இஸ்லாத்தை தழுவிய ஆயிஷா என்கிற லித்வினின் சாட்சி
இஸ்லாத்தை
தழுவிய ஆயிஷா என்கிற லித்வினின் சாட்சி
(Part 1)
கோயம்புத்தூரில்
ஒரு கிறிஸ்தவ சகோதரி கடந்த ஜனவரி மாதம் தஃவா சென்டரில் (இஸ்லாமிய மதமாற்று மையத்தில்)
சேர்ந்த செய்தி இஸ்லாமியருக்கு பெரும் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்தது. அந்த கிறிஸ்தவ
குடும்பத்துக்கும் அவர்கள் சார்ந்த சபையாருக்கும் இது பேரிடியாக அமைந்தது. மதமாற்று
மையத்தில் தனது படிப்பை முடித்துக்கொண்டு அந்த சகோதரி மேடையேறி கிறிஸ்த பாணியில் தான்
இஸ்லாத்தை தழுவிய காரணத்தை சாட்சியாக சொல்லுகிறாள். முகப்புத்தகத்தில் வெளியான அந்த
வீடியோவில் அவள் சொல்லும் சாட்சியில் இருந்து கிறிஸ்தவர்கள் படிக்கவேண்டிய சில பாடங்களை
மேற்கோள் காட்டுவதே இந்த கட்டுரை. சகோதரி லித்வினியை விமர்சிப்பதோ அவளுக்கு அவதூறு
சொல்வதோ நமது நோக்கமல்ல என்பதை முதலில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தன் அன்பு மகள்
பாதாளத்தின் பாதையை, தானே விரும்பி தேர்ந்தெடுத்துக்கொண்டாள் என்ற வேதனையில் வாடும்
பெற்றோர், தங்கை, தம்பி, லித்வின் சென்னையில் இருக்கும்போது தன் மகளாகவே நினைத்து வளர்த்த
சித்தி போன்றவர்களின் மனங்களை இன்னும் வேதனைப்படும் என்பதற்காக இதனை கண்டுகொள்ளாமல்
இருக்கவும் முடியவில்லை.
ஆயிஷா
என்கிற லித்வினின் அறிக்கை
சகோதரி
லித்வின் மிகவும் அருமையாக தனது நிலைமையை விளக்குகிறாள்:
“நான் கிறிஸ்தவத்தை
மட்டும்தான் நம்புவேன், பைபிளை தவிர எந்த வேதத்தையும் நம்பமாட்டேன், எந்த மதத்தையும்
நம்பமாட்டேன். எந்த விஷயத்தையும் அவ்வளவு சீக்கிரமா ஏத்துக்கமாட்டேன். ஒரு விஷயத்தை
பொய் என்று நம்பிட்டேன்னா அத யாரு சொன்னாலும் நம்பமாட்டேன்.” என்று
சொன்ன லித்வின் இடையில் “நான்
ரொம்ப Stubborn ஆன பொண்ணு” என்று சொல்லுவதை அவதானிக்கவேண்டும்.
“நான் கிறிஸ்தவத்தை
மட்டும்தான் நம்புவேன், பைபிளை தவிர எந்த வேதத்தையும் நம்பமாட்டேன், எந்த மதத்தையும்
நம்பமாட்டேன்.// இஸ்லாத்திலிருந்து மதம்மாறிய
சகோதரியாக இந்த ஆயிஷா இருந்திருந்தால் அவள் கூற்று “நான் இஸ்லாத்தை மட்டும்தான் நம்புவேன், குர்ஆனை தவிர எந்த வேதத்தையும்
நம்பமாட்டேன், எந்த மதத்தையும் நம்பமாட்டேன்” என்றுதான் இருந்திருக்கும். மத வைராக்கிய குடும்பத்தில் பிறந்து
அதே மத வைராக்கியத்தில் வளர்ந்த குழந்தைகளின் பொதுவான கூற்றே இது. ஆச்சரியமாக நோக்குவதற்கு
இதில் ஒன்றும் இல்லை.
