்கு சென்றிருக்கவே மாட்டார்.
ஈஸாவின் மூலம் அல்லாஹ் உலகத்திற்கு ஒரு உண்மை முஸ்லிம் எப்படி இருக்க வேண்டுமென காண்பித்தார்.
நாம் எல்லோரும் ஈஸாவைப் போல வாழ்ந்தால் இந்த உலகம் ஒரு அற்புதமானதாக இருக்கும்!
3:47 (அதற்கு மர்யம்)என்
இறைவனே! ஒருவருமே என்னைத் தீண்டாதிருக்கும்போது, எனக்கு எவ்வாறு சந்ததி ஏற்பட்டுவிடும்? என்று கூறினார். 'இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியதை
படைக்கின்றான். அவன் ஒரு பொருளை நாடினால் அதனை ‘ஆகுக’ என அவன் கூறியவுடனே அது ஆகிவிடும். என்று கூறினான்.
அல்லாஹ் கொடுத்த செய்தியை கேட்டு மர்யம் அதிர்ச்சியடைந்தார்.
மர்யம் அல்லாஹ்விடம், 'எனக்கு இன்னும் நிக்காஹ் ஆகவில்லை, எந்த
மனிதரும் இதுவரை என்னை தொடவும் இல்லை. பின்பு எப்படி எனக்கு பிள்ளை உண்டாகும் என்று
கேட்டார்” அல்லாஹ்
மர்யமிடம் மிகப் பொறுமையோடிருந்து அவருக்கு பதில் சொன்னார். 'நான்
அல்லாஹ், நான்
நாடியதை என்னால் மிகவும் சுலபமாக செய்யமுடியும்” என்றார்.
அல்லாஹ் எதையும் விபத்தாக செய்கிறவன் அல்ல, தன்னுடைய நேர்த்தியான
திட்டத்தின்படியே எல்லாவற்றையும் அல்லாஹ் செய்கிறவன். அல்லாஹ் ஈஸாவை தகப்பனில்லாமல்
ஏன் பிறக்க வைத்தான்? தகப்பனில்லாமல் பிறந்த
வேறொரு நபியை உங்களுக்கு தெரியுமா? எல்லா முஸ்லீம்களுக்கும்
இந்த சம்பவம் என்ன சொல்லுகிறது?
இந்த கேள்விக்கு பதில் சொல்வதற்கு ஆதமின் வாழ்க்கையை மிக அருகில்
சென்று பார்க்க வேண்டும். ஆல இம்ரான் 3:59-ல் ஈஸாவுக்கு
உதாரணம் ஆதம் நபியின் உதாரணத்தைப் போன்றதே! என்று குர்ஆன் கூறுகின்றது. இவர்கள் இருவரும்
ஒரேவிதமானவர்கள். ஏனென்றால் இந்த இருவருக்கும் தகப்பன் இல்லை. ஆதம் நபி அல்லாஹ்விற்கு
கீழ்ப்படியாமல் போனதற்கு முன்பு ஏதேன் தோட்டத்தில் அல்லாஹ்வுடன் நடந்தார், அல்லாஹ்வின்
பிரசன்னத்தில் ஆதம் நபி எப்பொழுதும் இருந்து இறைவனோடு பேசினார். ஏனெனில் அவர் ஈஸாவைப்
போல எந்த பாவமும் செய்யவில்லை. ஆரம்பத்தில் ஆதமும் நல்லொழுக்கமும், பாரிசுத்தமும் உள்ளவராக
இருந்தார். ஏனென்றால் ஆதம் அல்லாஹ்வின் ரூஹினாலே உருவாக்கப்பட்டவர். ஒரு முறை ஆதம்
நபி அல்லாஹ்வுக்கு கீழ்ப்படியாமல் போனார். இப்பொழுது அவர் பாவம் செய்தபடியால் அவருக்கு
ஏதேன் தோட்டத்தில் இறை பிரசன்னத்தில் இருக்கமுடியாமல் போனது.
சூரா தாஹா 20:121ஐ வாசியுங்கள், 'ஆகவே அவ்விருவரும் (ஆதமும் அவன் மனைவியும்) அதனை
புசித்துவிட்டார்கள். உடனே அவ்விருவரின் மானமும் வெளியாகவே
அச்சோலையின் இலைகளைக்கொண்டு தங்களை மறைத்துக்கொள்ள முற்பட்டார்கள். ஆகவே ஆதம் தன் இறைவனுக்கு
மாறு செய்து வழித்தவறிவிட்டார்”
'ஈஸா
மஸீஹ்” அவர்களைத்
தவிர நிச்சயமாக நாமெல்லாரும் ஆதமின் பிள்ளைகளாயிருக்கிறோம். பேரீச்சம் மரம்
பேரீச்சம் பழத்தை
தரும். பெரீச்சம் மரம்
எழுமிச்சப் பழத்தை தருமா? ஆதமின் சந்ததியில் பிறந்த எல்லோரும் ஆதமின் சுபாவத்தை
பெற்றிருக்கிறோம். ஆதமுடைய பாவத்தின் சாபம் அவனுடைய பின் சந்ததிகளை பாவத்திற்குள்ளாக்குகிறது.
பாவமே செய்யாத ஒரே நபர் ஈஸா அல் மஸீஹ் மட்டுமே! அவர் பாவம் செய்யவில்லை காரணம் அவர்
ஆதமின் இரத்த சம்பந்தமான வரிசையில்
வரவில்லை. ஆதமின் பாவ சுபாவத்தை ஈஸா சுதந்தரிக்கவில்லை. ஆதமின் பாவ சுபாவத்தை ஈஸா பெறாமல் இருக்கும்படி அல்லாஹ்
இவ்வாறு திட்டமிட்டான்.
இன்றைக்கு இத்துடன் முடிக்கிறேன். தொடர்ந்து வாசிப்பது இலகுவான
காரியமல்ல என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் எப்படியென்று எனக்குத்
தெரியாது. என்னுடைய அனுபவத்தைத்தான் கூறினேன். தொடர்ந்தும்
உங்கள் கடிதத்தை எதிர்ப்பார்த்தவண்ணமாக நிறைவுசெய்கிறேன்.
வல்ல நாயன் ஹிதாயத் கொடுப்பானாக! ஆமீன்.
இப்படிக்கு
இறைநேசன்
Comments
Post a Comment