சொனிகே முஸ்லீம்கள்
சொனிகே முஸ்லீம்கள்
இந்த சோனிக்கே மக்கள் ஆப்பிரிக்காவின் தென்பகுதியில் உள்ள சகாரா பாலைவனப் பகுதியில் மேற்கு பகுதியான சாஹேலில் வசிக்கின்றனர். அங்கு சாதாரணமாக பகல்நேர வெப்பநிலை 45 பாகை செல்சியஸாக இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அவர்கள் பயிரிடும் தொழிலும், கால்நடை பராமரிப்பிலும்
ஈடுபடுகின்றனர்.
இவர்கள் பொதுவாகவே கூட்டுக் குடும்பமாக சேர்ந்து மண் (அ) சிமெண்ட் கற்கள்கொண்ட வீடுகளில் வசிக்கின்றனர். ஆண்களில் அநேகர் தங்கள் குடும்பங்களை விட்டு வேலைத் தேடி நகரங்களுக்கும், பட்டணங்களக்கும் பல சமயம் வெளிநாடுகளுக்கும் செல்கின்றனர். இதனால் நியூயார்க், பாரிஸ் போன்ற நகரங்களில் மிக அதிகளவில் இம்மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் தங்கள் மேற்கு ஆப்பிரிக்க மக்கள் இனத்துடன் நெருக்கமான தொடர்புகொண்டும், சம்பாத்தியத்தில் பெரும் பகுதியை தங்கள் குடும்பத்திற்கு அனுப்பியும் தாங்குகின்றனர்.
இந்த சோனிக்கே மக்கள் இஸ்லாமியராக இருப்பதினால் தங்களை அடிப்படைவாதிகளாக அடையாளங்காட்டிக் கொண்டு பெருமிதம் கொள்கின்றனர். ஒரு
நாளைக்கு 5 முறை தொழுகின்ற இஸ்லாமியர் இவர்கள். வெட்கமும், சமுதாய தாக்கமும் சோனிக்கே கலாச்சாரத்தில் பெரும்பாலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
பணிகள்
அனேக நாடுகளிலிருந்து பல்வேறு ஸ்தாபனங்கள் இந்த சோனிக்கே மக்களை சந்திக்கின்றார்கள். மொத்த ஜனத்தொகையாகிய 20 இலட்சத்தில் ஏறத்தாழ 100 சத்தியத்தில் வாழ்கிறவர்கள். அவர்கள் பலவிதமான உபத்திரவங்களை
சந்தித்து வருகிறார்கள். ஒதுக்கப்படுகிறார்கள், ஒருவரையொருவர் சந்திக்கவும், சேர்ந்து ஆராதிக்கவும் மிகக்குறைந்த வாய்ப்பே இவர்களுக்கு இருக்கிறது.
சோனிக்கே மொழியில் இறைவேத மொழிபெயர்ப்பு பணி நடந்துக் கொண்டிருக்கிறது, மொழி பெயர்ப்பாளர்களும் சிதறடிக்கப்பட்டு கணினி
மூலமே தொடர்பு கொள்கின்றனர். கடினமாக
வேலை செய்யும் இவர்கள்மீது அதிக பளு ஏற்றாதபடிக்கு, இவர்களுக்கு நல்ல இணையதள இணைப்பு தேவைப்படுகிறது.
இறைவேதம் உட்பட சத்தியத்தை போதிக்கும் ஒலி ஒளி வடிவங்கள் சொனிக்கே
மொழியிலே உள்ளது. சொனிகே மக்களிடையே சிறந்த முறையிலே தொடர்ப்புகொள்ள ஊடக அபிவிருத்தி
மற்றும் விருத்தியடைந்த தொழில்நுட்ப முறை அவசியமாயுள்ளது. உதாரணமாக ஒலி நுணுக்ககளை
SD memory கார்ட்டிலே
போட்டு கையடக்க தொலைபேசிகளிலே போடுவது இது சொனினக்கே மக்கள் அவர்களுக்கு அவசியமான வேளையிலே
வார்த்தையை வாசிப்பதற்கு கூடிய ஒரு தகுதியான சந்தர்ப்பத்தை பெற்று கொடுக்கிறது.
துஆ செய்வோம்
• கிறிஸ்தவா;களிடமுள்ள வேதாகமும் புத்தகங்களும் அவர்கள் கரங்களில் சென்றடைய அதிக வாய்ப்புண்டாக துஆ செய்வோம். (ஏசா 52:7)
• வேதாகம மொழி பெயர்ப்பாளர்களுக்கு இறைவன்
விசேஷித்த ஞானத்தை கொடுக்கும்படி துஆ
செய்வோம்.
• சோனிக்கே மக்களுக்கு தேவவார்த்தையின் மீது உண்மையான தாகம் உண்டாகவும், அந்த தாகம் தீர்க்கும்படியாகவும் துஆ செய்வோம். (மத் 5:6)
Comments
Post a Comment