குர்ஆனில் ஈஸா அல் மஸீஹ்வின் தனித்துவம் (ஆ)

நிகரற்ற ஈஸா அல் மஸீஹ் - பகுதி 7

குர்ஆனிலும் இறைவேதத்திலும்  ஈஸா அல் மஸீஹ் அவர்களின் தனித்துவம்

குர்ஆனில் ஈஸா அல் மஸீஹ்வின் தனித்துவம் (ஆ)

). ஈஸா அல் மஸீஹ்வின் பாவமற்ற தன்மை

மனிதர்களுள் ஈஸா மாத்திரம் பாவற்ற நபராக இருப்பது ஏன்? குர்ஆன் அவரது பாவமற்ற தன்மையைக் கூறினும் அதற்கான காரணத்தை முன்வைக்கவில்லை. அவர் ஒரு நபி எனும் தகவல் எம் கேள்விக்கான பதிலைத் தரவில்லை. குர்ஆனில் ஏனைய நபிமார்கள் பாவமற்றவர்களாக கூறப்படவில்லை, அத்துடன் ஒருசிலர் தவறு செய்தவர்களாகக் காண்பிக்கப்பட்டுள்ளனர். ஆனால் நாம் மீண்டும், கட்டாயமாக கேட்க வேண்டிய கேள்வி - மற்றையவர்களுள் ஈஸா மாத்திரம் பாவமற்றவராக இருப்பது ஏன்? ஏனைய நபிமாரும் தமக்கே உரித்தான விசேஷித்த தன்மைகளைக் கொண்டிருந்து, ஈஸா அல் மஸீஹ் ஒரு தனித்துவமான தன்மையைக் கொண்டிருந்தால் அவர் வெறுமனே ஒரு தூதுவராக மட்டுமே இருந்திருப்பார் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகின்றது. ஆனால் இவ் அனைத்து தனித்துவமான தன்மைகளும், ஏனையவர்களுக்கான கிரயமாக இந்த ஒரு நபருக்கே அளிக்கப்பட்டுள்ளது - அந்த மனிதன் ஈஸா அல் மஸீஹ். மீண்டுமாக இங்கு, ஈஸாவை தனித்துவமாக்கியது என்ன என்பதை குர்ஆன் வெளிப்படுத்தவில்லை.

). ஈஸா அல் மஸீஹ் இறைசந்நிதானத்துக்குச் செல்லல்

ஈஸாவின் பரமேறுதலுக்கு குர்ஆன் ஒரேயொரு காரணத்தையே முன்வைக்கின்றது - யூதர்கள் ஈஸாவைக் கொலை செய்ய முயற்சித்தமையால், அவர்களிடமிருந்து காப்பாற்றும்பொருட்டு இறைவன் ஈஸாவை எடுத்துக்கொண்டார். எனினும் ஏறத்தாழ இருபது நூற்றாண்டு காலமாக ஈஸா அல் மஸீஹ் தம் சமூகத்தில் இருக்கும் மகிழ்ச்சியை கொண்டாடும்படி, இறைவன் அவரை ஏன் தெரிந்துகொண்டார் என்பதற்கு இக்கருத்து போதிய விளக்கம் தரவில்லை. யூதர்களிடமிருந்து காப்பாற்றுவது மட்டுமே அவரது ஒரே நோக்கமாக இருந்திருந்தால், அவரைக் கொலை செய்யத் தேடியவர்கள் இறந்த பின்பும் இறைவன் ஏன் அவரை மீண்டும் அனுப்பவில்லை. ஈஸா அல் மஸீஹ்வும் அவருக்கு முன்பாக வாழ்ந்த மற்றையவர்களைப் போன்ற ஒரு தூதுவராக இருந்திருந்தால், நிச்சயமாக இறைவன் அவரை காப்பாற்றுவதற்கு பல வழிமுறைகளைப் பயன்படுத்தியிருப்பார். ஆயினும் யூதர்களிடமிருந்து அவரைக் காப்பாற்றுவதற்கு, இது மிகவும் அசாதாரணமானதும் தீவிரமானதுமான ஒரு வழிமுறையாகும்.

