ஈஸா அல் மஸீஹ்வின் சிலுவை மரணம்

நிகரற்ற ஈஸா அல் மஸீஹ் - பகுதி 9

குர்ஆனிலும் இறைவேதத்திலும்  ஈஸா அல் மஸீஹ் அவர்களின் தனித்துவம்

). ஈஸா அல் மஸீஹ்வின் சிலுவை மரணம்

ஈஸா அல் மஸீஹ் இரண்டாம் தடவை ஏன் துன்யாவுக்கு வருகிறார் என்பதை நாம் ஓரளவு பார்த்திருக்கிறோம். ஆனால் நாம் இப்போது சிக்கலான நிலையில் ஏன் அர்ஷிவலிருந்து ஈஸாஅல் மஸீஹ் முதல் தடவையாக  மனிதர்கள் மத்தியில் வாசம்பண்ண வந்தார் என்பதை ஆராய்வோம்.

ஏன் இறைகுமாரன் தனித்துவமான மனித ஈஸாவானார்? எப்போதெல்லாம் இறைவன் மனித இனத்திற்கு செய்தியை அனுப்ப விரும்பினாரோ அப்போதெல்லாம் நபிமார்களை எழுப்பினார். பிறகு தனது குமாரனை அனுப்பினார். ஏன் நித்திய பரிசுத்த இறைகுமாரன் சீர்கெட்ட மனித இனத்தில் பாவமுள்ள மனிதர்கள் மத்தியில் வாழ இறங்கி வந்தார்? கேள்வியின் பொருளே அதற்கான பதிலையும் தருகின்றது. ஈஸா அல் மஸீஹ் தனித்துவமானவர். அவர் தனக்கென நிறைவேற்ற வேண்டிய தனித்துவமான பணியை கொண்டிருந்தபடியால் பூமிக்கு வந்தார்.

இறைவன் கடந்த காலங்களில், உரிய நேரத்தில் சட்டங்கள், செய்திகள், உடன்படிக்கை, எச்சரிக்கைகளை மனிதர்களுக்கு கொடுத்திருக்கிறார். ஆனால் எதுவும் மனித இனத்திற்கு உதவவில்லை. அவர்கள் தங்கள் பாவ வழியிலிருந்து திரும்புவதற்கும் பாவத்தை விரும்பும் தன்மையிலிருந்து திரும்புவதற்கும், இறைவன் எதை அனுப்பியும் பலன் இல்லை. மனிதன் தொடர்ந்து பாவத்திலிருந்தான். அவர் இஸ்ரவேலருக்கு, என்னைத் தவிர வேறே இறைவன் இல்லை, என கூறியபோது, அவர்கள் பொன்னினாலான கன்றுக்குட்டியை செய்து அதனை நமஸ்கரித்தனர். எல்லா மனிதர்களும் பாவம் செய்தனர். பாவம் மனித சுபாவத்தின் ஒரு பகுதியாயிருக்கிறது - ஒரு மனிதனும் பாவத்தின் வல்லமையிலிருந்து நீங்கியவன் இல்லை. ஈஸா அல் மஸீஹ் தாமே கூறியதுபோல, பாவஞ்செய்கிறன் எவனும்  பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் (யோவான் 8:34). கறைபடிந்த ஆத்துமாவைத் தாங்குகின்ற மனித சரீரத்திற்குள் இச்சை, பேராசை, பெருமை, பகை, கசப்பு ஆகிய அனைத்து தீய விடயங்களின் இருப்பிடமும் தங்கியுள்ளது. தலை முதல் பாதம் வரையான மனித சரீரமானது பாவத்தின் உற்பத்தியினதும் செயற்பாட்டினதும் தளமாகக் காணப்படுகின்றது. ஒவ்வொரு பாவ சிந்தையும், சொற்களும் செயல்களும் அவற்றின் மூலத்தை மனிதனுக்குள்ளே கொண்டுள்ளதேயன்றி, அவன் வாழும் உலகினுள் அல்ல. அது அவனது சொந்த தீய உள்ளமே பாவத்தின் வழியே அவனை அலையச் செய்கின்றது. மனிதனுள் மாம்சத்தின் சோதனைகள், பண ஆசை, ஜீவியத்தின் பெருமை ஆகியன வேரூன்றப்பட்டுள்ளன, ஏனெனில் பாவமானது, மனிதன் இறைவனை குற்றமற்றவனாயும், பரிபூரண தூய்மையுடையவனாயும் பின்பற்ற முடியாதபடிக்கு தனது தீவிர கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. இறைவன் கற்பலகைகளில் தந்த கற்பனைகளோ, நபிமார்களுக்கூடாக தந்த கட்டளைகளோ பாவம் செய்வதற்கும் தொடர்ந்து அதனை பின்பற்றுவதற்கும் எம்முள் உள்ள உந்துதலை மேற்கொள்ள முடியாது.

