கலிமதுல்லாஹ் மானிடனாக அவதரித்தல் (ஆ)


பகுதி 1
இறை ஒளியின் பிரகாசம் (யோவான் 1:1 - 4:54)

இன்ஜீல் யோவான் 

யோவான் 1:2-4 

2 அவர் ஆதியிலே இறைவனோடிருந்தார். 3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. 4 அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.

ஈஸா அல் மஸீஹ் தனக்காக வாழாமல் எப்போதும் இறைவனுக்காகவே வாழ்ந்தார். அவர் பிதாவிலிருந்து பிரிந்து வராமல், அவரை நோக்கி இயங்கிக் கொண்டிருந்தார், அவரில் வாழ்ந்தார், அவரில் நிலைத்திருந்தார். தன்னுடைய பிதாவை நோக்கிய மஸீஹின் இந்த இயக்கம் மிகவும் முக்கியமானதாக இருந்ததால், இன்ஜீல் யோவானின் ஆரம்பத்தில் இந்தப் பொருள் வரும்படியான காரியங்களைத் திரும்பத்திரும்பக் கூறுகிறார். ஈஸா அல் மஸீஹ் அவர்களுக்கும் அவருடைய பிதாவுக்குமிடையிலிருந்த இந்த நிரந்தர ஐக்கியமே பரிசுத்த திரியேகத்துவத்தின் இரகசியமாகும். ஒருவரிலிருந்து ஒருவர் பிரிந்திருக்கும் மூன்று தனித்தனி இறைவன்களை நாம் ஈமான்கொள்வதில்லை. ஆனால் அன்பினால் நிறைந்த ஒரே இறைவனை நாம் ஈமான் கொள்கிறோம். ஏக இறைவன் ஒதுங்கி தனிமையில் வாழ்வதில்லை. அவருடைய குமாரன் (குலாம்) எப்போதும் அவருடன் இருக்கிறார். அவருடன் பூரணமாக ஒத்திசைந்து வாழ்கிறார். ஒருவர் தன்னுடைய இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் (ரூஹுல் குத்தூஸ்) ஊற்றப்பட்ட அனுபவத்தைப் பெறாவிட்டால், இறைவனுடைய அடிப்படைத் தன்மையைக் குறித்த உண்மையைப் புரிந்துகொள்ள முடியாது. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியை ஏக இறைவனாக ஐக்கியப்படுத்துவது இறையன்பு மட்டுமேயாகும்.

ஆதியில் இறைவன் உலகத்தைப் படைத்தபோது, அதை அவர் தனிமையில் அமைதியாக செய்யவில்லை. மாறாக அவர் தன்னுடைய வார்த்தையின் (கலிமாவின்) மூலமாகவே உருவாக்கினார். ஈஸா அல் மஸீஹே இறைவனுடைய வார்த்தையாக இருப்பதால், உலகம் அவர் மூலமாகத்தான் உருவானது. இதற்கு மஸீஹ் இரட்சகரும், பரிந்துபேசுபவரும், மீட்பரும் மட்டுமல்ல படைத்தவரும் அவரே என்று பொருள்.

·         அவர் படைக்காத எதுவும் இருக்க முடியாது என்பதால் அவர் சர்வ வல்லவர்.
·         அவர் செய்யாத எதுவும் நடைபெறாது என்பதால் அவரே அனைத்தையும் கட்டுப்படுத்துபவர்.
·          
ஈஸா அல் மஸீஹ் யார் என்பதை உணர்ந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் போதிய அளவு பெரிய இருதயத்தை ஏக இறைவன் நமக்குக் கொடுக்க வேண்டும். அனைத்து நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளும், அனைத்து ஆதார சக்திகளும், விண்மீன் கூட்டங்களும் ஈஸா அல் மஸீஹ்வின் வல்லமையையும் மகிமையையும் தாழ்மையுடன் வெளிப்படுத்துபவைகளேயன்றி வேறல்ல. உங்களுடைய குரல், உங்களுடைய உடலமைப்பு, இதயத் துடிப்பு ஆகிய அனைத்தும் அவர் உங்களுக்கருளிய கொடைகளே. அப்படியானால் நீங்கள் எப்போது அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்?

இறைவனையும் அவருடைய வார்த்தையையும் (கலிமா) அவருடைய ஆவியையும் (ரூஹ்) தவிர அனைத்துப் பொருட்களும் படைக்கப்பட்டவை. அவர் தன்னில் உயிருள்ளவராகவும், நித்தியராகவும், பரிசுத்தராகவும் காணப்படுகிறார். இறைவன் தன்னில் ஜீவனுள்ளவராயிருப்பது போலவே, மஸீஹ்வும் உண்மையான வாழ்வின் ஆதாரமாகவும், உயிர்ப்பிக்கும் உண்மையுள்ளவராகவும், நம்முடைய பாவம், குற்றம் ஆகிய மரணத்திலிருந்து நம்மை உயிர்ப்பித்து, நம்மில் நித்திய வாழ்வை நிலைநிறுத்துகிறவராகவும் காணப்படுகிறார். மஸீஹ்வில் உள்ள இந்த தெய்வீக ஜீவன் மரணத்தை மேற்கொண்டது; அவர் தன்னுடைய தெய்வீக உயிரின் வல்லமையினாலே கல்லறையை விட்டு வெளியேறினார். ஈஸா அல் மஸீஹ் சிருஷ்டிகர் மட்டுமல்ல, தன்னில்தான் ஜீவனின் ஆதாரமாகவும் காணப்படுகிறார். பரிசுத்தராயிருக்கிறார் என்ற நிலையில் அவர் ஒருபோதும் மரிப்பதில்லை. இறைவனிலோ அல்லது அவருடைய குமாரனிலோ எந்தப் பாவமும் காணப்படாது, அதனால் அவர் எப்போதும் உயிரோடிருக்கிறார். ஈஸா அல் மஸீஹின் ஜீவனைக் குறித்த சிந்தனைகளை இன்ஜீல் யோவானில் நாங்கள் நாம் திரும்பத்திரும்பக் காண்கிறோம். அவருடைய அடிப்படையான கொள்கைகளில் இந்த ஜீவனும் ஒன்று.

