என் அழு குரலைக் கேட்க யாராவது இருக்கிறார்களா?
சமீராவின் வீட்டில் அவளின் தாய் கடும் வியாதியால் பாதிக்கப்பட்டு
பௌவீனமடைந்தாள். இதனால் சமீராவின் வீட்டிலுள்ள அனைவரும் துயரத்தில் வாடிக்கொண்டிருந்தனர்.
மூடுபனி அக்குடும்பத்தை சூழ்ந்துக் கொண்டது. சமீராவின் கேள்விக்கு யாரும் பதில் சொல்ல
வில்லை. அவளின் தாயின் வியாகுல நிலையையும் அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.
சமீராவின் தாயாரின் மரணத்தின் பின் எல்லோரும் அமைதியாக துக்கம்
கொண்டாடினார்கள். தன் தாய்க்கு என்ன நடந்தது என்ற உண்மையை அவளால் புரிந்துகொள்ள முடியாதிருந்தது.
யாரும் அது குறித்து அவளுடன் பெசவேயில்லை. “என் அழு குரலைக் கேட்க யாராவது இருக்கிறார்களா?” என்று தனக்குள் வேதனைப்பட்டுக்கொண்டிருந்தாள்
சமீரா.
இப்படிப் பட்ட அநேக வேதனையான சம்பவங்கள் சவுதி அரேபியாவில் நாளார்ந்தம்
நடக்கின்றது. இஸ்லாமியரைப் பொருத்தமட்டில் இறைவன் அதிக தூரத்தில் இருப்பதால் தனிப்பட்ட
முறையில் தன் மீது எவ்வாறு கரிசனைக் கொள்வார் என்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.
ஈஸா அல் மஸீஹ்வை ஈஸா நபியாகவே இவர்கள் கருதுவதால் அவளை தன்னுடைய இரட்சகராகவும் நண்பராகவும்
அறிந்து கொண்டவர்கள் சவுதி அரேபியாவில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே!
துஆ
·
சவுதியில் தனிமையில் துயரப்படுகிற
ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஈஸா அல் மஸீஹ்வை கண்டுகொள்ள வேண்டும் என்று துஆ
செய்வோம்.
·
ஈஸா அல் மஸீஹ்வை ஈமான்
கொண்ட சவுதி மக்களுக்காக துஆ செய்வோம். அவர்கள் பெற்றுக்கொண்ட இறை பிரசன்னத்தில் அவர்கள்
குடும்பத்தார்களையும் வழிநடத்த வேண்டும் என்று துஆ செய்வோம்.
·
சவுதி அரேபிய மக்களுக்கு
சத்தியத்தை அறிவிக்க இறைவனால் தெரிவு செய்யப்பட்ட இறை மனிதர்களுக்காகவும் அவர்கள் குடும்பங்களின்
பாதுகாப்புக்காகவும் துஆ செய்வோம்.
Comments
Post a Comment