இஸ்லாத்தை தழுவிய ஆயிஷா என்கிற லித்வினின் சாட்சி
பகுதி 2
“பாவத்தின் சம்பளம் மரணம்” என்ற இறைவேதத்தின் வசனம் தன் வாழ்நாளில் வாசித்ததே இல்லை என்பதுபோல் “ஒவ்வொரு ஆத்துமாவும் மரணத்தை சுவைத்தே தீரும்” என்ற குர்ஆன் வசனம் இஸ்லாத்தை தேட
தூண்டியதாக சகோதரி ஆயிஷா என்கிற லித்வின் சொல்வது ஒரு முன்னால் ஓய்வுநாள் பாடசாலை ஆசிரியை
மிகவும் பிரசித்தமான வேத வசனத்தைகூட மனனமிட்டு இருக்கவில்லை என்பதை காட்டுகிறது. பாவமன்னிப்பின்
நிச்சயத்தை இவள் பெற்றிருந்தால் இந்த மதமாற்று அரங்கேற்றமே நடந்திருக்குமா? இந்த குர்ஆன்
வசனம் இறக்கப்பட்டதாக இஸ்லாமியர் கூறும் சூழ்நிலையை இவள் அறிந்திருந்தால் இந்த வசனத்திலுள்ள
பித்தலாட்டம் அப்பட்டமாக தெரிந்திருக்கும்.
இந்த உலக வாழ்க்கையை சிறைச்சாலையாக நினைத்து வாழ்ந்தால்
மறுமையில் வெற்றி கிடைக்கும்// குர்ஆனில் இவ்வுலகிலும் மறுமையிலும் உயர்ந்தவராகக் காட்டும்
இயேசு கிறிஸ்துவை மறுதலித்துவிட்டு, “நான் சிறைச்சாலையில்தான் இருப்பேன்” என்று பிடிவாதம் பிடிக்கிறாள் இந்த சகோதரி. அதனை அவள் தன் சாட்சியின் ஆரம்பத்திலேயே
“நான் ரொம்ப Stubborn ஆன பொண்ணு” சொல்லிவிட்டாள். இஸ்லாம் என்பது சிறைச்சாலை அந்த
சிறைச்சாலையிலிருந்து இறைவன் பலரை வெளியே எடுக்கிறார். அப்படி எடுத்த பலருடைய சாட்சிகளை
நீங்கள் இணையத்தளங்களில் வாசிக்கலாம், வீடியோக்களை பார்வையிடலாம்.
மேலும் இஸ்லாம் கூறும் சுவர்க்கத்தை பற்றிய அறிவு இந்த
ஆயிஷாவுக்கு இருந்திருந்தால் இவள் நிச்சயமாக கிறிஸ்தவத்தை விட்டு போயிருக்கமாட்டாள்.
ஒரே இரவில் அவள்
எடுத்த இந்த முடிவில் எப்படி இஸ்லாத்திலுள்ள அத்தனை காரியங்களையும் அவளால் புரிந்து
கொள்ள முடியும்? என்று வாசகர்கள் சிந்திக்கலாம். ஏனெனில் அவளின் சாட்சி வீடியோவை
உன்னிப்பாக பார்வையிட்ட அத்தனை பேரும் ‘அவள் ஒரே இரவில் சாகிர் நாயிக்கின்
பைபிளுக்கு எதிரான வீடியோக்கள், கிறிஸ்தவத்திலிருந்து மதமாறியவர்களின் வீடியோக்களை
பார்வையிட்டு அதே இரவில் தான் இஸ்லாத்துக்கு மதமாறவேண்டும் என்று முடிவெடுத்தாள்’ என்பது புரிந்திருக்கும்.
அப்படியானால் இவளுக்கு சாகிர் நாயிக்கை அறிமுகம் செய்தது
யார்? கிறிஸ்தவத்திலிருந்து வெளியேறி இஸ்லாமானவர்களின் வீடியோக்கள் இணையத்தளத்தில்
உள்ளது என்ற அறிவு எப்படி வந்தது? என்ற கேள்வி எழும்பும்.
இதன் உண்மை நிலையை அறிந்தவர்கள் அவளின் இஸ்லாமிய நண்பி
அல்லது நண்பர்கள். அவளுக்கு மிகவும் நெருக்கமான இஸ்லாமிய நண்பியோ நண்பரோ இருந்திருக்கவேண்டும்.
அவர் இவளுக்கு சாகிர் நாயிக்கை அறிமுகம் செய்திருக்கலாம். அவன் இவள் இஸ்லாத்தை தழுவவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்
இவளை வழிகெடுத்திருக்கலாம். அப்படியில்லாவிட்டால் கிறிஸ்தவ இளம் பெண்களை குறிவைத்து
மதமாற்ற பணியில் ஈடுபடும் ஒரு ஜமாத் (கூட்டம்)தாக இருக்கலாம். நான் நினைக்கிறேன் இவர்கள்
மூன்றுவிதமானவர்களும் சேர்ந்து 3 மாதத்தில் லித்வினை இஸ்லாமிய நரகத்துக்குள் இழுத்திருக்கதிறார்கள்.
//இந்த
மார்க்கத்துல புதுசாக ஏதோ ஒன்று இவர்கள் சொல்கிறார்கள்// ஆம் இஸ்லாம் உருவானபோதும்
அநேக கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவத்தை போன்று ஆனால் சற்று புதிதாக சொல்லப்படுவதாலேயே அதில்
கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்றார்கள். புதிதான காரியங்கள் எப்பொழுதும் மக்களை கவர்ந்து
இழுக்கும் என்பதை நான் சொல்லிதான் நீங்கள் தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை. பலவிதமான கள்ளப்போதனைகள் வரும் என்பதை
இறைவேதத்தை ஒழுங்காக இந்த சகோதரி கற்றிருந்தால் இந்த கள்ளப்போதனையில் இப்படி சிக்கியிருக்கமாட்டாள்.
அன்பு
கிறிஸ்தவர்களே!
·
உங்கள் குழந்தைகளின் நண்பர்கள் யார் என்பதில் நீங்கள் ஜாக்கிரதையாக இருங்கள்.
·
ஒரு உணவு நேரமாவது குடும்பமாக அமர்ந்து அந்த நாளில் நடந்த சம்பவங்களைப் பற்றி
உங்கள் பிள்ளைகளிடம் விசாரியுங்கள்.
·
நாள் தோரும் குடும்பமாக அமர்ந்து இறைவேதம் என்ன சொல்லுகிறது என்று அதை வாசித்து
தியானியுங்கள்.
(லித்வினின்
சாட்சி சாகிர் நாயிக்கிலிருந்து தொடர்வோம்)
Comments
Post a Comment