முஸ்லீம் முதியோருக்காக துஆ செய்வோம்.


பொதுவாக இஸ்லாமிய கலாச்சாரத்தில் தீர்மானங்களை எடுப்பவர்கள் கோத்திர தலைவர்களாக இருந்துள்ளதை சரித்திர ரீதியாக பார்க்க முடிகிறது. கோத்திர தலைவன் இஸ்லாத்தை தழுவும்போது முழு கோத்திரமும் இஸ்லாத்தை தழுவிவிடுவார்கள்.

அதேபோல் கோத்திர முறைமை மறைந்து வரும் இந்த காலத்தில் குடும்பத்தில் முக்கிய தீர்மானங்களை எடுப்பவர்கள் முதியவர்களாக இருப்பதை அவதானிக்க முடிகிறது.

எனது தாயாரின் குடும்பத்தில் ஒன்பது சகோதர சகோதரிகள். அவர்களின் 24 பிள்ளைகளின் பிள்ளைகள் என்று குடும்பம் பெருகிக்கொண்டே போகிறது. எங்கள் மூத்தம்மாவின் கணவர் தான் இப்போதைக்கு குடும்பத்தில் பெரியவர். அவர் சொல்தான் எமது குடும்பத்தின் மந்திர சொல்லாக இருக்கிறது. அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை எவ்வளவு மோசமானது என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் அவருடைய வார்த்தையை விரும்பாவிட்டாலும் யாரும் அவருக்கு முன்னால் எதிர்த்து பேசமாட்டார்கள்.

துஆ

·         இஸ்லாமிய குடும்ப தலைவர்கள் சத்தியத்தை அறிய வாய்ப்புகள் கிடைக்கவேண்டும் என்று துஆச் செய்வோம்.

·         ஈஸா அல் மஸீஹ்வை ஈமான்கொண்டுள்ள முதியோர்கள் தங்களின் சாட்சியை தங்கள் குடும்பத்தாருடன் பகிர்ந்துகொள்ள பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெறவேண்டும் என்று துஆ செய்வோம்.



·         கிறிஸ்த முதியோர் தைரியமாக இஸ்லாமிய முதியோருக்கு சத்தியத்தை அறிவிக்க வேண்டும் என்று துஆ செய்வோம். 

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?