Posts

Showing posts from May, 2013

ஈஸா அல் மஸீஹின் தனித்துவம்

நிகரற்ற ஈஸா அல் மஸீஹ் - பகுதி 5 குர்ஆனிலும் இறைவேதத்திலும்   ஈஸா அல் மஸீஹ் அவர்களின் தனித்துவம் 2.         ஈஸா அல் மஸீஹின் தனித்துவம் குர்ஆனிலும் இறைவேதத்திலும் ஈஸா அல் மஸீஹ்வின் வாழ்க்கை பற்றி போதிக்கப்பட்டுள்ள நான்கு அம்சங்களை நாம் பட்டியலிட்டோம் . இவ் அம்சங்களிலிருந்து நாம் ஈஸாவைப் பற்றி கற்றுக்கொள்ளக்கூடிய விடயங்கள் என்ன ? முதலாவது , மனுக்குலத்தின் வரலாற்றில் தனித்துவமான ஒரு நபரை இது எமக்கு குறித்துநிற்கின்றது . இரண்டாவது , இத் தனித்துவம் வேறு எந்த நபரும் கொண்டிராததும் , ஒரு நபருக்கே உரிய உயரிய கனத்தையும் குறிக்கின்றது . இந்த தொடரில் ஈஸா அல் மஸீஹின் தனித்துவத்தைப் பற்றி இதுவரை நாம் கருத்திற்கொண்ட நான்கு அம்சங்களையும் சுருக்கமாக ஆராய்வோம் . அ ).    கன்னி பிறப்பு கன்னியினிடத்தில் பிறந்ததன் மூலம் ஈஸா அல் மஸீஹ் தம் வாழ்வில் அசாதாரண , தனித்துவமான ஆரம்பத்தைக் கொண்டிருந்தார் . மனுக்குலத்தின் வரலாற்றில் இவ்விதமாக அசாதாரண விதத்தில் பிறந்த ஒரே நபர் அவரே . ஆ ).   ஈஸா அல் மஸீஹின் பாவமற்ற தன்மை

ஈஸா அல் மஸீஹ்வின் இரண்டாம் வருகை

நிகரற்ற ஈஸா அல் மஸீஹ் - பகுதி 4 குர்ஆனிலும் இறைவேதத்திலும்   ஈஸா அல் மஸீஹ் அவர்களின் தனித்துவம் ஈ ). ஈஸா அல் மஸீஹ்வின் இரண்டாம் வருகை ஈஸாவன் வாழ்வு பற்றி குர்ஆனும் இறைவேதமும் ஒத்துள்ள , நாம் கருத்திற்கொள்ளவேண்டிய கடைசி காரியம் , ஈஸா அல் மஸீஹ்வின் இரண்டாம் வருகை ஆகும் . குர்ஆனில் ஈஸா அல் மஸீஹ்வின் வருகை பற்றி தெளிவாக போதிக்கும் ஒரு வசனம் பின்வருமாறு : நிச்சயமாக அவர் ( ஈஸா ) இறுதிக் காலத்திற்குரிய அத்தாட்சியாவார் .                                             சூறா 43:61 இந்த பகுதி அரபு மூலப் பிரதியில் சுருக்கமாக கூறப்பட்டிருப்பினும் ஆங்கில மொழிபெயர்ப்பானது சரியாகவே காணப்படுகின்றது . மீண்டுமாக இரண்டாவது வருகை நிகழும் விதம் மற்றும் அதன் விளைவு தொடர்பாக கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் வித்தியாசப்படுகின்ற போதிலும் அந்த உண்மையை ஏற்றுள்ளனர் . இறைவேதத்தின் தீர்க்கதரிசிகள் புத்தகத்தில் , ஈஸா அல் மஸீஹ்வின் இரண்டாம் வருகையானது அதிகளவில் பேசப்பட்டுள்ள கருத்துக்களில் ஒன்றாகும் . அவற்றுட் சிலவற்றை இங்கு குறிப்பிடுவது