ஈஸா அல் மஸீஹ் அவர்களின் குர்பான்

ஈஸா அல் மஸீஹ்       பகுதி    7


ஈஸா அல் மஸீஹ் அவர்களின் குர்பான்

முன்னிருந்த பலிகளின் அடையாளமாகவும் நோக்கமாகவும் இருக்கும் அல்லாஹ் ஏற்படுத்திய தூய குர்பானின் அடையாளத்துக்கு திரும்புவோம். அவர் தொடும்போது மனிதன் உயிரடைவது ஆச்சரியமான ஒன்றல்ல. அல்லாஹ்வின் ஆட்டுக்குட்டியாகிய தூய குர்பானின் தொடர்பு மூலம் ஈஸா அல் மஸீஹ் அவர்கள் எமக்கு வாழ்வழிக்கிறார், குணமாக்குகிறார், எமது இதயத்துக்கு சந்தோஷத்தையும் சமாதானத்தையும் தருகிறார். அவரே குர்பானாக இருக்கிறபடியால் மனிதன் இறைவனின் சந்நிதானத்துக்குள் (குர்ப்) செல்லமுடியும். அவர் மூலம் அல்லாஹ் எமக்கு வாழ்வழிக்கிறான். ஈஸா அல் மஸீஹ் அவர்கள் இப்படி கூறினார்கள்.


நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.”
                           இன்ஜில் (யோவான் 10:10)


பலியின் தொடுகை மூலம் அல்லாஹ் இறந்தவனை உயிர்ப்பித்ததுபோல, ஈஸா அல் மஸீஹ் அவர்களின் குர்பான் மூலம் அல்லாஹ் தனது வல்லமையை வெளிப்படுத்துகிறான். ஈஸா அல் மஸீஹ் அவர்களைக் குறித்து பேசப்படும் குர்ஆனின் பகுதியில் இந்த வல்லமை பேசப்படுகிறது.


இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்) 'நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன். நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன். அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன். அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன். நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது".
சூரத்துல் ஆல இம்ரான் (3):49


தூய குர்பானின் வல்லமை


ஈஸா அல் மஸீஹ் அவர்கள், மரணம், வாழ்வு, பாரமரிப்பு, நிறைவு என்பவற்றுக்கு மேலான இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமை உடையவர் என குர்ஆன் விபரிக்கிறது. இந்த அனைத்து பகுதிகளும் இறை அதிகாரத்துடன் தொடர்புபட்டது. அல்லாஹ் இந்த அதிகாரத்தையும் வல்லமையையும் ஈஸா அல் மஸீஹ் மேல் வைத்திருக்கிறான். ஈஸா அல் மஸீஹ் அவர்கள் கூறுவதை கவனியுங்கள், அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப் பிப்பேன்." தூய குர்பானாகிய ஈஸா அல் மஸீஹ் உண்மையாகவே வாழ்வை புதிதாக்குகிறார். குர்ஆன் இந்த பலியைக் குறித்தே விபரம் தெரிவிக்கிறது, இவ்வாறே அல்லாஹ் இறந்தவர்களை உயிர்ப் பிக்கிறான்".


அல் கிதாபாகிய இன்ஜீலில் ஈஸா அல் மஸீஹ் மனித இருதயத்துக்குள் அளிக்கும் வாழ்வு, சுகம், நம்பிக்கையைக் குறித்து அநேக உதாரணங்கள் இருக்கின்றன. தூய குர்பானின் தொடுதலைக் குறித்து பின்வரும் விபரங்கள் வெளிப்படுத்துகின்றன. “நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்." இதில் இவ்வுலக வாழ்வும் மறுமை வாழ்வும் அடங்கியுள்ளது.

பின்பு அவர் அவர்களுடனேகூட இறங்கி, சமனான ஒரு இடத்திலே நின்றார். அங்கே அவருடைய சஹாபாக்கள் அநேகம் பேரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படிக்கும், தங்கள் வியாதிகளினின்று குணமாக்கப்படும்படிக்கும், யூதேயா தேசத்துத் திசைகள் யாவற்றிலிருந்தும், எருசலேம் நகரத்திலிருந்தும், தீரு சீதோன் பட்டணங்கள் இருக்கிற கடலோரத்திலிருந்தும் வந்தவர்களாகிய திரளான ஜனங்களும் இருந்தார்கள். அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களும் வந்து, ஆரோக்கிய மடைந்தார்கள். அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லாரையும் குணமாக்கினபடியினாலே, ஜனங்கள் யாவரும் அவரைத் தொடும்படிக்கு வகைதேடினார்கள். அப்பொழுது அவர் தம்முடைய சஹாபாக்களை நோக்கிப்பார்த்து: தரித்திரராகிய நீங்கள் பரக்கத்துப் பெற்றவர்கள். இறைவனுடைய அர்ஷ் உங்களுடையது. இப்பொழுது பசியாயிருக்கிற நீங்கள் பரக்கத் பெற்றவர்கள். திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிற நீங்கள் பரக்கத் பெற்றவர்கள். இனி நகைப்பீர்கள்.”

இன்ஜில் (லூக்கா 6:17-21)

தொடரும்

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?