//எந்த விஷயத்தையும் அவ்வளவு சீக்கிரமா ஏத்துக்கமாட்டேன்//
இந்த கூற்று கொஞ்சம் சிந்திக்கவேண்டியது. லித்வின் சென்னையிலிருந்து 2014 ஒக்டோபர்
மாதம் கோயம்புத்தூர் வருகிறாள். லித்வின் காயல்பட்டிண மதமாற்று மேடையில் சொல்வது உண்மையானால்
அவள் அக்டோபர் நவம்பர் அளவில்தான் அவளுக்கு அவள் தகப்பனார் கடைவைத்து கொடுத்திருக்கவேண்டும்.
2015 ஜனவரி மாதம் லித்வின் இஸ்லாத்துக்கு மதம்மாறுகிறாள். அவளுடைய அனைத்து ஆராய்ச்சிகளும்
வெறும் இரண்டு மூன்று மாதத்துக்குள் நடந்துள்ளது. அகவே அவள் அவ்வளவு சீக்கிரமாக ஏத்துக்கமாட்டேன்
என்கிறது பொய்யாகிவிட்டது. அவள் அவசரத்தில் எடுத்த தீர்மானம் என்பதை அவளின் கூற்று
உறுதியாக்குகிறது.
//சர்ச் வேலைகளில் ஆர்வத்துடன் ஈடுபடும் நான் உலக காரியங்களிலும் ஈடுபடுவது
பிடிக்கும். எனது நண்பர்களுடன் எல்லா இடங்களுக்கும் போவேன்// இயேசு கொடுத்த சுயாதீனத்தை இவள் சுயநலமாக பாவித்திருக்கிறாள்
என்பதை காட்டுகிறது. இரட்சிப்பின் அனுபவம் உள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளும் அந்த அனுபவத்தை
பெறவேண்டும் என்பதை அவசியமாக நினைப்பதில்லை. இறைவேதமாம் பைபிளிலுள்ள ஆசீர்வாத வசனங்களை
மட்டுமே மனனமிட கற்றுக்கொடுக்கும் ஓய்வுநாள் பாடசாலை ஆசிரியர்கள் வார்த்தையிலுள்ள ஆழமான
சத்தியங்களை கற்றுக்கொடுப்பதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக கிறிஸ்தவம் என்பது ஒரு அனுபவம்!
இறைவனுடனான உறவு என்பதை மறந்து, அதனை ஒரு மதமாக போதிக்கும் போதகர்களையும் இந்த இடத்தில்
நினைவுகூற விரும்புகிறேன்.
இஸ்லாத்தில்
மதத்தையும் தொழிலையும் வெவ்வேறாக பிரித்து வைத்திருக்கிறார்கள் (எழுதப்படாமல் உள்ளங்களில்
வைத்துள்ள ஒரு கட்டளை) அதனால் தொழுகையை முடித்த அடுத்த நிமிடமே பொய் சொல்லி வியாபாரம்
செய்வார்கள், தூசனம் பேசுவார்கள், ஏன் கொலையும் செய்வார்கள்!! ஆனால் கிறிஸ்தவம் அப்படியல்ல.
அது ஒரு உறவு. நான்கு விதமான உறவுகளில் ஒன்று பிழைத்தாலும் அவன் வாழ்வு சீரற்றதாகிவிடும்.
