அல்லாஹ் என்று அழைக்கக் கூடாதா?

இஸ்லாமிய மரபு மொழிபெயர்ப்புகள்

இஸ்லாமும் கிறிஸ்தவம் போன்றே ஒரு உலக மதமாகும். அனைவரையும் முஸ்லீம்களாக மாற்றுவதே அதன் குறிக்கோளாகும்.

ஏழாம் நூற்றாண்டின் அரபு கலாச்சாரத்தின் அணுகுமுறையை இன்றும் தவிர்க்கமுடியாமல் இருக்கிறது. உலகெங்கும் உள்ள முஸ்லீம்கள் அரபுமொழியில் பிரார்த்திக்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வேத நூல் அரபியில் மட்டுமே இருக்கிறது.

கிறிஸ்தவம் சுதேச மக்கள் கலாச்சாரத்துக்கும் அவர்கள் மொழிக்கும் மொழியாக்கம் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கிறது. நித்திய இறைவனையும் அவர் படைப்புகள் பற்றிய செய்திகளையும் யூத கலாச்சரத்திலிருந்து தத்தெடுத்து, அவர்கள் சொந்த மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படுகிறது.

சுதேச கலாச்சாரத்துக்கு சுவிசேஷத்தை மொழியாக்கம் செய்து கொடுப்பதில் கிறிஸ்தவம் முன்னிலையில் உள்ளது. உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவ சமுதாயத்தினர் அவர்களது சொந்த மொழிகளிலேயே இறைவனை வணங்குகிறார்கள். ஒரே இறைவனை ஆயிரக்கணக்கான பெயர்களில் அழைக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் அனைவரும் ஒரே கர்த்தர், ஒரே விசுவாசம், ஒரே ஞானஸ்நானம் (எபேசியர் 4:5) என்ற போதனையையே போதிக்கிறார்கள்.
சுவிசேஷம் உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகிறது. கிறிஸ்தவர்கள் தங்கள் எழுத்துக்களில் இறைவன் என்ற சொல்லுக்குப் பதிலாக அல்லாஹ் என்ற சொல்லை பாவிப்பது குறித்த பல கருத்துக்கள் உள்ளது.

சிலர் சொல்கிறார்கள் அல்லாஹ் என்பது வேறு ஒரு கடவுள். பாபிலோனிய சந்திர கடவுளின் பெயர்தான் அல்லாஹ்.

வேறு சிலர் அல்லாஹ் என்ற சொல் செமட்ரிக் மொழியின் எலோஹிம் என்ற சொல்லிலிருந்து வந்தது. எபிரேய பைபிளில் இந்த சொல்தான் கடவுளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று வாதாடுகிறார்கள்.
முஸ்லீம்கள் சந்திரக் கடவுளை வணங்கவில்லை என்பதை கிறிஸ்தவர்கள் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்

முஹம்மது நபி பிறப்பதற்கு முன்பிருந்தே அரபு கிறிஸ்தவர்கள் கடவுளுக்கு அல்லாஹ் என்ற வார்த்தையைதான் பாவித்து வந்தார்கள். அதேபோன்று மேற்கு ஆபிரிக்காவின் ஹவ்சா மக்கள் குழுவும் (35 மில்லியன்) இந்தோனேசியாவின் இந்தோனேசியர்களும் (250 மில்லியன்)
பைபிளின் கடவுளை அல்லாஹ் என்ற வார்த்தையை கொண்டே அழைக்கிறார்கள்.

எந்த சொல்லை உச்சரிக்கிறோம் என்பதைவிட என்ன அர்த்ததில் உச்சரிக்கிறோம் என்பதே முக்கியமானது. கிறிஸ்துவுக்கான ஒவ்வொரு முஸ்லீம் இயக்கமும் அவர்கள் சொந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பைபிளையே பயன்படுத்த விரும்புகிறார்கள். இதனை இஸ்லாமிய மரபு மொழிபெயர்ப்பு என்று அழைக்கின்றனர். சுதேச மொழிகளுக்கும் கலாச்சாரங்களுக்கும் மொழியாக்கம் செய்ய முடியுமாக இருப்பது கிறிஸ்தவ விசுவாசத்தின் சிறப்பாகும்.

தேவன் ஒவ்வொரு மக்கள் குழுவுக்கும் அவர்கள் சொந்த மொழி, கலாச்சாரத்தில் தன்னை வெளிப்படுத்துவதையிட்டு நாம் கர்த்தருக்குள் களிகூறுவோம். மோழியாக்கம் செய்யப்படும் ஒவ்வொரு வார்த்தையிலும் பைபிளில் அர்த்தம் உள்ளது.

ஜெபம் செய்வோம்

  • தொடர்ந்தும் முஸ்லீம்களின் சொந்த மொழிகளில் வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டு, சுவிசேஷத்தை அவர்கள் சொந்த மொழிகளில் புரிந்துகொள்ளவேண்டும் என்று ஜெபிப்போம்.
  • கிறிஸ்தவர்கள் முஸ்லீம் உலகுக்கு தாக்கமுள்ள விதத்தில் சுவிசேஷத்தை பகிர்ந்துகொள்ள வேண்டும் என ஜெபிப்போம்.
  • அரபிகள் அல்லாத முஸ்லீம்கள் தங்கள் சொந்த மொழியில் சொந்த கலாச்சாரத்தில் சிருஷ்டிப்பின் கர்த்தரை தொழுதுகொள்ள முடியும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும் என்று ஜெபிப்போம்.

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?