இறைவேதத்தில் இயேசுகிறிஸ்துவின் மகிமை

நிகரற்ற ஈஸா அல் மஸீஹ் - பகுதி 10

குர்ஆனிலும் இறைவேதத்திலும்  ஈஸா அல் மஸீஹ் அவர்களின் தனித்துவம்

6. இறைவேதத்தில் இயேசுகிறிஸ்துவின் மகிமை

எம்மைச் சூழ்ந்திருக்கும் தீமையிலிருந்து எம்மை விடுவிக்கத்தக்கதாக, முதல் தடவையாக இயேசுகிறிஸ்து அனைத்து விதத்திலும் எம்மைப் போலாவதற்கு இவ்வுலகிற்கு வந்தார், நித்தியத்திலிருந்தே பிதாவோடு தனக்கிருந்த மகிமையை விட்டு, தன்னைத்தானே வெறுமையாக்கி, எம்மைப் போன்ற மனிதனானார். சாதாரண மனிதனாகவே அவர் தன்னைக் காண்பித்தார். அதனால் அவர் துன்யாவில் வாழ்ந்த காலப்பகுதியிலிருந்து இன்று வரை மில்லியன் கணக்கான மக்கள், அவர் மனிதனை விடப் பெரியவரல்ல என கருதச் செய்தது.

இயேசு மனிதன் என்பதை விட வேறொன்றுமில்லை என  அநேகர் நினைக்கிறார்கள். ஆனால் இயேசு இரண்டாம் தடவை வருவார் அப்போது அவரது கிரியை எதிர்மாறானதாய் இருக்கும். அவர் இருக்கிறவண்ணமாகவே தமது எல்லா மகிமையோடும் வருவார். அவரது மகிமையின் பிரகாசம் ஒப்பீட்டளவில் சூரியனையே சிறிய வெளிச்சம் போலாக்கும். அவர் அவரது வருகையைப் பற்றி இப்படிக்கூறினார்,

அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்                           
 (மத்தேயு 24:29-30).

அவர் தமது அனைத்து மாட்சிமை பொருந்தி மகிமையோடு வெளிப்படும்போது, ஒவ்வொரு வகைக்குரிய பிரகாசங்களும் தோல்வியடைந்து ஒளிந்துகொள்ளும். ஆனால் நம்மைப் போல ஆகும்படி முதல் தடவை பூமிக்கு வந்ததுபோல, இரண்டாம் தடவை அவர் அர்ஷிலிருந்து எல்லா மகிமையோடும் வெளிப்படும் நாளில்,
அவருக்கு உண்மையான அனைத்து சீஷர்களையும் அவரைப் போல மாற்றும்படி வருவார்.

“அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்             (மத்தேயு 13:43).

பின்பு பாவத்தின் அடையாளங்கள் அனைத்தும் அகன்றுபோக, அவர் தம்முடையவர்களை பாவமற்ற, மகிமையான சரீரத்துடன் எழுப்புவார். பாவிகள் மீதான அவரது அளவிடமுடியாத அன்பின் நிமித்தம் சிலுவையில் உயிர் நீத்தபோது, எம் அனைத்து தீயச் செயல்களையும் பாவங்களையும் தம்மீது ஏற்றுக்கொண்டு, அதற்குப் பதிலாக மகத்தான அவரது கிருபையினாலும் அன்பினாலும் அவரது நீதியினையும் பாவமற்ற தன்மையினையும் தந்தார்.

இயேசு எனும் இந்நபர் தனித்துவமானவர். ஏனெனில், அவர் தமது அன்பிலும் பரிசுத்தத்திலும் நீதியிலும் நித்திய மகிமையிலும் நிகரற்றவர். அவரே இறைவனுடைய நித்திய குமாரனாவார். எம்முடைய பாவங்களுக்காக அவர் சிலுவையில் மரித்தபோது, அவர் எம்மை எவ்வளவாய் நேசித்தார் என்பதையும் எம்மீதான அவரது அளவிட முடியாத கிருபையினதும் இரக்கத்தினதும் ஐசுவரியத்தையும் காண்பித்தார்.

இத் தனித்துவ நபரான இயேசுவுடன் நீங்கள் செய்யப்போவது என்ன? அவரது கனத்தையும் கிருபையையும் வியந்து அவர் பாதத்தண்டையில் விழுவாயா? அல்லது இறைவனுடைய நியாயத்தீர்ப்பு வெளிப்பட்டு அவரது எதிரிகள் அவரது காலின் கீழ் நசுக்கப்படும் நாளில் அவர் பாதத்தண்டையில் விழுவாயா? இறைமகனில் விசுவாசம் வைத்து, அவரது நாமத்தில் நித்திய வாழ்வை சுதந்தரித்துக்கொள்வதை தெரிந்துகொள்வாயா? அல்லது தொடர்ந்தும் மகிமை, மாட்சிமைமிக்க அவரை மறுதலித்து, அவர் தரும் இரட்சிப்பை மறுதலிப்பதன் மூலம் நித்திய வாழ்விற்குப் பதிலாக, இறை கோபத்தை உங்கள் மீது வருவித்துக்கொள்வீர்களா?

(ஈஸா இறைமகனான அல் மஸீஹ்) இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது                     (யோவான் 20:31).


Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?