1. மனிதனுக்கும் இறைவனுக்கும்
உள்ள உறவு
2. மனிதனுக்கும் அடுத்த
மனிதனுக்கும் உள்ள உறவு
3. மனிதனுக்கும் சூழலுக்கும்
உள்ள உறவு
4. மனிதனுக்கும் அவனுக்கும்
உள்ள உறவு (தனக்கு தன்னில் உள்ள உறவு)
கணவன்
மனைவியின் உறவில் விரிசல் ஏற்பட்டால் இறைவனுடனான உறவிலும் விரிசல் ஏற்பட்டுவிடும் என்பதே
வேதாகம கூற்று!. இறைவனுடன் உறவே வைக்க முடியாது என்ற நிலைப்பாட்டிலுள்ள இஸ்லாமியருக்கு
இது புரியாது என்பது எனக்குத் தெரியும். ஆனால் இறைவனோடான உறவை அனுபவித்தவளாக லித்வின்
இருந்தால், அவளுக்கு இது புரியும்.
//என்ன பாவம் செய்தாலும் பரவாயில்ல் இயேசுவிடம் வந்து மன்னிப்பு கேட்டால்
அவர் மன்னித்துவிடுவார் என்று நம்பிகொண்டிருந்தேன்// இது அவளுக்கு இறைவனுடனான உறவு இருக்கவில்லை என்பதை காட்டுகிறது.
இப்படிப்பட்ட கிறிஸ்தவர்களைதான் மறுமையில் “ உங்களை எனக்குத் தெரியாது” என்று கர்த்தராகிய
இயேசு கிறிஸ்து சொல்வார் என்று இறைவேதத்தில் பார்க்கிறோம். இன்று தமிழ்நாட்டில் லவ்
ஜிஹாத் மூலமாக அநேக வாலிப யுவதிகள் இஸ்லாமிய நரகத்துக்குள் விழுவதை நாம் அறிந்திருக்கிறோம்.
ஒரு கிறிஸ்தவ பெண்ணை இஸ்லாமிய காதல் தாயி (மதமாற்றுபவன்) காதலித்து திருமணம் என்ற அடுத்த
கட்டத்துக்கு வரும்போது “டார்லிங் உன்னை திருமணம் செய்ய நமக்கு மதம் ஒரு தடையாகவுள்ளது.
நீ எனது மதத்தை படி நான் உன் மதத்தை படிக்கிறேன்”
என்பான். அவன் மீதுள்ள காதலினால் அவன் மனதை புண்படுத்த கூடாது என்பதற்காக தனக்கு
மிகவும் வெறுப்பான இஸ்லாத்தை படிப்பதற்கு வீட்டுக்குத்தெரியாமல் மதமாற்று மையத்துக்குச்
செல்வாள் அந்த கிறிஸ்தவ பெண். அவனுக்காக தன் உறவுகளை துச்சமாக மதிக்கிறாள். தன் வேலையைகூட
விட்டுவிடுகிறாள். இப்படி பல நஷ்டங்களை அடைகிறாள் அவன் காதலுக்காக. அதற்கு முன்பு இறைவனோடு
மட்டும் அவளுக்கு சரியான உறவு இருந்திருந்தால் இறைவனை நெருங்க முடியாத பாவத்தை திரும்ப
திரும்ப செய்வாளா?
இறைவன்
பாவத்தை வெறுக்கும் அதே நேரம் பாவியை நேசிக்கிறார். ரோமர் 12ம் அதிகாரத்தின் முதல்
இரண்டு வசனங்களையாவது நம் சகோதரி லித்வின் வாசித்திருந்தால் இப்படி அறியாமையான ஒரு
பதிலை இவ்வளவு பகிரங்கமாக சொல்லியிருப்பாளா? (லித்வின் அவள் லவ்ஜிஹாத் மூலம் இஸ்லாத்துக்கு
மதம்மாறவில்லை என்பதை உறுதியாக கூறுகிறாள். இறைவனோடு உறவின் முக்கியத்துவத்தை புரியவைக்க
பொதுவாக நடக்கும் லவ் ஜிஹாதை பற்றி எழுதினேன்.)
இப்பொழுது
லித்வினின் கடைக்கு முன்னால் இருந்த பள்ளிவாசலுக்கு போவோம்….
