அல்லாஹ்வின் இரக்கத்தின் அடையாளம்

ஈஸா அல் மஸீஹ்                              பகுதி 5


மீட்பளிக்கும் தூய குர்பான்

அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக் குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்."
இன்ஜில் (அப்போஸ்தலர் 10:43)

'இறைவன் ஒருவரே, இறைவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த ஈஸா அல் மஸீஹ் அவரே இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.”
இன்ஜில் (1தீமோத்தேயு 2:5-6)


இப்ராஹீம் நபி அவர்களின் மகனுக்கு கொடுக்கப்பட்ட அல்லாஹ்வின் கிரயமாகிய குர்பான் பலியைப்போல தூய குர்பான் முழு மனித இனத்துக்குமாக கொடுக்கப்பட்டது. இந்த முழுமையான கபாராவாகிய தூய பலி பாரிய விலையாக நபி ஆதம் அவர்களின் பிள்ளைகளாகிய நம் அனைவருக்காகவும் கொடுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட கடனாகிய எமது தனிப்பட்ட பாவத்திலிருந்து இந்த கொடுப்பனவு எம்மை விடுவிக்கிறது. இது அல்லாஹ்வின் இரக்கத்தை எமக்கு முழுமையாக வெளிப்படுத்துகிறது. இது எம்மை விடுவிக்கிறது. மன்னிக்கிறது. எனவே நாம் அல்லாஹ்வின் இறை வல்லமை மற்றும் தூய சந்நிதானத்துக்குள் வழிநடத்தப்படுகிறோம். ஈஸா அல் மஸீஹ் மனித இனத்தை பாவத்தின் கொடூர நியாயத்தீர்ப்பிலிருந்து விடுவிக்கும் பலியாக தமது வாழ்வை ஒப்புக்கொடுத்தார் என்பதை இறை வார்த்தைகள் தெளிவு படுத்துகின்றன.


அப்படியே, ஈஸா அல் மஸீஹ் அவர்களும் பணிகொள்ளும்படி வராமல், பணிசெய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்க வும் வந்தார் என்றார்".
இன்ஜில் (மத்தேயு 20:28)

உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக் குட்டியாகிய ஈஸா அல் மஸீஹ் அவர்களின் விலை யேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே".

“அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்ட வராயிருந்து, தமது மூலமாய் அல்லாஹ்வின் மேல் ஈமான் கொண்டுள்ள உங்களுக்காக இந்தக் கடைசிக் காலங்களில் வெளிப்பட்டார். உங்கள் ஈமானும் நம்பிக்கையும் அல்லாஹ்வின்மேலிருக்கும்படி, அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தான்."
இன்ஜில் (1பேதுரு 1:18-2)


அல்லாஹ்வின் இரக்கத்தின் அடையாளம்


தூய குர்பானானது அல்லாஹ்விடமிருந்து வரும் இரக்கத்தின் அடையாளமாகவிருக்கிறது. இது ஆதம் நபி அவர்களுக்கு அளிக்கப்பட்ட விசேட கொடையாகும். குர்பான் நாம் அல்லாஹ்வுக்கு கொடுப்பது அல்ல அவன் எமக்கு கொடுப்பதாகும். அல்லாஹ்வின் வேதனை மிகு அன்பும் இரக்கமும் மட்டுமே எம்மை விடுவிக்க முடியும். நாம் எமது மீட்பை எமது சொந்த முயற்சியால் பெறமுடியாது. ஒவ்வொரு தனிமனிதனும் தனது இருதயம் வியாதிப் பட்டிருப்பதையும் கரங்கள் கறைபட்டிருப்பதையும் அறிந்திருக்கிறான். அல்லாஹ்வின் தூய்மையை நோக்கிய எமது கண்களை குருடாக்க இருளின் ஒரு துளி போதுமானது. எமது உதவியற்ற நிலையை அறிவிக்க எமது மனசாட்சியினால் உந்தப்படுகிறோம். எமது உண்மையான நற்கிரியைகள், எமது மதக்கடமைகள், மனித முயற்சிகள் அனைத்தும் இறைவனது இரக்கமில்லாவிட்டால் முழுமையாக தொலைந்துபோனவை. சுய மகிமைக்கான எவ்வித காரணங்களுமில்லை. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வுக்கு மட்டுமே புகழும் மகிமையும் அல்ஹம்துலில்லாஹ் அவனது அற்புதமான கொடைக்காக சுப்ஹனல்லாஹ்". இறைவார்த்தை இப்படியாக அழுத்தமாக கூறுகிறது:


ரஹ்மத்தினாலே ஈமானைக்கொண்டு மீட்கப்பட்டீர்கள் இது உங்களால் உண்டானதல்ல, இது அல்லாஹ் வுடைய ஈவு ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல

இன்ஜில் (எபேசியர் 2:8-9)



இப்படியிருக்க, ஷரீஅத் சட்டமில்லாமல் இறைநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது. அதைக்குறித்து ஷரீஅத் சட்டமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது. அது ஈஸா அல் மஸீஹ் அவர்களைப்பற்றும் ஈமானினாலே பலிக்கும் இறைநீதியே. ஈமான் கொள்ளுகிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை. எல்லாரும் பாவஞ்செய்து, இறை மகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய ரஹ்மத்தினாலே ஈஸா அல் மஸீஹ் அவர்களிலுள்ள மீட்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்.”
இன்ஜில் (ரோமர் 3:20-24)

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?