பாவம் செய்த முஹம்மதும், பாவம் செய்யாத இயேசுவும்

குர்ஆனில் இவ்வசனங்கள் (4:106, 9:43, 23:118, 48:3, 110:3) முஹம்மது நபி பாவம் செய்தவர் என்று கூறுகின்றன.
34:36 என்ற  வசனம் இயேசு ஷைத்தானால் தீண்டப்படாதவர் என்று சொல்கிறது.
இவ்விரண்டையும் எடுத்து நோக்கும்போது முஹம்மது நபியை விட இயேசு சிறந்தவர் என்று தெளிவாக புரிந்துக் கொள்ளலாம்.
திருக்குர்ஆனே இயேசுவை உயர்த்திச் சொல்கிறது  என்பதை இஸ்லாமியர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த குர்ஆன் ஆதாரத்தை கிறிஸ்தவர்கள் காண்பிக்கின்றனர்.
திருக்குர்ஆனை ஆதாரமாகக் கொண்டு வாதிடுவது என்றால் குர்ஆனில் உள்ள அனைத்தையும் அவர்கள் நம்ப வேண்டும் என்று ஒரு வாதத்தை இப்பொழுது இஸ்லாமியர் முன்வைக்கலாம். அப்படி அவர்கள் சொல்வார்களானால் முஹமது நபியின் பெயரை பைபிளில் தேடும் போது முழு பைபிளையும் அவர்கள் ஈமானம் கொண்டிருக்கவேண்டும். அதி பரிசுத்த புதல்வன் என்று இயேசுவை பற்றி சொல்லும் குர்ஆன் இறைவனின் அடிமை தான். மகனல்லர் என்றும் சொல்வதை பார்க்கலாம். “நிச்சயமாக நான் உன்னை மரணிக்கச் செய்து என்னளவில் உயர்த்திக் கொள்வேன் என்று சொல்லும் குர்ஆன் இயேசு கொல்லப்படவுமில்லை; உயிர்த்தெழவும் இல்லை என்றும், ஒருவர் பாவத்தை இன்னொருவர் சுமக்க முடியாது என்றும் முன்னுக்குப் பின் முறனாக கூறுகிற குர்ஆன் இயேசு பாவமறியா பரிசுத்தர் முஹமது நபி ஒரு பாவி என்பதை முறனில்லாமல் சொல்கிறதால் மட்டும் இதனை ஆதாரமாக எடுக்கவில்லை. இஸ்லாமியர் குர்ஆனில் உள்ளதையாவது நம்பி இயேசுவை ஈமான்கொள்ளவேண்டும் என்ற வாஞ்சையில் ஆதாரமாக காட்டுகிறோம்.
குர்ஆனைப் பற்றிய அவர்களின் நம்பிக்கையே முஹமது நபி பாவி என்பதற்கு ஆதாரமாகவுள்ளது. குர்ஆன் முஹம்மது நபியே கற்பனை செய்தார் என்றால் அவர் தன்னைப் பரிசுத்தவானாக, ஒரு பாவமும் செய்யாதவராக சித்தரிக்கும் வசனங்களை உருவாக்க எவ்வளவு நேரமாகும்? இயேசு பாவியாக இருந்தார் என்று ஒரு வசனத்தையும் அவரால் சேர்த்துச் சொல்வது எளிதானது தான். என்று ஒரு வாதத்தை முன்வைத்து குர்ஆன் இறைவேததம் தான் என்று இஸ்லாமியர் வாதாடலாம்.
இஸ்லாம் கிறிஸ்தவ குட்டையில் பிறந்த ஒரு கள்ளப்போதனை என்பதை கிறிஸ்தவர்கள் நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். அதாவது இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற உருவத்தையே அரபிகளுக்கு கொடுத்தது. பைளில் வெளிப்படுத்தின விஷேசம் போன்ற ஒரு வெளிப்பாடு தனக்கு வருவதாகவே முஹமது நபி காண்பிக்க முற்பட்டார். கிறிஸ்தவர்களை ஏமாற்ற இயேசுவின் மரணம் உயிர்த்தெழுதலை நம்புவதாக காண்பித்தார். கத்தோலிக்கரை சமாதானப்படுத்த மரியாளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ‘யூதர்கள் இயேசுவை சிலுவையில் அறையவோ கொலை செய்யவோ இல்லை. அதற்கு ஒப்பாக்கப்பட்டார்’ என்று யூதர்களை சமாதானப்படுத்துகிறார்.
