அகதிகள் இயேசுவின் தூதுவர்கள்

யீடா முகாம்

வேதாகம காலத்திலிருந்து இன்றுவரை மக்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு> பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று கூடாரங்களில் வசிப்பதை நாம் காண்கிறோம். பல்லாயிரக்கணக்கான அகதிகள் தென் சூடானின் உலகின் இளமையான மாநிலத்தை பாதுகாப்பின் வீடாக கண்டுபிடித்துள்ளனர்.

டகிக்> அஷ்ரோன்> லீரா> மோரோ> தபன்யா என்பவர்கள் சூடானின் நுபா மலைப் பிரதேசத்திலிருந்து தப்பிவந்த சில மக்கள் குழுக்களாகும்.

சமீப காலமாக உள்நாட்டு யுத்தத்தால் நடக்கும் குண்டுவெடிப்புகள் அவர்களுடைய வீடுகளையும்> குடும்பங்களையும்> கைத்தொழில்களையும் இழக்கச் செய்துள்ளது.

இப்பொழுது இவர்கள் வாழ்கின்ற முகாம்களுல் தென் சூடானிலுள்ள யீதா அகதி முகாமும் ஒன்றாகும். அங்கு பல நிவாரண பணி ஸ்தாபனங்களின் ஆதரவு கிடைக்கிறது.
இந்த அகதிகளில் சிலர் இயேசுவை பின்பற்றுகின்றனர். அவர்கள் அந்த முகாமுக்குள் ஒரு சிறு ஐக்கியத்தை உருவாக்கி> மற்றவர்களுக்கு சுவிசேஷம் அறிவித்து வருகின்றனர்.

உள்நாட்டுச் சபைகளின் இலட்சியம் எப்படியாவது
அந்த முகாமிலுள்ள 70 க்கும் மேற்பட்ட மக்கள் குழுக்களோடு தொடர்ப்பை ஏற்படுத்துவதாகும். அந்த அகதிகளில் பெரும்பான்மையானவர்கள் பேசும் மொழி எழுத்துவடிவில் இல்லை என்பது அந்த சபைகள் சந்திக்கும் மிகப்பெரிய சவாலாகும்.

ஒரு சில அகதிகளுக்கு எழுத வாசிக்கத் தெரியும். இன்னும் அவர்களுக்கு அவர்கள் மொழிகளில் வேதாகமம் மொழிபெயர்க்கப்படவில்லை. இயேசு மக்களுக்கு உவமைகளுக்கூடாகவும் கதைகளுக்கூடாகவும் பேசினார். அதனை மாதிரியாக் கொண்டு இந்த முஸ்லீம்களுக்கும் வேதாகமத்தை கதையாகயும் கேள்வி பதில் மூலமும் கற்பிக்க அங்குள்ள விசுவாசிகள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். அங்கு கடவுள் கிரியை செய்கிறார்;!

முதல்முறையாக சுவிசே ஷத்தை கேட்கும் முஸ்லீம்கள் கிறிஸ்துவை பின்பற்றுகிறார்கள். இந்த முறையில் தற்காலிகமாக யீடா முகாமில் வசிப்பவர்களுக்கு சுவிசேஷம் அறிவிப்பதானது ஒரு தனித்துவமான சந்தர்ப்பமாகும். இந்த இளம் விசுவாசிகள் மீண்டும் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பினால்> நிச்சயமாக மற்ற மக்களுக்கு சுவிசேஷம் அறிவிப்பார்கள்.


நாங்கள் ஜெபிப்போம்

  • யீடா முகாமிலிருக்கும்; இந்த புதிய விசுவாசிகள் அன்பிலும் ஐக்கியத்திலும் ஒற்றுமையிலும் வளரவேண்டும் என்று ஜெபிப்போம்.
  • இந்த முகாமில் பாதுகாப்பாகவும் உக்கிரானத்துவத்துடனும் இருக்க ஜெபிப்போம்.
  • இந்த பிரதேசத்தில் சமாதானம் ஏற்பட்டு> இந்த அகதிகள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பி> தங்கள் சொந்த மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கவேண்டும் என்று ஜெபிப்போம்.

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?