லைலதுல் கத்ர் - வல்லமையின் இரவு


கனவுகளை புரியவைப்பவர்கள்

ரமளான் மாதத்தின் 27வது இரவு லைலதுல் கத்ருடைய இரவு என்று அழைக்கப்படுகிறது. இதற்குசங்கைமிகு இரவுஎன்றும்வல்லமையின் இரவுஎன்றும்இறை செய்திகொடுக்கப்பட்ட இரவுஎன்றும் சொல்வார்கள்.

லைலதுல் கத்ர் என்பது ஜிப்ரீல் என்ற தூதன் முஹம்மது நபிக்கு முதன் முறையாக குர்ஆனை வெளிப்படுத்திய இரவாகும். முஸ்லீம்கள் இதனை சரித்திரத்தில் மிகவும் முக்கிய நிகழ்வாக கருதுகிறார்கள்.

இந்த இரவு முழுவதும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுகிறார்கள். இந்த இரவு ஆயிரம் மாதங்களுக்கு சமனானது என்று குர்ஆன்சொல்கிறது. பலர் இந்த இரவில் இறைவனை கனவில் காண ஆசைப்படுகின்றனர்.

 கேத் நீண்ட காலமாக முஸ்லீம் உலகில் ஊழியம் செய்து கொண்டிருக்கிறாள், கனவுகளுக்கூடாக கிறிஸ்துவை பின்பற்றும் அநேக சாட்சிகள்அவளிடம் உள்ளது.
அவற்றில் ஒன்று அஹமத் எனும் பாகிஸ்தானின் வாடகை வண்டி ஓட்டுபவரின்  சாட்சியாகும்.

 நீ கண்ட கனவு என்ன?” என்று கேத் அஹமதிடம் கேட்டாள்

நான் இந்த கனவை பல முறை கண்டேன்.
சூரியனைப் போன்று பிரகாசிக்கிற ஒரு மனிதனைக் கண்டேன். அவர் யார் என்று அடையாளம் காணமுடியவில்லை. ஆனாலும் அவர் அன்பு என்னை தொட்டது.” என்றுகண்களை பிதுக்கியவனாக பதில் கொடுத்தான்.

கேத் ஒரு உருது மொழி புதிய ஏற்பாட்டை எடுத்து, மத்தேயே 17ம் அதிகாரம் முதல் இரண்டு வசனங்களையும் காட்டி இதை வாசி ஒருஆச்சரியத்தை காண்பாய் என்றாள். அஹமத் அந்தவசனங்களை வாசிக்கத் தொடங்கினான். ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும்  அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று.” 
(மத்தேயு17:1-2)

அஹமத் ஆச்சரியமடைந்தவனாக யார் இந்தநபர்? இவரைத்தான் நான் கனவில் கண்டேன் என்றுகேத்திடம் சொன்னான். கேத் பரிசுத்த ஆவியானவர் முஸ்லீம்களுக்கு அசாதாரணமான வித்தில் சத்தியத்தை வெளிப்படுத்துகிறார் என்பதை புரிந்துகொண்டார். பரிசுத்த ஆவி வரும்போது அவர் பாவத்தைகுறித்தும் நியாத்தீர்ப்பை குறித்தும் எச்சரிப்பார்என்பது அவர் ஞாபகத்துக்கு வந்தது. முஸ்லீம்கள் உலகத்தின் ஒரு பகுதியினர். கனவுகளுக்கூடாக இயேசு அவர்கள் தேவைகளை சந்திக்கிறார்என்று கேத் சொன்னார்.

நாங்கள் ஜெபிப்போம்


  • இந்த வல்லமையின் இரவில்பலவழிகளில் தேவன் தன்தை முஸ்லீம்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று ஜெபிப்போம்.
  • கனவுகளுக்கூடாக இயேசுவை காண்கிற முஸ்லீம்களுக்க அவரைப்பற்றி அதிகம் கற்றுக்கொள்ள சந்தர்ப்பம் உருவாகவேண்டும் என்று ஜெபிப்போம்.
  • கனவுகளுக்கு விளக்கம் கொடுக்கும் விசுவாசிகளுக்காக ஜெபிப்போம் -முஸ்லீம்கள் கண்ட கனவின் சரியான அர்த்தத்தை புரியவைத்து, கிறிஸ்துவில் வளர உதவவேண்டும்  என்று மன்றாடுவோம்.

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?