இஸ்லாத்தை தழுவிய ஆயிஷா என்கிற லித்வினின் சாட்சி (Part 4)
//இன்டநெட்ல ஒருத்த// என்று இடையில் நிறுத்திவிட்டு, //நன் முஸ்லிம்கு தஃவா பன்னுர குருப்ல ஜாய்ன் பண்ணினேன்// என்கிறாள் ஆயிஷா என்கிற லித்வின். முகபுத்தகத்தில் அவளுக்கு மாற்று மதத்தினருக்கு தஃவா செய்யும் ஒரு பேஜை ஒருவர் அறிமுகம் செய்துவைத்தார் என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. இஸ்லாமியரின் பொய் குற்றச்சாட்டுகளுக்கு தெளிவான பதிலை கொடுக்கும் எத்தனையோ பேஜ்கள் இருக்க, இவள் ஏன் இஸ்லாத்துக்கு மதமாற்றும் பேஜை தேர்ந்தெடுத்தாள் சத்தியத்தை தேட? என்ற கேள்வியெழும்புகிறது. மீண்டும் நாங்கள் லித்வினின் சாட்சியின் ஆரம்பத்தில் சொன்ன “ நான் ரொம்ப Stubborn ஆன பொண்ணு ” // என்பதை ஞாபகத்துக்குக் கொண்டுவருவோம். லித்வின் தன்னைப்பற்றி அளவுக்கு அதிகமாக நினைத்துக்கொண்டிருந்தாள். தனக்கு வேதாகமம் நன்றாக தெரியும் என்று வீன் பெருமையில் இருந்தாள். ஒரு காலத்தில் நானும் அப்படித்தான் இஸ்லாத்தின் அக்குவேரு ஆணிவேரு எல்லாம் அறிந்தவன் என்ற மமதையில் இருந்தேன். கிறிஸ்தவர்களுக்கு தஃவா (அழைப்பு பணி) செய்ய கிறிஸ்தவத்தை படித்துக்கொண்டிருந்தபோது ஒரு போதகர் இரண்டு புத்தகங்களை கொடுத்தார். ஒன்று ‘காபாவிலிருந்து கல்வாரிக்கு ’