குர்பானின் உண்மையை நீ அறிவாயா? பகுதி 4
ஈஸா அல் மஸீஹ் பகுதி 4
குர்பானின் உண்மையை
நீ அறிவாயா?
யா! அல்லாஹ்! இப்ராஹீம் மீதும் அவனது அடியார்கள் மீதும் பொழிந்ததுபோல முகம்மது மீதும் அவனது அடியார்கள் மீதும் உமது அளவற்ற இரக்கத்தை பொழிவாயாக.
இப்ராஹீம் நபி அவர்களுக்கும் முழு மனித சமூகத்துக்கும் கிடைக்கும் கிருபையும் ஆசீர்வாதமும் அல்லாஹ் அளித்த குர்பான் பலி மூலம் எமக்கு தெரியவருகிறது. மேலும், இந்த பலி முழு மனித சமூகத்துக்குமான கிரயத்துக்கு மெய்யான தூய்மையான குர்பானின் அடையாளமாக இருக்கிறது. தூய்மையான குர்பானின் இரகசியம் மிருகம் அல்ல ஒரு நபர் என்பதை நாம் அறிய ஆரம்பிக்கிறோம். அவர் மனிதனின் வித்தால் பிறக்கவில்லை ஆனால் அவர் இப்ராஹீமின் சந்ததியில் பிறந்தார். அவரே முழு மனித சமூகத்தின் ஆசீர்வாதத்துக்குமாக நியமிக்கப்பட்டவர். அவரே ஈஸா அல் மஸீஹ். “முழு உலகத்தினதும் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி". ஈஸா மஸீஹ் அவர்களைக் குறித்த நபி சகரியா அவர்களின் வார்த்தையை நினையுங்கள்.
“72. அவர் நம்முடைய பிதாவாகிய ஆபிரகாமுக்கு இட்ட ஆணையை நிறைவேற்றுவதற்கும்;
73. ஆதிமுதற்கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கினால் தாம் சொன்னபடியே,
74. தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களினின்றும், நம்மைப்பகைக்கிற யாவருடைய கைகளினின்றும், நம்மை இரட்சிக்கும்படிக்கு,
75. தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே நமக்கு இரட்சணியக்கொம்பை ஏற்படுத்தினார்.”
இன்ஜில் (லூக்கா 1:72-75)
மேலிருந்து வரும் தூய குர்பான்
இப்ராஹீம் நபியவர்களின் மகனுக்கு கிரயமாக கொடுக்கப்பட்ட குர்பான் பலி மூன்று அதிவிசேட ஆசீர்வாதங்களுக்கு காரணமாக இருக்கிறது.
(1) அது மேலிருந்து கொடுக்கப்பட்டது.
(2) அது பழுதில்லாதது.
(3) அது மீட்புக்காக வந்தது. அதே விசேட காரணத்துடன் அல்லாஹ் அளித்த தூய குர்பானும் அதி விசேட ஆசீர்வாதமாக இருக்கிறது.
முதலாவது, ஈஸா அல் மஸீஹ் மேலிருந்து வந்தவர். இன்னொரு வார்த்தையில் கூறினால் அவர் சுவர்கத்திலிருந்து உண்டானவர், பூமியிலிருந்து அல்ல. அவர் இயற்கையான மனித நியமத்தின் படி கர்ப்பந்தரித்து பிறக்கவில்லை. அதற்குப் பதிலாக அவர் அற்புதமாக, கன்னி மர்யம் (அலை) இன் வயிற்றில் இப்ராஹீமின் சந்ததியில் பிறந்தார். அவர் மனித சரீரத்தில் இருந்தாலும் ஆதம் நபியின் சந்ததி கறைபட்டதுபோல சைத்தானின் விரல் அவர் மீது படவில்லை. ஈஸா அல் மஸீஹ் அனைவருக்கும் மேலானவர். அவரது உயரிய தன்மைக்கு இறை வார்த்தையும் சாட்சி கொடுக்கிறது.
“ஈஸா மறுபடியும் அவர்களை நோக்கி: நான் போகிறேன், நீங்கள் என்னைத் தேடி உங்கள் பாவங்களிலே மரிப்பீர்கள், நான் போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது என்றார். அப்பொழுது யஹுதிகள்: நான் போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது என்கிறானே, தன்னைத்தான் கொலைசெய்து கொள்வானோ என்று பேசிக்கொண்டார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் தாழ்விலிருந்து உண்டானவர்கள், நான் உயர்வி லிருந்து உண்டானவன், நீங்கள் இந்த உலகத்தில் இருந்துண்டானவர்கள், நான் இந்த உலகத்தில் இருந்துண்டானவனல்ல.”
இன்ஜில் (யோவான் 8:21-23)
Comments
Post a Comment