சூரியனுடைய ஒளி பூமிக்கு உயிரைக் கொடுக்கிறது. ஈஸா அல் மஸீஹ் அவர்களை பொறுத்தவரை இதற்கு எதிரிடையாக காணப்படுகிறது: வெளிச்சத்திற்குக் காரணமே ஈஸா அல் மஸீஹின் ஜீவன்தான். அவர் மூலமாக நாம் அனுபவிக்கும் உயிர்மீட்சி நமக்கு நம்பிக்கையைக் கொடுக்கிறது. ஈஸா அல் மஸீஹை ஈமான் கொள்வது, மரணத்தையும் கேள்விகணக்கையும் உண்டுபண்ணும் ஷரீஆவுக்குரியதல்ல, அது ஜீவன், ஒளி, நம்பிக்கை ஆகியவற்றின் செய்தி. மரணத்திலிருந்து ஈஸா அல் மஸீஹ் உயிர்தெழுந்ததன் மூலம் அனைத்து அவநம்பிக்கையும் நீங்கிவிட்டது. ரூஹுல் குத்தூஸ் நமக்குள் வாசம்செய்வதனால் நாம் இறைவனுடைய ஜீவனில் பங்குடையவர்களாக மாற்றப்பட்டுள்ளோம்.

பாவத்தினால் உலகம் இருளடைந்திருக்கிறது, ஆனால் அல் மஸீஹ் ஒளியில் அன்பாயிருக்கிறார். எந்தவித இருளோ, தவறோ, தீமையோ அவரிலில்லை. இதனால் ஈஸா அல் மஸீஹ் முழு மகிமையுடன் காணப்படுகிறார். அவர் ஒளியைக் காட்டிலும் அதிகமாகப் பிரகாசிக்கிறார். இருப்பினும் இன்ஜீல் யோவானில் அவருடைய மகிமையின் பிரகாசத்தைக் கூறி ஆரம்பிக்காமல், அவருடைய பலத்தையும் ஜீவனையும் குறிப்பிடுகிறது. ஏனெனில் ஈஸா அல் மஸீஹின் பரிசுத்தத்தைக் குறித்த அறிவு, நம்முடைய பாவங்களை நமக்கு வெளிப்படுத்தி, நம்மை நியாயந்தீர்த்து, நம்மை அழித்துவிடும். ஆனால் அவருடைய ஜீவனை நாம் உணர்ந்துகொள்வது நமக்கு வாழ்வைக் கொடுக்கும். ஈஸா அல் மஸீஹ்வை திக்ரு செய்தல் (தியானித்தல்) உண்மையில் நம்மை ஆறுதல்படுத்தி நமக்குப் புத்துணர்வூட்டும்.
ஈஸா அல் மஸீஹே மனிதர்களுக்கு ஒளியானவர். அவர் தனக்காக ஒளிவீசி, தன்னுடைய சொந்தப் பெயரை கனப்படுத்துவதில்லை. மாறாக அவர் நமக்காக ஒளிவீசுகிறார். நம்மிலிருந்து ஒளிவீசுவதில்லை, இருள்தாள் புறப்பட்டுவரும். மனுக்குலமனைத்தும் தீமையுள்ளதாயிருக்கிறது. ஆனால் நாம் ஈஸா அல் மஸீஹ்வை அறிந்துகொண்டு நம்முடைய இருளை உணரும்படி மஸீஹ் நமக்கு ஒளியூட்டுகிறார். அவருடைய நற்செய்தியின் மூலம் நாம் மரணத்திலிருந்து எழுந்து சதாகால வாழ்வுக்குள் நுழைகிறோம். நம்முடைய நம்பிக்கையற்ற நிலையை விட்டுவிட்டு அவரிடம் வரும்படி அவருடைய வாழ்வின் ஒளியின் மூலமாக நம்மைக் கவர்ந்து அழைக்கிறார். நாம் தீர்மானத்தோடும் நம்பிக்கையோடும் அவரிடத்தில் சேர்கிறோம்.

துஆ

: யா ஈஸா அல் மஸீஹே , நீரும் பிதாவும் பரிசுத்த ஆவியும் ஒன்றாயிருக்கிறதற்காக உமக்கு முன்பாக நாங்கள் தொழுதுகொள்கிறோம். நீர் உம்முடைய பிதாவோடு இசைந்து இந்த உலகத்தைப் படைத்தீர். நீர் எனக்கு வாழ்வளித்தீர். என் வாழ்விலுள்ள இருளை எல்லாம் மன்னித்து, நான் பாவத்தின் இருளைவிட்டு சதாகால வாழ்வின் வெளிச்சத்துக்குள் போகும்படியாக, உம்முடைய பரிசுத்த ஆவியின் மூலமாக நீர் எனக்கு ஒளியூட்டுவாயாக.  ஆமீன்..

கேள்வி:

  1. இன்ஜீல் யோவானில் ஆரம்பத்தில் கூறப்படும் ஈஸா அல் மஸீஹின் ஆறு குணாதிசயங்கள் யாவை?


Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?