“லைலதுல் கத்ர்”

வல்லமையான இரவு “லைலதுல் கத்ர்

இதற்காக ஏற்கனவே துஆ செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளோம். ஆம் நாம் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் இதை முக்கியப்படுத்துகிறோம். இது மிகவும் முக்கியமானது, மாற்றங்கொடுக்ககூடியது. ஆதலால் இந்த வல்லமையின் இரவுக்காக நாம் கரம் கோர்த்து மீண்டும் துஆ செய்யவேண்டும்.

அனேக இஸ்லாமியர்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமைப் பெற இந்நேரத்திற்காக தாங்கள் திறந்த மனதுடன் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சிலர் மலக்குகளால் விசேஷித்த வேண்டுதல்கள் அருளப்படுகிறது என்று எதிர்பார்க்கின்றனர். மற்றவர்கள் மலக்குகளிடமிருந்து புதிய வருடத்திற்கான அறிவிப்பை எதிர்ப்பார்க்கின்றனர். (இந்த வல்லமையின் இரவே, “அதிகாரப்பூர்வமான கட்டளைபெறும் இரவாக கருதப்படுகிறது) இஸ்லாமிய பெண்கள், இந்த இரவு தொழுகைக்குப்பிறகு குழந்தை பாக்கியத்தை பெறுவர் என நம்புகிறார்கள். ஆண்கள், சுகமும் ஆன்மீகபெலமும் உண்டாகும் என நம்புகிறார்கள். முக்கியமாக அனேக இஸ்லாமியர்கள் இறைவனிடமிருந்து ஒரு தனிப்பட்ட தொடுதலைப்பெற வாஞ்சித்து உண்மையாய் தேடுகிறார்கள்.

இந்த வல்லமையின் இரவின்போது அனேக இஸ்லாமியர்கள் வல்லமையான மஸீஹ் ஆகிய ஈஸாவை கண்டு கொண்டதாக உண்மை சாட்சிகளை நாம் அனேக ஆண்டுகளாக கேட்டுக்கொண்டு வருகிறோம். சிலர் சொப்பனங்களையும் தரிசனங்களையும் பெறுகின்றார்கள். ஆனாலும் அனேகர் முதன்முறையாக தங்கள் நண்பர்கள் மூலமாக () கிறிஸ்தவ நிகழ்ச்சிகள் மூலமாக நற்செய்தியை கேட்கும் வாய்ப்பை பெறுகிறார்கள்.

ஆன்மீக  நிறைவையும்இறைவனோடு  ஒருமனதையும்  தேடும் இஸ்லாமியர்களின் இரட்சிப்பிற்காக நாம் ஒருமித்து ஈமானோடு துஆ சேய்வோம்.


•          இறைவா,  உண்மையாகவே உம்முடைய உதவியை தேடுவோருக்காக  துஆ செய்கிறோம். ஈஸா அல் மஸீஹ் மூலம் அவர்களுடைய தேவைகளை சந்திப்பீராக.                                    (சங் 34:18, சகரியா 9:9)

•          இறைவா, இஸ்லாமியர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்க, அவர்கள் மத்தியில் பணிபுரிகிறவர்களுக்கு விசேஷித்த தருணங்களை உருவாக்கி கொடுப்பீராக.  

•          யா ரப்பீ,  இரட்சிக்கக் கூடாதபடிக்கு உம்முடைய கரம் குறுகிபோகவுமில்லை, கேட்கக்கூடாதபடிக்கு செவி மந்தமாகவுமில்லை. அவர்கள் பாவத்தை வெளிப்படுத்தி, உம்முடைய இரட்சிப்பை காணும்படியாக உம் கரத்தை வெளிப்படுத்துவாயாக. (ஏசா 59: 1, 52:10)


•          இறைவா இஸ்லாமியரை ஏமாற்றத்துக்குள் வழி நடாத்தும் அந்தகாரத்தின் சக்திகளுக்கு விரோதமாக  உம்மிடம் மன்றாடுகிறோம்.  (எபே 6:12, சங் 44:4-7)

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?