//பள்ளிவாசலில் பைபிளை பற்றி பேசுகிறார்கள் ஆனால் இயேசுவை கடவுள் என்று
ஏற்கிறார்கள் இல்லை.// இது மிக மிக உண்மையான
கதை. இஸ்லாத்தை நியாயப்படுத்த எப்பொழுதும் பைபிளையும் கிறிஸ்தவத்தையும் விமர்சிப்பதுதான்
இஸ்லாத்தின் பண்பாக இருந்து வருகிறது. தமிழ் குர்ஆனை எடுத்து பாருங்கள். போதனைகளை விடவும்
யூதர்களை சபிக்கும் வசனங்களும் கிறிஸ்தவர்களை திட்டும் வசனங்களுமே அதிகம் இருக்கின்றது.
வேதாகமம் கூறும் சரித்திரங்கள் அங்கும் இங்கும் சிதறி ஒன்றுக்கொன்று தொடர்ப்பில்லாமல்
இருப்பதை காணலாம். ஆகவே பைபிளை பற்றி பள்ளிவாசலில் பேசப்படுவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல.
ஆனால்
கிறிஸ்தவ சபைகளில் (விழிப்புணர்வு கூட்டங்களில் தவிர) இஸ்லாத்தை பற்றியோ குர்ஆன் வசனங்களோ
ஒருபோதும் பேசப்படுவதில்லை என்பதை மதமாற்று மையங்களில் சிறையிருக்கும் கிறிஸ்தவ பெண்பிள்ளைகள்
சிந்தித்தார்கள் என்றால் எப்படியாவது அங்கிருந்து விடுதலையடைந்துவிடுவார்கள்.
//இஸ்லாத்தை நன்றாக படித்து அதன் குறைகளை சொல்லி இஸ்லாமியரை கிறிஸ்டியனாக்கிவிடவேண்டும்// இன்று அநேக கிறிஸ்தவர்கள் என்னிடம் வந்து, நாங்கள் இஸ்லாமியருக்கு
சுவிசேஷம் அறிவிக்கவேண்டும். அதற்காக குர்ஆனை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறோம் உங்களால்
உதவமுடியுமா” என்று கேட்பார்கள். நான் அவர்களிடம் ஒரு கேள்வியை கேட்பேன். “நீங்கள்
முழு பைபிளையும் ஒரு முறையாவது வாசித்துவிட்டீர்களா?” அநேகருடைய பதில் “இல்லை” என்பதே.
முதலில் ழுழு பைபிளையும் வாசித்து அதில் என்ன சொல்லியிருக்கிறதோ அதன் படி வாழுங்கள்.
அப்பொழுது நீங்கள் இஸ்லாமியருக்கு ஒளியாய் இருப்பீர்கள். இறை ஒளி உங்களுக்கூடாக பிரகாசிக்கும்.”
பைபிளை
ஒழுங்காக படிக்காமல் இஸ்லாத்தை ஆராயப்போனால் இப்படிதான் சாத்தான் வழி கெடுப்பான் என்பதற்கு
இந்த ஆயிஷா என்கிற லித்வின் ஒரு நல்ல உதாரணம்.
தன்னை
தானே பிடிவாதக்காரி என்று சொல்வதிலிருந்து அவள் எப்படி தீர்மானங்களை எடுப்பாள் என்பதை
இணையத்தளத்தில் தேடி பிடிவாத குணத்தின் தீமைகளை அவள் கற்று அறிந்து தன்னை திருத்திக்கொண்டிருந்தால்
இந்த நரகில் விழுந்திருக்கமாட்டாள் என்பதை புரிந்துகொள்ளலாம்.
(கட்டுரை
நீண்டுவி்ட்டதால் லித்வின் இஸ்லாத்தை தேட அவளை தூண்டிய குர்ஆன் வசனத்திலிருந்து தொடர்வோம்.)
Comments
Post a Comment