ஆனால் திருக்குர்ஆனில் முஹம்மது நபி பாவம் செய்பவர் தான் என்று கூறப்படுகிறது ஆனால் இஸ்லாமியர் முஹமது நபி பாவமே செய்யவில்லை என்று வாதாடுவது அவர்கள் குர்ஆனையும் நம்பவிலலை என்பதை காட்டுகிறது.
இப்பொழுது குர்ஆனிலிருந்து ஆதாரப்பூர்வமாக முஹம்மது நபி பாவங்கள் செய்பவர் என்பதை நிரூபித்தால் அதே அளவுக்கு இயேசு பாவம் செய்பவர் என்பதும் உண்மையாகும். என்று விடந்தாவாதம் செய்வார்கள் இஸ்லாமியர். ஆனால் குர்ஆன் இயேசு பாவமே செய்யவில்லை என்பதை மறந்துவிடுவார்கள். முஹமது நபி பாவம் செய்திருந்தால் இயேசுவும் பாவம் செய்துதான் இருக்கவேண்டும் என்பதாகவே அவர்களின் லாஜிக் இருக்கும். அவர்களின் லாஜிக் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்பது அவர்கள் கண்களுக்கு தெரியாமல் போய்விடும்.
இப்பொழுது பாவத்துக்கு புது புது விளக்கம் எல்லாம் கொடுத்து குர்ஆன் அப்படி சொன்னாலும் இயேசு பாவம் செய்தவர்தான் அவர் மனிதனாக இருந்தால் பாவம் செய்தே இருக்கவேண்டும் என்று சொல்வார்கள். இயேசு இறைவன் என்பதை அவர்கள் ஏற்க மறுப்பதால் அவர் பாவம் செய்துதான் இருக்கவேண்டும் என்று கற்பனை பண்ணுவார்கள்.
முதல் மனிதர் ஆதம் அவர்கள் பாவம் செய்தார்கள் என்று முஸ்லிம்களும் நம்புகின்றனர். கிறித்தவர்களும் நம்புகின்றனர். அந்தப் பாவம் தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறது என்பதை இஸ்லாமியர் மறுக்கின்றனர். ஒரு வியாதிக்கு வைத்தியனிடம் சென்றால் “இந்த வியாதி உன் அப்பாவுக்கிருந்ததா? உன் தாத்தாவுக்கு இருந்ததா?” என்று வைத்தியர் கேட்கும் கேள்விகளை சிந்தித்தால்கூட இவர்களுக்கு விடைகிடைக்கும். அப்பன் செய்த பாவத்துக்கு மகன் ஏன் தண்டனை பெறவேண்டும்? என்று ஞானிபோல் கேட்பார்கள். தந்தை விட்டுச் சென்ற கடன்களை மகன் செலுத்துவதையும் தந்தை விட்டுச்சென்ற சொத்துக்களை மகன் அனுபவிப்பதையும் தவறு என்று சொல்மாட்டார்கள்.
நடைமுறை காரியங்களை சரியாக சிந்தித்தால் போதும் இஸ்லாமியருக்கு இரட்சிப்பு வெகுதூரத்தில் இல்லை. இவர்களுக்காக நாள் தோரும் நாம் ஜெபிக்கவேண்டும். இன்று அநேக இஸ்லாமியரின் கண்கள் திறக்கப்பட்டு, இயேசுவை தேடி வரும் அநேக சாட்சிகளை நாங்கள் செவிமடுத்து வருகிறோம். எல்லா புகழும் இறைவனுக்கே!  

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?