இவ் வாதத்திற்கான மிகவும் உறுதியான ஒரு ஆதாரம் இறைவேதத்தில் உண்டு. ஈஸா அல் மஸீஹ்வின் பிறப்பிற்குப் பின்னர், யூதேயாவின் இராஜாவான ஏரோதுவுக்கு, நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த மேசியா பெத்லகேமில் பிறந்துள்ளார் எனும் செய்தி எட்டியபோது அவரை கொல்ல வகை தேடினான்.

'அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான் (மத்தேயு 2:13).

ஏரோது இறந்தபின்பு, கர்த்தனுடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குச் சொப்பனத்தில் காணப்பட்டு: நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்திற்குப் போ; பிள்ளையின் பிராணணை வாங்கத்தேடினவர்கள் இறந்து போனார்கள் என்றார்          (மத்தேயு 2:20).

யூதர்களிடமிருந்து ஈஸா அல் மஸீஹ்வை காப்பாற்ற இறைவன் முயற்சி செய்திருப்பாரானால், நிச்சயமாக இறைவன் இதே வழிமுறையைக் கையாண்டிருப்பார். யூதர்களின் கைக்கு ஈஸா தப்புவிக்கப்படும் - வழிமுறையாக மட்டுமே பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் எனும் கொள்கையை நாம் நிச்சயம் நிராகரிக்க வேண்டும். அவரை கொலை செய்யத் தேடியவர்கள் பத்தொன்பது நூற்றாண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்கள், ஆனால் இறைவன் ஈஸா அல் மஸீஹ்வை தொடர்ந்தும் பரலோகத்தில் தம் சமூகத்தில் இருப்பதில் பிரியப்படுகிறார். அத்துடன் அவர் பூமியிலிருந்து இறை அர்ஷிற்கு ஏறியது முதல், கடந்த சந்ததி சந்ததியாக அவ்விதமே செய்து வருகிறார்.

எவ்விதத்திலும் ஈஸா அல் மஸீஹ் பரத்திற்கு எடுத்துக்கொள்வதே இறைவனுடைய நோக்கமாக இருந்ததுடன் யூதர்களின் கைக்கு ஈஸாவை தப்புவிப்பதற்காக மாத்திரமே அவர் நிச்சயமாக இவ்விதம் செய்யவில்லை என நாம் முடிவு செய்யலாம். நாம் மீண்டும் கட்டாயமாகக் கேட்க வேண்டிய கேள்வி - வேறெந்த மனிதனும் அல்லாமல், ஏன் ஈஸா அல் மஸீஹ் மாத்திரம் பரத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்? (யோவான் 3:13). ஈஸா அல் மஸீஹ் இப் பூமியில் வாழ்ந்த காலத்திற்கும் காலத்தின் இறுதிக்கும் இடைப்பட்ட காலத்தில், ஈஸா அல் மஸீஹ் மகிமையில், உன்னத பரலோகத்தில் தம்முடன் ஆளுகை செய்ய வேண்டும் என சித்தம் கொண்டார்? இவ் அனைத்து கனத்தின்படி, குர்ஆன் இக் கேள்விக்கு பதில் அளிக்கவில்லை எனும் முடிவுக்கு நாம் வர வேண்டியுள்ளது.

). இரண்டாம்-வருகை

முழு உலகத்தையும் தம்முடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு இறைவன் ஏன் ஈஸா அல் மஸீஹ்வைத் தெரிந்துகொண்டார்? ஏன் முகம்மதுவைத் தெரிவுசெய்யவில்லை? ஏனைய நபிமார்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புக்களுக்கு மேலான மற்றுமொரு மகிமையான பொறுப்பை அளிப்பதற்கு, அவர் வேறொரு மனிதனை எழுப்பாமல், ஏன் ஈஸா அல் மஸீஹ்வை தெரிந்துகொண்டார்?

