விடுவிக்கும் குர்பான்

குர்பானின் உண்மையை நீ அறிவாயா?
                                                         பகுதி 3


விடுவிக்கும் குர்பான்


இந்த பகரா குர்பான் பலி பைத்துல் முகர்தஸின் மகா பரிசுத்த ஸ்தானத்துக்குள் பிரவேசிக்கும் முன் ஹாரூன் செலுத்திய குர்பானை எமக்கு நினைவுபடுத்துகிறது. குர்பானின் இரத்தம் ஹாரூனினதும் இஸ்ராயீலினதும் பாவத்துக்கான கபாராவின் விலையை செலுத்தியது. மேலும், குர்பானே அவன் திரைக்குள் அல்லாஹு தஆலாவின் மெய்யான பிரசன்னத்தை (குர்ப்) நெருங்குவதற்கு அவனுக்கு தகுதியளித்தது. இஸ்ரவேலின் பலியாட்டை ஒரு கணம் நினையுங்கள். எகிப்திலிருந்து தப்புவதற்கு நபி மூஸா அவர்கள் ஒரு பலியை ஆயத்தம் பண்ணும்படி ஒவ்வொரு குடும்பத்தையும் அறிவுறுத்தினார்கள். அல்லாஹ்வின் தீர்ப்பு நிச்சயமானது. மரணத்தின் மலக்கு எகிப்தின் தலைப்பிள்ளைகளை கொல்ல ஆயத்தமானான். ஆனாலும், கதவுகளில் பூசப்பட்ட பலியின் இரத்தம் அல்லாஹ்வின் மக்களை விடுவித்தது. பலியாடு அவர்கள் மரணிக்க வேண்டிய இடத்தில் மரணித்தது. இவ்விதமாக அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.

நாம் அதிகம் நினைவு கூறவேண்டிய குர்பான் இப்ராஹீம் நபியுடையது. அல்லாஹ் அவரது மகனை பலியிடும்படி தெளிவாக கூறினான். எவ்வித தயக்கமுமின்றி இப்ராஹீம் நபியவர்கள் அனைத்து ஆயத்தங்களையும் செய்தார். கையில் கத்தியுடன் அவர் அல்லாஹ்வுக்கு அனைத்தையும் அர்ப்பணிக்க ஆயத்தமானார். அந்த முழுமையான கீழ்படிந்த கணத்தில்தானே அல்லாஹ் தலையிட்டு இப்ராஹீம் நபி அவர்களின் மகனுக்கு பதிலாக தான் ஆயத்தம்பண்ணியதை கொடுக்கிறான். குர்ஆனின் இந்த வசனங்கள் எவ்வளவு பொருத்த மானவை.


ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம். இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு விட்டு வைத்தோம்;”
சூரத்துல் ஸாஃப்ஃபாத் (37):107,108.


கிருபைக்கும் ஆசீர்வாதத்திற்குமான குர்பான்


அல்லாஹ் கொடுத்த குர்பான் பலி இப்ராஹீம் நபி அவர்களின் வாழ்வில் மிகப்பெரிய பரகத்தாக இருந்தது என்பதில் சந்தேகமேயில்லை. அது அவனுக்கு தனிப்பட்ட ரீதியில் அல்லாஹ்வின் இரக்கத்தின் மிகப் பெரும் வெளிப்படுத்தல் ஆகும். அனைத்துக்கும் மேலாக அப்பலியானது ரஹ்மத்தின் அடையாளமாகும். இப்ராஹீம் நபி அவர்களின் மகனின் இடத்தில் அவனுக்குப் பதிலாக அப்பலி மரணித்தது. அடுத்து, அது பரகத்தின் அடையாளம். நபி இப்ராஹீம் அவர்களின் சந்ததிக்கூடாக உலகின் அனைத்து இனமக்களும் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்ற அல்லாஹ்வின் வாக்குறுதி மீள உறுதிப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு நாளும் நாம் தொழும்போது பின்வரும் வார்த்தையை ஓதுகிறோம்.

யா! அல்லாஹ்! இப்ராஹீம் மீதும் அவனது அடியார்கள் மீதும் பொழிந்தது போல முகம்மது மீதும் அவனது அடியார்கள் மீதும் உமது அளவற்ற இரக்கத்தை பொழிவாயாக.


தொடரும்.

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?