பகறா பசுமாடு

குர்பானின் உண்மையை நீ அறிவாயா?
பகுதி  2


பகறா  பசுமாடு


இந்த பாடத்திற்கான அறிமுக வசனம் அல் பகறா எனும் சூராவிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அர்த்தம் பசுமாடு எனப்படும். இது பரிசுத்தமான ஒரு நூலில் அமைந்திருக்கும் மிகவும் அபூர்வமான தலைப்பு. ஆயினும் இந்த பகரா ஒரு சாதாரண பசுமாடு அல்ல. அதே நேரம் அது குர்பான் பலியின் தனித்துவத்தை வெளிப்படுத்துகிறது. குர்ஆனில் இந்த பசுமாட்டைக் குறித்து மிக சிறியளவிலேயே கூறப்பட்டுள்ளது. ஆனால் நாம் தௌராத்தில் உள்ள இறை வார்த்தையை ஆராய்ந்து பார்த்தால், இந்த பசுமாடு அதில் பேசப்படுகிறது. அதன் விபரம் பின்வருமாறு.


உன் இறைவனாகிய ரப்பு உனக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தில், கொலைசெய்யப்பட்டுக் கிடக்கிற ஒருவனை வெளியிலே கண்டு, அவனைக் கொன்றவன் இன்னான் என்று தெரியாதிருந்தால், உன் சேய்குமாரும் உன் காழிமாரும் புறப்பட்டுப்போய், கொலைசெய்யப்பட்டவனைச் சுற்றிலும் இருக்கும் பட்டணங்கள்மட்டும் அளப்பார்களாக. கொலை செய்யப்பட்டவனுக்குச் சமீபமான பட்டணத்து மூப்பர், வேலையில் பண்படாததும் நுகத்தடியில் பிணைக்கப் படாததுமான ஒரு கிடாரியைப் பிடித்து, உழுது விதையாத தரிசான பள்ளத்தாக்கிலே அதைக் கொண்டுபோய், அந்தப் பள்ளத்தாக்கிலே அதின் தலையை வெட்டிப்போடக்கடவர்கள். உன் இறைவனாகிய ரப்பு தமக்கு இபாதத் செய்யவும் ரப்புவின் நாமத்திலே பரகத்செய்யவும் லேவியின் குமாரராகிய இமாம்களைத் தெரிந்துகொண்டபடியால், அவர்களும் அத்தருணத்தில் வந்திருக்கவேண்டும், அவர்கள் பத்வாவின்படியே சகல வழக்கும் சகல காயச்சேதமும் தீர்க்கப்படவேண்டும். கொலை செய்யப்பட்டவனுக்குச் சமீபமான பட்டணத்தின் சேய்குமாரும் பள்ளத்தாக்கிலே தலை வெட்டப்பட்ட கிடாரியின்மேல் தங்கள் கைகளைக் கழுவி: எங்கள் கைகள் அந்த இரத்தத்தைச் சிந்தினதும் இல்லை, எங்கள் கண்கள் அதைக் கண்டதும் இல்லை. கர்த்தாவே, நீர் மீட்டுக்கொண்ட உனது ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் குற்றமில்லாத இரத்தப்பழியைச் சுமத்தாமல், உனது ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் கிருபையுள்ளவராயிரும் என்று சொல்வார்களாக, அப்பொழுது இரத்தப்பழி அவர்களுக்கு நிவிர்த்தியாகும்.”
தௌராத் - (உபாகமம் 21:1-8)


இது தீர்க்கப்படாத கொலையைக் குறித்து மூஸாவுக்கு அருளப்பட்ட இறைவார்த்தை. தீர்க்கப்பட்டதோ இல்லையோ கொலை ஒரு கொடிய குற்றம். கொலையாளியோ அல்லது அவரது சகாக்களோ, கொலை கணக்கிலெடுக்கப்படவேண்டிய கொடிய பாவம். பாவத்தின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. யாராவது அதன் விலையை செலுத்த வேண்டும். யாராவது ஒருவர் அநீதியை சரிக்கட்ட கபாராவின் அபராதத்தை செலுத்த வேண்டும். கொலைக்கான குறைந்த தண்டனை இதுவே.


ஆயினும் தீர்க்கப்படாத கொலையில் கொலையாளி அறியப்படாதிருக்கும்போது இதன் விலையை எப்படி செலுத்தலாம்? யார் செலுத்தலாம்? அந்த கொலை நடந்த பட்டணத்திற்கு அருகாமையில் உள்ளவர்கள் அதற்குரிய அபராதத்தை செலுத்த வேண்டும். காரணம் இந்த பட்டணத்தில் உள்ள அறியப்படாத ஒருவரே குற்றவாளி. இறை தீர்ப்பின்படி அந்த பட்டணத்தில் உள்ள சேய்குமார் கொலையாளிக்கு பதிலாக ஒரு பசுமாட்டை கொல்லக் கொடுக்க வேண்டும். இதன்படி பசுமாட்டின் குர்பான் பலியானது பதிலீடாக அமைகிறது. அதன் மரணம் கபாராவின் தேவையை பூர்த்தி செய்து பட்டணத்து மக்களுக்கு பாவமன்னிப்பை அளிக்கிறது. குர்பானின் வாயிலாக அவர்கள் குற்றத்திலிருந்து விடுவிக்கப் படுகிறார்கள். மேலும் அவர்கள் எவ்வித பகைமையிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார்கள். அல்லாஹுதஆலா தனது மக்களின் விடுதலைக்காக அனைத்து ஆயத்தங்களையும் செய்திருக்கிறான்.


தொடரும்…

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?