ஷரீஆவாலும் நபிமார்களாலும் நிறைவேற்ற முடியாததை நிறைவேற்றுவதற்கே ஈஸா அல் மஸீஹ் அர்ஷிலிருந்து துன்யாவுக்கு வந்தார்.

அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார், மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்        (ரோமர் 8:3-4).

பாவமற்ற, பரிசுத்த இறை குமாரன் தான் கொண்டிருந்த, இறைவனுடைய அளவிடமுடியாத, பரிசுத்தத்தின் சகல வல்லமையோடும் மனுவுருவானார். இது இறைமகனுக்கும் மாம்சத்தின் பாவத்திற்கும் இடையில் வரவிருக்கும் போராட்டத்தின் விளைவான, அதன் சிருஷ்டிகருக்கான வெற்றியை நிச்சயப்படுத்தியது. ஈஸா அல் மஸீஹ் “பாவ மாம்சத்தின் சாயலாகவந்தார் - அதாவது, காலாகாலமாக பாவத்தினதும் தீமையினதும் ஊற்றாயிருந்த - மனித சரீரத்தில் வந்தார்.

அவர் சரீரம் இல்லாமல், அதனை மேற்கொள்ளவில்லை - அதற்குள்ளாகவே அவர் அதனுள் வந்தார். நூற்றாண்டு காலமாக பாவமானது, தனது திட்டங்களையும் நோக்கங்களையும் நடைமுறைப்படுத்துவதற்காக மனித சரீரத்தினுள் அதன் வல்லமையின் செயற்பாடுகளை கொண்டிருந்தது. ஈஸா அல் மஸீஹ், பாவத்தை அதன் கூடாரத்திற்குள், அது இருந்தவண்ணமாகவே சந்தித்தார். அவர் நேரடியாக அதன் வளாகத்திற்குள்ளும் கோட்டைக்குள்ளேயும் சென்றார். அவர் பாவத்தின் வல்லமைக்குள் வீழ்ந்துபோன ஏனைய மனிதர்களின் சரீரத்தைத் தரித்துக்கொண்டே மனிதனாய் வந்தார்.

ஈஸா அல் மஸீஹ் தன்னில் அவ் வல்லமை போராட இடமளித்தார். அவர் வனாந்தரத்திற்குச் சென்று, இரவும் பகலும் நாற்பது நாட்கள் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் நேன்பு பிடித்தார். பின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று. சோதனைக்காரன் ஈஸாவின் மீது பாவத்தின் கொடிய அம்புகளை எய்தான். இறைவனுடைய ஆவியானவர் அவருக்கு உதவியாக கற்களை உருவாக்கியிருந்தார். இறைவனுக்கு கீழ்ப்படியாமல், கற்களை அப்பமாக மாற்றி, அதன் மூலம் அவரது மாம்சத்தின் பசியை ஆற்றும்படி ஷைத்தான் அவரை சோதித்தான். ஈஸா அதனை மறுதலித்தார்.

இறைவன் வனாந்தரத்தை அவரது வாழ்விடமாக்கிமானார் - ஷைத்தான் ஒரு நொடிப்பொழுதில் அநேக நாடுகளின் பிரபுக்கள் வெற்றியின்றி தவித்த உலகத்தின் சகல இராஜ்ஜியங்களையும் அவருக்கு வழங்கினான். ஈஸா அல் மஸீஹ் தாம் கொண்டிருந்த வல்லமையினால் அவை அனைத்தையும் மேற்கொண்டார். அவர் அவரது பிதா அவருக்காக மற்ற இராஜ்ஜியங்களை ஆயத்தம் பண்ணியிருக்க, மற்ற மனிதர்களைப் போன்று ஷைத்தானுக்கு செவிகொடுக்க மட்டுமே தேவையாயிருந்தது. ஈஸா அல் மஸீஹ் முழுமையாக இந்த சோதனையை எதிர்த்ததுமல்லாமல் அதனை முறியடித்தார்.

