இஸ்லாத்தை தழுவிய ஆயிஷா என்கிற லித்வினின் சாட்சி (Part 4)


 //இன்டநெட்ல ஒருத்த// என்று இடையில் நிறுத்திவிட்டு, //நன் முஸ்லிம்கு தஃவா பன்னுர குருப்ல ஜாய்ன் பண்ணினேன்// என்கிறாள் ஆயிஷா என்கிற லித்வின். முகபுத்தகத்தில் அவளுக்கு மாற்று மதத்தினருக்கு தஃவா செய்யும் ஒரு பேஜை ஒருவர் அறிமுகம் செய்துவைத்தார் என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. இஸ்லாமியரின் பொய் குற்றச்சாட்டுகளுக்கு தெளிவான பதிலை கொடுக்கும் எத்தனையோ பேஜ்கள் இருக்க, இவள் ஏன் இஸ்லாத்துக்கு மதமாற்றும் பேஜை தேர்ந்தெடுத்தாள் சத்தியத்தை தேட? என்ற கேள்வியெழும்புகிறது.

மீண்டும் நாங்கள் லித்வினின் சாட்சியின் ஆரம்பத்தில் சொன்ன
நான் ரொம்ப Stubborn ஆன பொண்ணு// என்பதை ஞாபகத்துக்குக் கொண்டுவருவோம். லித்வின் தன்னைப்பற்றி அளவுக்கு அதிகமாக நினைத்துக்கொண்டிருந்தாள். தனக்கு வேதாகமம் நன்றாக தெரியும் என்று வீன் பெருமையில் இருந்தாள். ஒரு காலத்தில் நானும் அப்படித்தான் இஸ்லாத்தின் அக்குவேரு ஆணிவேரு எல்லாம் அறிந்தவன் என்ற மமதையில் இருந்தேன். கிறிஸ்தவர்களுக்கு தஃவா (அழைப்பு பணி) செய்ய கிறிஸ்தவத்தை படித்துக்கொண்டிருந்தபோது ஒரு போதகர் இரண்டு புத்தகங்களை கொடுத்தார். ஒன்று ‘காபாவிலிருந்து கல்வாரிக்கு மற்றது ‘இஸ்லாமியரின் 100 கேள்விகளுக்கான பதில்கள்.

இரண்டாவது புத்தகத்தை வாசிக்கும்பொழுது ஒரு இடத்தில் அப்படியே ஸ்தம்பிதம் அடைந்துவிட்டேன். குர்ஆனிலிருந்து இயேசு மரித்து உயிர்த்தெழுந்தார் என்றும் பரிசுத்த குமாரன் என்றும் என்றும் இருந்தது. ஈஸா இறை வார்த்தை என்பதை ஏற்கனவே அறிந்திருந்தாலும் அதற்கு வேறுவிதமான வியாக்கியானங்கள் கொடுத்த என்னை, இந்த இரண்டு காரியங்களும் என்னை சிந்திக்க வைத்தது.

·        ‘இன்னி முதவப்பீக என்றால் நான் உன்னை மரணிக்கச் செய்வேன்.
·        ‘வராபிஉக இலைய என்றால் இன்னும் என்னளவில் உயர்த்திக்கொள்வேன்.
·        ‘குலாமன் சகிய்யாஎன்றால் அதி பரிசுத்த குமாரன்.

இந்த குர்ஆன் வசனங்களுக்கு அடைப்புக்குறிக்குள் சொந்த விளக்கம் கொடுத்து வழிகெடுக்கின்றனர் இஸ்லாமிய அறிஞர்கள் என்பதை புரிந்துகொண்ட நான், அரபு மொழி தப்ஸீர்கள், அகராதிகளின் உதவியுடன் இந்த வசனங்களை ஆராய்ந்தேன். குர்ஆனில் பல பொய்களுக்கு மத்தியில் மறைந்திருந்த ஒரு சத்தியததை கண்டுகொண்டேன். தொடர்ந்து இறைவேதத்துடன் ஒப்பிட்டு ஆராய்ந்தேன். இறைவனிடம் சத்தியத்தை தெளிவாக காட்டுமாறு மன்றாடினேன். ஒரு தரிசனத்துக்கூடாக, இறைவன் இரட்சிப்பின் அனுபவத்தை எனக்குத் தந்தார்.
முதவப்பா என்ற சொல் வபாத் என்ற சொல்லிலிருந்து வந்தது. இது தூக்கத்தை குறிக்கிறது என்று சத்தியத்தை மறுதலிக்க பல இஸ்லாமிய அறிஞர்கள் பாடாத பாடு இல்லை என்றே சொல்லவேண்டும். ராபிஉக இலைய என்றால் என்னளவில் உயர்த்திக்கொள்வேன் என்று பொருள். இதற்கு இது மறுமைநாளில் உயிரோடு அனைவரையும் எழுப்பும் நிகழ்வு. இயேசுவின் இரண்டாம் வருகையில் அவர் மீண்டும் மரித்து உயிரோடு எழுப்பப்படுவதை குறிக்கிறது என்று சமாளிக்க எவ்வளவு பாடுபடுகிறார்கள் இஸ்லாமிய அறிஞர்கள் என்பதை நான் நடைமுறையில் கண்டவன்.

