கலிமதுல்லாஹ் மானிடனாக அவதரித்தல் (ஈ)



2. நபி யஹ்யா அவர்கள் ஈஸா அல் மஸீஹ் அவர்களுக்காக வழியை ஆயத்தப்படுத்துகிறார் (யோவான் 1:6-13)


யோவான் 1:6-8 

6 இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான்(யஹ்யா). 7 அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி(ஈமான்கொள்ளும்படி) அந்த ஒளியைக் குறித்துச் சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான். 8 அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்.

இறை ஒளிக்குள் வரும்படி மக்களை அழைக்க இறைவன் யஹ்யா நபியை இருண்ட உலகத்திற்குள் அனுப்பினார். இருளில்தான் பல பாவங்கள் செய்யப்படுகின்றது என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் யாரெல்லாம் தங்களுடைய குற்றத்தை, மனந்திரும்பிய, உடைந்த இதயத்தோடு அறிக்கை செய்கிறார்களோ அவர்கள் ஒளியினிடத்திற்கு வந்திருக்கிறார்கள். நீங்கள் எப்படி? நீங்கள் ஒளியினிடத்தில் வந்திருக்கிறீர்களா? அல்லது இன்னும் இருளில் ஒளித்துக்கொண்டிருக்கிறீர்களா?

அடையாளமாக யோர்தான் நீரோட்டத்தின் அந்த ஞானஸ்நானம் மக்களுடைய இருதயத்தின் நிலையை யஹ்யா நபியவர்கள் மக்களுக்கு விளக்கப்படுத்தினார். இறை சட்டத்தின்படி அவர்கள் அனைவரும் தீயவராயிருக்கிறார்கள். அவர்கள் ரப்புடைய நாளில் அழியாமல் இருக்கும்படியாக அவர்களுக்கு மனந்திரும்புதலும் ஒரு அடிப்படையான மாற்றமும் தேவையாயிருக்கிறது. யஹ்யா நபியவர்களுடைய அழைப்பு பெருந்திரளான மக்களை அசைத்தது. வனாந்தரத்தில் வந்து தங்களை மனந்திரும்பும்படி அழைத்தவரிடத்தில் அவர்கள் விரைந்தோடினார்கள். அவர்கள் தங்கள் பாவங்களை வெளிப்படையாக அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் ஞானஸ்நானம் எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து சுத்திகரிக்கப்படுவதற்கும், தங்களுடைய சுயநலம் மூழ்கிப்போவதற்கும் இது அடையாளமாகக் காணப்பட்டது.

இறைவன் யஹ்யா நபியை தெரிந்துகொண்டார். அவர் யஹ்யாவுக்கு அறிவூட்டி, மக்கள் தங்களை உணர்ந்து, மாற்றிக்கொண்டு, ஈஸா அல் மஸீஹின் வருகைக்கு ஆயத்தப்படும்படி மக்களை அசைக்கும்படியான கட்டளையைக் கொடுத்தார். ரப்புடைய நாமத்தினால் வருகிறவரைப் பற்றி வேதத்தை வைத்திருந்த யூதர்களுக்கு அதிகம் தெரியும். இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்கள் மேல் வெளிச்சம் பிரகாசித்தது (ஏசாயா 9:2) என்று ஏசாயா நபி அவரைப் பற்றிச் சொன்னார். மேலும் அவர், எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் வந்தது (ஏசாயா 60:1) என்று ரப்புடைய பெயரில் சொன்னார். இருளிலிருந்து ஒளியினிடத்திற்கு வருவது பழைய ஏற்பாட்டு மக்களுக்கு மட்டும் உரியதல்ல, எல்லா மக்களுக்கும் உரியது என்று யஹ்யா நபி சொன்னார். இவ்வாறு யஹ்யா நபியின் செய்தி முழு உலகத்தையும் உள்ளடக்கியதாக இருந்தது. அதனால் சின்ன ஆசியாவிலும் மத்தியதரைக் கடலைச் சுற்றியுள்ள எல்லாப் பகுதிகளிலிருந்தும் பலர் அவருடைய மரணத்திற்குப் பிறகு பல வருடங்களாக அவரைப் பின்பற்றினார்கள்.