இறைவன் பூமியில் அவ் வனாந்தரத்தில் அவரை தனிமனிதனாக்கியிருந்தார். அவரது பிதாவின் சித்தத்திற்கு விரோதமாக ஷைத்தானுக்கு மட்டும் அவரது நமஸ்காரத்தை வழங்கினால் அனைத்து மக்களையும் தர ஆயத்தமாயிருந்தான். ஈஸா அல் மஸீஹ் இதை மறுதலித்தார். ஷைத்தான் அவருக்கு வழங்க இருந்ததைப் போன்று மனுஷீக பெருமை அடிப்படையில் மனிதர்கள் தன்னை கனப்படுத்த வேண்டிய தேவை ஈஸாவுக்கு இல்லை. இவ்வுலக ஒழுங்கிற்கு பின்னால் சென்று - அவர் எப்போதும் நாடிய இறை புகழை விட, மக்களால் வரும் புகழ்ச்சியினால் மாத்திரமே பிரபல்யமடைந்த உயர் அந்தஸ்து பெற்ற ஒரு மன்னர் குழுவுக்கு அதிபதியாக இருக்க அவர் விரும்பவில்லை. அவருக்கு முன்பாக தம் சொந்த திட்டங்களுடன் துன்யாவை ஆளும்படி நாடி வாழ்ந்த அநேகர் சென்ற வழியில் செல்ல அவர் ஆயத்தமாயிருக்கவில்லை, மாறாக முழுமையான உண்மைத்துவத்துடன் தாழ்மையுடன் இறைவனுக்கு அர்ப்பணித்தார்.

அவர்மாம்சத்தில் பாவத்தை வெறுத்தார்”. எந்த மனித சரீரமும் நலிவுற்று பெலன் இழந்தபடியால் பாவ வல்லமையை எதிர்க்க முடியாதிருந்தது. ஆனால் ஈஸா அல் மஸீஹ் பாவத்தின் வல்லமையை அதன் கூடாரத்திலேயே அழித்தார். பாவத்தின் அரணுக்குள் இருந்த எங்களுக்கு விடுதலை அளிக்கும்படி வந்தாரே, அவருக்கான வெற்றியின் கனியையும் அனுபவிக்கச் செய்தார்.

ஆனால் இதைச் செய்வதற்கு அவர் பாவத்தின் முழுமையான சோதனையை அனுபவித்தது மட்டுமன்றி, அதனது நேரடி பின்விளைவுகளையும் சந்தித்தார். இதை அடையும்படி தானாகவே சிலுவைக்குச் சென்றார். இறைவன் பாவத்தின் மீதான முழுக் கோபத்தையும் அகற்றினார். மனித சரீரமே அது காணப்படுவதற்கான ஒரே இடம். அதன் பிரகாரமே பாவத்தின் முழு விளைவையும் மனிதனுக்குப் பதிலாக ஈஸா அல் மஸீஹ் சகித்துக்கொண்டார். அவர் தான் மரிக்கும்போது மிக ஆழ்ந்த பகுதிக்குள் சென்றார். மரணம் பாவத்தின் மிக மோசமான விளைவு. ஈஸா அல் மஸீஹ் இறுதியில் பாவத்தின் மீதான முழுமையான வெற்றியைப் பெறும்படி காடியைக் குடித்தார். அவர் சிலுவையில் அறையப்பட்டபோது, பாவத்திற்கு எதிரான இறை கோபத்தை சகித்துக்கொண்டார். அவர் மரித்தபோது பாவத்திற்கான தண்டனையை அனைவருக்காகவும் ஒரு தடவை செலுத்தினார்.

மூன்று நாட்களுக்கு பின் அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தபோது, அவர் இறைவனுடைய பிரதான எதிரியின் மீது மகிமையான, அளவிட முடியாத வெற்றியை அனைவருக்காகவும் ஒரு தடவை பெற்றார். அவர் பரமேறிய போது அவரது சீடர்களுக்கு அவரது முழுமையான வெற்றியை பகிர்ந்துகொள்ளும்படி ரூஹுல் குத்தூஸ்ஸை அனுப்பினார்.

இறைவனோடு மனிதர்கள் ஒப்புரவாகும்படியாக, அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படும்படியாக, அவர்களுக்குள் வாசம்பண்ணும் பரிசுத்த ஆவியின் பெலத்தால் பலவீனமான சரீரத்தில் வெற்றியுள்ள வாழ்விற்கான வல்லமையைப் பெறும்படியாகவும் சூழலை ஏற்படுத்தினார். அனைத்து மனிதர்களும் ஈஸா அல் மஸீஹ்வுக்குள், பரிசுத்த ஆவியினாலே வழிநடத்தப்படும்படியாக, முழுமையாக கட்டுப்படுத்தப்படும்படியாக, மற்றும் இறை நீதியை நிறைவேற்றும்படியாக, மனிதர்கள் முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் சிந்தையோடும் அவரை நேசிக்கும்படியாக செய்தார். எல்லா மனிதர்களும் பாவ சோதனையிலிருந்து விடுதலை பெறும்படியாகவும் அதி பரிசுத்தத்தின் பங்காளிகளாகவும் நீதியின் பாதையில் நடக்கிறவர்களாகவும் இருக்கும்படியான வாசலை திறந்தார்.

(தொடரும்)


Comments

  1. http://imaammahdi.blogspot.in/2011/08/blog-post_7103.html

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?