இவ்விதமான கேள்விகளுக்கு பதிலளிப்பதை விட்டுவிட்டு, எம் கண்ணோட்டத்தில், முஸ்லீம் உலகானது, ஈஸா அல் மஸீஹ்வின் தனித்துவம் பற்றிய தன்னகத்தே கொண்டுள்ள தகவல்களை வெளிக்கொணராது, அத் தனித்துவத்தை விளங்கப்படுத்தாத முயற்சிகளுக்கு தன்னை அர்ப்பணித்துள்ளது. ஈஸா அல் மஸீஹ்வின் மகிமையை ஆராய்வதை விட்டு, அதனை விளக்க முற்படாத இவ் வழமை தவறான பாதைக்கே இட்டுச் செல்லும்.

ஈஸாவின் அற்புதமான பிறப்பு இறைவனுடைய நேரடியான இடைப்படுதல் மூலமே ஏற்பட்டது. அவரது முழு வாழ்வுமே இறைவனுடனான முழுமையான ஐக்கியத்தைக் கொண்டிருந்தது. அதே இறைவன் ஈஸா அல் மஸீஹ்வை பரலோகத்திற்கு எடுத்துக்கொண்டதன் மூலம் மாட்சிமையாலும் கனத்தினாலும் முடிசூடினார். மேலும் மனித வரலாற்றின் இறைவனுடைய இறுதி நியாயத்தீர்ப்பினை அறிவிக்க வருபவராக கூறியுள்ளார். இவ் அனைத்து தனித்துவமான தன்மைகளையும் ஒன்றிணைத்து பார்க்க, ஈஸா அல் மஸீஹ் எனும் நபரில் குறிப்பாக மகிமையான ஏதோவொன்று இருப்பதை இக் கூற்றுக்கள் வலியுறுத்தவில்லையா? இறைவனிடமிருந்து நபியாகவும் தூதுவராகவும் ஈஸா அல் மஸீஹ் மாத்திரமே வந்திருப்பாரானால், நிச்சயமாக அவை அனைத்தும் அர்த்தமற்றவையாகும்.
இந் நிபந்தனைகள் அனைத்தும் ஈஸா எனும் நபரைப் பற்றி மாட்சிமையான விடயம் இருப்பதற்கான சான்றாக உள்ளன. ஆனால் அது எவ்வாறாயினும் குர்ஆன் இவ்விடயத்தில் அமைதியாகவே உள்ளது. ஏன்? இதற்கான பதில் தொடர்ந்து வரும் பகுதியில் உள்ளது. கிறிஸ்தவ உலகம் குர்ஆனை அறிந்திருப்பது, அது ஈஸா அல் மஸீஹ்வைப் பற்றி எவ்வளவு விடயத்தை தன்னகத்தே கொண்டுள்ளது என்பதன் அடிப்படையில் அல்ல, மாறாக, அது எவ்வளவாய் ஈஸா அல் மஸீஹ்வை மறுதலிக்கின்றது என்பதன் அடிப்படையிலேயே. குர்ஆன் ஈஸா அல் மஸீஹ் இறைவனுடைய குமாரன் என்பதையும் அவர் சிலுவையில் அறையப்பட்டார் என்பதையும் மறுதலிக்கின்றது.

எமது கண்ணோட்டத்தில், எமக்குள்ள உரிமையின் அடிப்படையில் நாம் உண்மையென விசுவாசிப்பதை உறுதியாகவும் கனத்துடனும் அறிக்கையிட்டு நாம் கூறுகிறோமேயன்றி, பாதிப்பை ஏற்படுத்த அல்ல -குர்ஆன் இவ்விரு ஆணித்தரமான சத்தியங்களை மறுதலிக்கும் அதேசமயம், அவர்களது முக்கியத்துவத்திற்கு, அது கொண்டிருக்க வேண்டிய அனைத்து தனித்துவமான அம்சங்களையும் இழந்துள்ளது. இத் தனித்துவ அம்சங்கள் அனைத்தும் ஈஸா அல் மஸீஹ் இறைவனுடைய குமாரன், அவர் எமது பாவங்களுக்காக மரித்தார் எனும் கிறிஸ்தவ அடிப்படை கோட்பாடுகளில் எவ்விதம் ஒத்திசைக்கின்றன, அர்த்தப்படுகின்றன, முக்கியத்துவப்படுகின்றன என நோக்கும்படி முன்செல்வோம்

(தொடரும்)

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?