இறை புத்திரனை ஈமான் கொள்வதா?
JOHN 3:17-21
யோவான் 3:17
- 21
17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய
குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். 18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. 19 ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள்
பொல்லதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே
அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. 20 பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். 21 சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று
வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில்
வருகிறான் என்றார்.
யஹ்யா நபி தன்னுடைய
தேசத்திலிருக்கும் பட்டுப்போன மரங்களை வெட்டி, மனுக்குலத்தை நியாயம் தீர்க்கும் மஸீஹ்வை குறித்துப் பயான் செய்தார். ஆனால் ஈஸா அல் மஸீஹ் நிக்கோதேமுவிடம்
பேசும்போது தான் நெருப்பினால் சுட்டெரிப் பதற்கு வராமல் இரட்சிப்பதற்காக வந்ததாகக்
கூறுகிறார். நம்முடைய இரட்சகர் இரக்கமுள்ளவர். யஹ்யா நபியின் பதிலாள்
பிராயச்சித்தத்தின் இரகசியத்தை அறிந்து கொண்ட போது, ஈஸா அல் மஸீஹ்வை உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற இறை ஆட்டுக்குட்டி என்று அழைத்தார்.
இறைவன் தம்முடைய
அன்பினால் தம்முடைய குமாரன் யூதர்களுக்காக மட்டும் அனுப்பாமல், உலகத்திற்காக அனுப்பினார். 17ம் வசனத்தில் உலகம் என்ற வார்த்தை மூன்று முறை
இடம்பெறுகிறது. புறவினத்து மக்களை நாய்களைப் போல நடத்திய யூதர்களுக்கு இது
அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் இறைவன் இப்ராஹிம் நபியின் சந்ததியை நேசிப்பதைப் போலவே அனைத்து இனங்களையும் நேசித்தார். எல்லோரும் நியாய
தீர்ப்பிற்கு பாத்திரவான்களாயிருக்கிறார்கள். ஆனால் ஈஸா அல் மஸீஹ் நியாயம் தீர்க்கவராமல் மக்களை இரட்சிக்க வந்தார். அவர்
உலகத்தின் பாவத்திற்கான நியாயத்தீர்ப்பை சிலுவையில் சுமப்பதன் மூலமாக
உயர்த்தப்பட்ட சர்ப்பத்தின் உருவகத்தை நிறைவேற்றுகிறவர் என்பதை ஆரம்பத்திலிருந்தே
அறிந்திருந்தார். இறைவனுடைய அன்புக்கு இனப்பாகுபாடு கிடையாது, அது அனைத்து மக்களுக்கும் உரியது.
குமாரனை ஈமான் கொள்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப் படான் என்ற தனிச்சிறப்பான
சொற்றொடரை மஸீஹ் பயன் படுத்துகிறார். இவ்வாறு நியாயத்தீர்ப்பு
நாளைக் குறித்த அனைத்துப் பயமும் நீக்கப்படுகிறது. ஆகவே மஸீஹ்வை ஈமான் கொள்ளும்போது மரணத்திலிருந்து நாம் விடுவிக்கப்படுகிறோம். இல்லாவிட்டால்
நாம் அதற்குப் பாத்திரவான்களாயிருக்கிறோம். நீங்கள் மஸீஹ் அவர்களால் நியாயத்தீர்ப்பிலிருந்து விடு விக்கப்பட்டிருக்கிறீர்கள்.
தங்களுக்கு மஸீஹ் தரும் இரட்சிப்புத் தேவையில்லை என்று அதைப் புறக்கணிப்பவர்கள்
குருடர்களாகவும், மூடர்களாகவும், அவர் தரும் ரஹ்மத்திலிருந்து தங்களை விலக்கிக் கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள். மஸீஹ்வின் வல்லமையை வரவேற்காதவர்கள், பரிசுத்த ஆவியானவரின் (ரூஹுல் குத்தூசின்) ஒளிக்கதிர்களிலிருந்து தங்களை விலக்கிக் கொள்கிறார்கள். மஸீஹ்வின் மரணத்தைப் பரிகசிக்கிறவன் அல்லது மறுதலிக்கிறவன்
இறைவனுக்கு விரோ தமாக கலகம் செய்து தன்னைத் தானே நியாயப்படுத்திக் கொள்கிறான்.
நம்முடைய அமல்கள் அனைத்துமே குறைவுள்ளவைகள், நாம் இறைவனுடைய மகிமையை இழந்து போகிறவர்கள்.
ஏன் சில மக்கள்
இரட்சிப்பை நிராகரிக்கிறார்கள் என்று ஈஸா அல் மஸீஹ் தெளிவாக விபரிக்கிறார்: அவர்கள் இறைவனுடைய நீதியைக்
காட்டிலும் பாவத்தை அதிகமாக நேசிக்கிறார்கள். துன்யாவின் ஒளியிலிருந்து
அவர்கள் தங்களை விலக்கிக் கொள்வதால், தங்கள் பாவத்தோடு ஒட்டிக்கொள்கிறார்கள். மஸீஹ் நம்முடைய
இருதயத்தையும் அதிலுள்ள கொடிய எண்ணங்களின் அடிப்படைக் காரணத்தையும் அறிவார்.
