குர்பானின் உண்மையை நீ அறிவாயா?
குர்பானின் உண்மையை நீ அறிவாயா?
அறிமுகம். (பகுதி 1)
”முஃமின்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அவன்பால் நெருங்குவதற்குரிய வழியை தேடிக் கொள்ளுங்கள்". சூரத்துல் மாயிதா (5):35
”முஃமின்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அவன்பால் நெருங்குவதற்குரிய வழியை தேடிக் கொள்ளுங்கள்". சூரத்துல் மாயிதா (5):35
“நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது. நிச்சயமாக, அவனே ஆதியில் உற்பத்தி செய்தான், மேலும் மீள வைக்கிறான்.” சூரத்துல் புரூஜ் (85):12,13.
”நீங்கள் ஒரு மனிதனை கொன்றீர்கள்; பின் அதுபற்றி (ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டித்) தர்க்கித்துக் கொண்டிருந்தீர்கள்; ஆனால் அல்லாஹ் நீங்கள் மறைத்ததை வெளியாக்குபவனாக இருந்தான் (என்பதை நினைவுகூறுங்கள்). (அறுக்கப்பட்ட அப்பசுவின்) ஒரு துண்டால் (அக்கொலை யுண்டவனின் சடலத்)தில் அடியுங்கள்" என்று நாம் சொன்னோம். இவ்வாறே அல்லாஹ் இறந்தவர்களை உயிர்ப்பிக் கிறான். நீங்கள் (நல்ல) அறிவு பெறும் பொருட்டுத் தன் அத்தாட்சிகளையும் அவன் (இவ்வாறு) உங்களுக்குக் காட்டுகிறான். 'இதன் பின்னரும் உங்கள் இதயங்கள் இறுகி விட்டன, அவை கற்பாறையைப் போல் ஆயின அல்லது, (அதை விடவும்) அதிகக் கடினமாயின. (ஏனெனில்) திடமாகக் கற்பாறைகள் சில வற்றினின்று ஆறுகள் ஒலித்தோடுவதுண்டு. இன்னும், சில பிளவுபட்டுத் திடமாக அவற்றினின்று தண்ணீர் வெளிப்படக் கூடியதுமுண்டு. இன்னும், திடமாக அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் சில (கற்பாறைகள்) உருண்டு விழக்கூடியவையும் உண்டு. மேலும், அல்லாஹ் நீங்கள் செய்து வருவது பற்றி கவனிக்காமல் இல்லை.” சூரத்துல் பகரா:72-74

“இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ராயீலர்களிடம் அவர்) நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்;. நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்;. அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்;. அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்;. நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது.” சூரத்துல்ஆலஇம்ரான் (3):49
எமது ஆன்மீக பிரயாணத்தில் அல்லாஹுதாலாவை அண்மிக்கும் (குர்ப்) ”அணுகுமுறையின் வழியை" தேட வேண்டுமென குர்ஆன் எமக்கு நினைப்பூட்டுகிறது. இந்த “அணுகுமுறையின் வழி" குர்பான் என்பதை நாம் இதுவரை கற்றோம். உயிர்த்தெழும் நாளுக்கு முன் அல்லாஹ்வை அணுக முடியும் என்பதை சிலர் எதிர்க்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வானவன் உலக மனிதனைவிட மேலானவன்! எனவே இறுதி தீர்ப்பு நாள்வரை இருவரும் சந்திக்க முடியாது என்பார்கள். ஆனால் இது உண்மையல்ல. ஆதம் நபி அவர்கள் பூமியில் இருக்கும்வரை அல்லாஹுதஆலா அவனுடன் உறவாட விரும்பினான் என திரும்பத் திரும்ப அல்-குர்ஆன் உரைக்கிறது. அல் குர்ஆன் எமக்குரைக்கும் ''அணுகுமுறையின் வழி'' பற்றிய விபரங்கள் இப்பூமியில் உயிருடன் வாழ்ந்த முஃமின்களைப் பற்றியது. அல்லாஹ்வி;;ன் வழிகளை தேடவேண்டியது எமது மேலான கடமை. அல்லாஹ்வுக்கு அடிபணிந்து மற்றையவர்களுக்கு சேவை செய்யும் வாழ்க்கைக்கான பெலன் இறை சந்நிதானத்தில் மட்டுமே கிடைக்கும். அந்த பரிசுத்த பிரசன்னத்தில் மட்டுமே மனிதனின் ஆன்மா இறைவனின் ஆன்மாவின் பூரணத்தை அடையும்.
தொடரும்
Comments
Post a Comment