குலாம் என்றால் குமாரன் என்று அர்த்தம் மகன் என்பதற்கு அரபியில் இப்னு என்பார்கள். குலாம் என்பது சாதாரண மகனை குறிக்கும் சொல் அல்ல. சகிய்யா என்றால் அதி பரிசுத்தம் என்று பொருள். அதாவது பாவமறியாத பரிசுத்த குமாரன் என்று பொருள் கொள்ளலாம். முஹம்மது நபி உட்பட அனைத்து நபிமார்களும் பாவிகள் என்று சொல்லும் குர்ஆன் இயேசு கிறிஸ்துவை மட்டுமே பாவமறியா பரிசுத்த குமாரன் என்று சொல்கிறது என்பதை புரிந்து கொண்ட எனக்கு சத்தியத்தில் வாழும் வாய்பு கிடைத்தது. அத்தோடு எனக்கு குர்ஆன் நன்றாக தெரியும் என்ற மமதையும் என்னைவிட்டு அகன்றது. இன்றும் எனக்குத் தெரிந்த காரியங்களைவிடவும் தெரியாத காரியங்களே அதிகம் என்று நினைக்கும் நிலைக்கு இறைவன் என்னை கொண்டுவந்தார்.

இறைவனோடு உள்ள உறவு என்பதும் இறைவனைப்பற்றி அறிந்திருப்பதும் ஒன்றல்ல என்பதை நான் புரிந்துகொண்டதுபோல, லித்வினும் புரிந்துகொள்ளவேண்டும் என்று ஜெபிக்கிறேன். ஏனெனில் அவள் பைபிளை பற்றி அறிந்திருந்தாள் (பிழையான விதத்தில்), ஆனால் இறைவனோடு அவளுக்கு உறவு இருக்கவில்லை. அவளைப்போன்று அநேக கிறிஸ்தவர்கள் இன்றும் இறைவனோடு உறவில்லாதவர்களாக ஊழியங்களில் ஈடுபடுகிறார்கள் என்பது வேதனைக்குறிய செய்தியாகும்.
அப்துல் கலாமை எத்தனைபேருக்கு தெரியும் என்று கேட்டால் நாம் எல்லாருக்கும் தெரியும் என்போம். ஆனால் எங்களில் எத்தனை பேரை அவருக்கு தெரியும் என்று கேட்டால் விழிபிதுங்குவோம். இறைவனோடு உறவு என்பதும் அதுபோலதான். அந்த உறவில் நாம் இருந்தால் ஒருநாளும் வழித்தவற மாட்டோம். அப்படி யாராவது வழி தவறியிருந்தால் உங்கள் உயிர் பிரியும் வரையில் நீங்கள் தாமதமில்லை மீண்டும் இறைவனுடன் உறவை புதுபித்துக்கொள்ளவதற்கு. அடுத்த நிமிடம் உயிரோடுதான் இருப்பீர்கள் என்ற நிச்சயம் உங்களுக்கு இருக்கிறதா?

கிறிஸ்தவர்கள் கவனத்திற்கு
·        நீங்கள் இஸ்லாமிய தளங்களில் போய் இஸ்லாம் பற்றிய உங்கள் கேள்விகளை கேட்க முன்பு இறைவேதத்தைக் குறித்து நன்றாக கற்றுக்கொள்ளுங்கள்.
·        மத வைராக்கியத்தில் விவாதிக்காமல், இஸ்லாமியர் சத்தியத்தை புரிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கில் அவர்களை நேசியுங்கள்.
·        முகபுத்தகத்தில் இஸ்லாமியருக்கு சத்தியத்தை சொல்ல தேவ வழிகாட்டல் உங்களுக்கு இருந்தால் உங்களுக்காக ஜெபிக்க ஒரு குழுவை ஆயத்தம் செய்துகொள்ளுங்கள்.
·        இயேசுவை முன்மாதிரியாக கொண்டு நாள்தோறும் இறைவனுடன் உறவைப்பேனும் ஜெப வேளையை மறந்துவிடாதிருங்கள்.


(லித்வின் என்ற ஆயிஷா கேட்ட கேள்விகளிலிருந்து தொடர்வோம்)

Comments

  1. ஒரு தரிசனத்துக்கூடாக, இறைவன் இரட்சிப்பின் அனுபவத்தை எனக்குத் தந்தார்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?