நித்திய ஒளியாகிய அவரின்றி இருளும் ஏமாற்றமும் மாத்திரமே இருக்கும்.

ஈஸா அல் மஸீஹ்                       பகுதி 6


நித்திய ஒளியாகிய அவரின்றி இருளும் ஏமாற்றமும் மாத்திரமே இருக்கும்.


இதன் காரணமாக பிறப்பிலிருந்து ஒவ்வொரு மனிதனும் இருளின் நிலைக்குட்பட்டிருக்கிறான். ஒளியினிடத்துக்கு திரும்பும் வழியை அவன் தேடுகிறான். இந்த ஒளியில் மனிதனால் நீதிக்குரிய பண்புகளை பார்க்க முடியாது. அவனது செயல்கள் பாதை மாறியிருக்கின்றன. அவனது கைகள் கறைபட்டுள்ளன. சூரிய ஒளி வாழ்க்கைக்கு அற்புதமான சூழலையும் நிறைவான ஆரோக்கியத்தையும் உருவாக்குமென எமக்கு தெரியும். மறுபுறத்தில் இருள் பக்டீரியாக்களுக்கான ஆரோக்கிய மற்ற சூழலையும் அழிவையும் உருவாக்குகிறது. அதேபோல், அல்லாஹ்வின் ஒளி இல்லாவிட்டால் அதன் முடிவு நப்ஸின் அழிவாகத்தானிருக்கும். ஒரு வியாதி இருதயத்தை பாதிக்க ஆரம்பிக்கிறது. அது என்ன வியாதி? ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு கடத்தப்படும் கிருமி என்ன? அதுவே சுய மகிமை.


இந்த சுய மகிமையெனும் வியாதி இருளான நப்ஸில் மறைந்திருந்து அனேக அறிகுறிகளை உருவாக்குகிறது. மார்க்க ரீதியான வார்த்தையில் கூறினால் இந்த வெளியரங்கமான செயற்பாடுகளை பாவவியாதி என கூறுகிறோம். நிச்சயமாக, அநேக விதமான பாவங்கள் உண்டு. ஆனால் அனைத்தும் சுய மகிமை எனும் ஒரே நோய் கிருமியிலிருந்து உருவாகிறது. இது அல்லாஹ்வின் நீதியான மகிமைக்கு அபகீர்த்தியை உண்டாக்குகிறது. தூய இறை வார்த்தை இந்த வியாதியைக் குறித்த விளக்கமான படத்தை தருகிறது:


சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியா யத்துக்கும் விரோதமாய், இறைகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இறை வனைக் குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது இறைவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தி யிருக்கிறான். எப்படியென்றால், காணப்படாத வைகளாகிய அவனுடைய நித்திய வல்லமை இறைத்தன்மை என்பவைகள், உண்டாக்கப் பட்டிருக்கிறவைகளினாலே, உலக முண்டானது முதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும் ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.”
இன்ஜில் (ரோமர் 1:18-20)


நீங்கள் ஒரு மனிதனை கொன்றீர்கள்;. பின் அதுபற்றி (ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டித்) தர்க்கித்துக் கொண்டிருந்தீர்கள்;. ஆனால் அல்லாஹ் நீங்கள் மறைத்ததை வெளியாக்குபவனாக இருந்தான் (என்பதை நினைவு கூறுங்கள்). (அறுக்கப்பட்ட அப்பசுவின்) ஒரு துண்டால் (க்கொலை யுண்டவனின் சடலத்)தில் அடியுங்கள் என்று நாம் சொன்னோம். இவ்வாறே அல்லாஹ் இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான்; நீங்கள் (நல்ல) அறிவு பெறும் பொருட்டுத் தன் அத்தாட்சிகளையும் அவன் (இவ்வாறு) உங்களுக்குக் காட்டுகிறான். இதன் பின்னரும் உங்கள் இதயங்கள் இறுகி விட்டன, அவை கற்பாறையைப் போல் ஆயின அல்லது, (அதை விடவும்) அதிகக் கடினமாயின. (ஏனெனில்) திடமாகக் கற்பாறைகள் சிலவற்றினின்று ஆறுகள் ஒலித்தோடுவதுண்டு. இன்னும், சில பிளவுபட்டுத் திடமாக அவற்றினின்று தண்ணீர் வெளிப்படக் கூடியதுமுண்டு. இன்னும், திடமாக அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் சில (கற்பாறைகள்) உருண்டு விழக்கூடியவையும் உண்டு. மேலும், அல்லாஹ் நீங்கள் செய்து வருவது பற்றி கவனிக்காமல் இல்லை.”
சூரத்துல் பகரா (2):72-74

இந்த பகுதி இஸ்ராயீல் சந்ததியின் ஒரு கொலையைக் குறித்து பேசுகிறது. இதில் குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை. தௌராத்திலுள்ள ஷரீஆ சட்டத்தின்படி அதனருகில் உள்ள பட்டணத்திலுள்ளவர்கள் ஒரு பசு மாட்டை பலி செலுத்தினார்கள். இந்த பலியானது குற்றத்தினை நீக்கி கபாராவின் தேவையை நிறைவு செய்தது. இந்த விபரம் இத்துடன் முடிவுற்றிருக்கலாம்.


ஆயினும், குர்ஆனின் கூற்றுப்படி அல்லாஹ் முக்கியமான ஒன்றை வெளிப்படுத்த மிருக பலியை அடையாளமாக தெரிந்தான். பலியின் ஒரு துண்டை எடுத்து கொலை செய்யப்பட்டவனின் உடலை தொடும்படி அல்லாஹ் மக்களுக்கு கூறினான். அவர்கள் ஆச்சரியப்படும்படி கொலை செய்யப்பட்டவன் உயிரடைந்தான். இது ஒரு அடையாளமென குர்ஆன் எமக்கு கூறுகிறது. இந்த கதையிலிருந்து நாம் அறிய வேண்டிய முக்கியமான ஒரு உண்மை அதிலுள்ள ஒரு வாக்கியத் தொடர்அல்லாஹ் இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான்;. நீங்கள் (நல்ல) அறிவு பெறும் பொருட்டுத் தன் அத்தாட்சிகளையும் அவன் (இவ்வாறு) உங்களுக்குக் காட்டுகிறான்.” திரும்பவும் வார்த்தையை கவனியுங்கள், அல்லாஹ் இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான்......."  இறந்தவன் எப்படி உயிரடையலாம்? பலியின் மூலமாக மட்டுமே என, வெளிப்படுத்தப்பட்ட இந்த பெரிய இரகசியத்தை திரும்பவும் திரும்பவும் பார்க்கிறோம். குர்பான் மூலம் அந்த மனிதன் அல்லாஹ்வின் சந்நிதானத்துக்குள் சென்றான். உண்மையாகவே அது மனிதனை உயிர்ப்பிக்கும் வல்லமையே ஆகும்.

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?