தான் ஒளியல்ல என்றும் அந்த ஒளியைக் குறித்து முன்னறிவிப்பவர் என்றும் அவர் கூறிய போதிலும் ஆயிரக்கணக்கானவர்கள் அவரைப் பின்பற்றினர். அவர் மக்களை தன்னிடம் வழி நடத்தாமல், ஈஸா அல் மஸீஹிடம் வழிநடத்தினார். இது இறைவனுடைய உண்மை ரஸுல்மாரின் தெளிவான அடையாளம் ஆகும், அவர்கள் தங்களைச் சுற்றி மக்களைக் கட்டியமைக்காமல், ஈஸா அல் மஸீஹ்வை சுற்றிக் கட்டியமைப்பார்கள்.

யஹ்யா நபியவர்களுடைய தஃவாவின் நோக்கம் மனிந்திரும்புதலும் ஞானஸ்நானமுமல்ல, ஈஸா அல் மஸீஹ்வை மக்கள் ஈமான் கொள்ளவேண்டும் என்பதே அவரின் தஃவாவாக இருந்தது. சமுதாயம் தன்னை மஸீஹ் என்று நினைப்பார்கள் என்பதை யஹ்யா நபி நன்கு அறிந்திருந்தார். அதனால் அவர் அந்தச் சோதனையில் விழுந்துவிடாமல் ரப்புல் ஆலமீனுக்கு வழியை ஆயத்தப்படுத்தினார். வரப்போகிற ஈஸா அல் மஸீஹே மக்களுக்குப் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுப்பவர் என்பதை தெளிவாக தனது தஃவாவில் அறிவித்தார். பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்றாலும் வெறும் உளவியல் ரீதியான மனந்திரும்புதல் மனிதர்களுக்கு போதுமானதல்ல என்றும் நம்முடைய உள்ளான மனிதனில் ஒரு முழுமையான மாற்றம் நிகழ வேண்டும் என்றும் அவர் அறிந்திருந்தார். இவ்வாறு மனிதர்களை மாற்றும் அதிகாரம் எந்த ஒரு நபிக்கும் கொடுக்கப்படாதது போல யஹ்யா நபிக்கும் கொடுக்கப்படவில்லை. மனித வாழ்க்கையை மாற்றும் சிறப்புரிமை படைப்பின் செயலைச் செய்யும் ஆதி வெளிச்சத்திற்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஈஸா அல் மஸீஹின் நாமத்தை விசுவாசித்து, அவருடைய வெளிச்சத்திற்கு திறந்துகொடுக்கும் மக்களை உயிர்ப்பிக்கும் இந்த அதிகாரம் வாழ்வழிக்கும் வார்த்தையாகிய(கலிமா) அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வழியில், ஈமான் மட்டுமே புதிய காலத்திற்குள் மக்களை நடத்திச்செல்லும் என்று அறிந்து யஹ்யா நபி பெருந்திரளான மக்களை ஈஸா அல் மஸீஹின் விசுவாசத்திற்கு வழிநடத்தினார்.

துஆ
: என் இறைவனே, நீரே உலகத்தின் வெளிச்சமாகவும், பரிதாபத்துக்குரியவர்களின் நம்பிக்கையாகவும் இருக்கிறபடியால் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நீர் எங்கள் இருதயத்திலிருந்த இருளை அகற்றி, எங்களுடைய பாவங்களை வெளிப்படுத்தி அவற்றை மன்னித்தீர். எங்களை வெளிச்சத்தின் பிள்ளைகளாக்கி, முடிவற்ற வாழ்வுக்காக விடுவித்தபடியால் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். உம்முடைய வெளிச்சத்தின் ஒளிக்கதிர்கள் எங்களுடைய நண்பர்களையும் உறவினர்களையும் சென்றடைந்து, அவர்களும் மெய்யான விசுவாசத்தையும் மனந்திரும்புதலையும் அனுபவித்து, உம்முடைய பெரிய வெளிச்சத்தில் நுழைய வேண்டும் என்று நாங்கள் உம்மிடம் மன்றாடுகிறோம்.
கேள்வி:
  1. யஹ்யா நபியின் தஃவாவின் முக்கிய நோக்கங்கள் யாவை?


Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?