மனிதர்களுடைய செயல்கள் கொடியவை. எந்த மனிதனும் தன்னில்தான் நல்லவன் அல்ல. நம்முடைய
சொல், செயல்,
சிந்தனை அனைத்தும் இளம் பிராயத்திலிருந்தே
தீயவைகளாயிருக்கின்றன. இந்தப் போதனைகள் நிக்கோதேமுவை ஆழமாகப் பாதித்தன. சிறப்பாக ஈஸா அல் மஸீஹ், அவனுடைய பெருமையை உடைத்து மனந்திரும்புதலுக்கு
அழைக்கத்தக்கதாக ஆரம்பத்தில் அவனோடு அன்புடன் பேசிய முறையினால் அவன் மிகவும் பாதிக்கப்பட்டான்.
நடைமுறையில்
நம்முடைய ஈமானை செயல்படுத்துவது என்பது சரியான
காரியத்தைச் செய்வதாகும். இறைவனுடைய உண்மையை ஏற்றுக்கொள்ளும் இந்த ஆயத்த நிலையே
நம்முடைய புதுப்பித்தலுக்கான ஒரு நிபந்தனையாகும். அறிவின் அடிப்படையில் மட்டுமல்ல, முழு மனிதனாக யார் மஸீஹ்வின் சத்தியத்திற்குள்
நுழைகிறார்களோ, அவர்கள் ஒழுக்க ரீதியாக
மறுரூபமடைகிறார்கள். பொய்பேசுகிறவர்கள் உண்மையுள்ள மனிதர்களாகிறார்கள், குறுக்குவழிக்காரர்கள் நேர்மையாளர்களாக மாறுகிறார்கள், துரோகிகள் முஃமீன்களாக மாறுகிறார்கள்.
மறுபிறப்படைந்தவர்கள் (ஈஸா முஸ்லீம்கள்) இதற்கு முன்பு
நல்லவர்களாக வாழ்ந்தவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் தங்களுடைய பாவங்களை அறிக்கை
செய்திருப்பதால் இறைவன் அவர்களை மன்னித்திருக்கிறார். பரிசுத்தமாகுதல் அவர்களில்
ஆரம்பித்துவிட்டது. பரிசுத்த ஆவியின் (ரூஹுல் குத்தூஸ்) செயல்களை நடைமுறைப்படுத்த அன்பின் வல்லமையை அவர் அவர்களுக்குக் கொடுக்கிறார்.
அன்பின் செயல்களை அடையும்படிக்கு மஸீஹ்வின் ஈமானினால் இறைவன் செயல்படுகிறார்.
நாம் நல்லமல்களை
புறக்கணிக்கவில்லை, அவை நம்மிடத்திலிருந்து
வராமல் இறைவனிடமிருந்தே வருகிறது. நாம் அதற்குரிய பெருமையை எடுத்துக்கொள்ள
முடியாது, அது முழுவதும்
இறைவனுடைய ரஹ்மத்தினால் வருகிறது. இதை நாம்
பெற்றுக்கொள்ளும்போது, சுயத்தை மையமாகக் கொண்ட
நம்முடைய சுயநீதியை விட்டு விலகி, மஸீஹ்வின் இரத்தத்தைச்
சார்ந்து, ரஹ்மத்தின் நீதிக்கு நம்மைத்
திறந்துகொடுக்கிறோம். மறுபடியும் பிறந்து மஸீஹ்வில்
நிலைத்திருப்பவர்கள் இறைவனைப் பிரியப்படுத்துகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை
அவருடைய கிருபைக்கு நன்றியறிதலாக மாறிவிடுகிறது. மறு பிறப்பும் பரிசுத்த
வாழ்க்கையும் இறைவனுக்குப் பிரியமான இபாதத் ஆகும்.
ரப்புல் ஆலமீன் ஈஸா அல் மஸீஹ், உமக்கே எங்கள் நன்றிகளை செலுத்துகிறோம். நாங்கள் உம்மோடு
இணைக்கப்பட்டிருக்கிறபடியால், இப்போது நாங்கள் நியாயத்தீர்ப்பைச் சந்திக்கத் தேவையில்லை என்பதற்காக நாங்கள்
உம்மை சுஜுது செய்கிறோம். நீர் எங்களை இறைவனுடைய கோபத்திலிருந்து
விடுவித்திருக்கிறீர். நாங்கள் எங்களுடைய பாவங்களை உமக்கு முன்பாக
அறிக்கையிடுகிறோம். பாவம் செய்யவேண்டும் என்ற எண்ணத்திலிருந்து எங்களைச்
சுத்திகரிப்பாயாக. பிதாவாகிய இறைவனுக்கு பிரியமான இபாதத் ஆன ஒரு வாழ்க்கையை வாழத்தக்கதாக எங்களில் ரூஹுல் குத்தூஸின் கனிகளை உண்டுபண்ணுவாயாக!
ஆமீன்….
Comments
Post a Comment