Posts

Showing posts from July, 2014

மஸீஹ் அண்டை வந்து பாருங்கள்

யோவான் 1:43-46  43 மறுநாளிலே ஈஸா அல் மஸீஹ் கலிலேயாவுக்குப்போக மனதாயிருந்து , பிலிப்புவைக் கண்டு : நீ எனக்குப் பின்சென்றுவா என்றார் . 44 பிலிப்பென்பவன் அந்திரேயா பேதுரு என்பவர்களுடைய ஊராகிய பெத்சாயிதா பட்டணத்தான் . 45 பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு : நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம் ; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய ஈஸா அல் மஸீஹ்வே என்றான் . 46 அதற்கு நாத்தான்வேல் : நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான் . அதற்குப் பிலிப்பு : வந்து பார் என்றான் . இதற்கு முந்திய வசனங்களில் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற சம்பங்களை நாம் பார்க்கிறோம் . முதல் நாளில் எருசலேமிலிருந்து அனுப்பப்பட்டவர்கள் வந்திருந்தார்கள் ; இரண்டாவது நாளில் ஈஸா அல் மஸீஹ் இறைவனுடைய ஆட்டுக்குட்டி என்று நபி யஹ்யா அறிவித்தார் ; மூன்றாவது நாளில் ஈஸா அல் மஸீஹ் நான்கு சீஷர்களைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டார் . நான்காவது நாளில் பிலிப்பையும் நாத்தான்வேலையும் சீஷர்களுடைய வட்டாரத்திற்குள் அழைத்தார் .

போதை பொருளும் மதுபானமும்

Image
இஸ்லாமிய நாடுகளில் அநேக வாலிப யுவதிகள் போதை போருட்களுக்கும் மதுபானத்துக்கும் அடிமையாகி வாழ்கிறார்கள். இஸ்லாம் இவற்றை தடைசெய்துள்ளது. ஆனாலும் 100 வீதம் இஸ்லாமியர் வாழும் நாடுகளில் அநேக வாலிப யுவதிகள் போதை பொருளுக்கு அடிமையாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். போலத் தனது இளவயதில் தன் தந்தை எப்படி குடி போதையால் தன் சொத்துக்ளையெல்லாம் அழித்தார் என்பதை நன்றாக அவதானித்து, தன் வாழ்வில் தான் அப்படியாகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான். ஒரு வாலிப மருத்துவனாக பணியாற்றிய அவனை சக ஊழியர்களின் வற்புறுத்துதலினால் ஒரு கப் விஸ்கி பருகினான். நாலடைவில் அவனை அறியாமலேயே மதுபானம் இல்லாமல் அவனால் வேலையில் ஆர்வம் காட்ட முடியவில்லை. சிறிது காலத்தில் தன் வேலையை இழக்கவேண்டி ஏற்பட்டது. குடும்பம் நடுவீதிக்கு வந்தது. தன் தந்தையை விடவும் போலத் மோசமான நிலைமைக்கு வந்துவிட்டான். அவன் மனைவிக்கு கிறிஸ்த ஊழியர்களின் தொடர்ப்பு கிடைத்தது. உண்மை கிறிஸ்தவர்கள் அடிமைத்தனத் திலும் நெருக்கத்திலும் உள்ளவர்களை ஆதரித்து உதவிகள் செய்து அந்த அடிமைத்தனத்திலிருந்து வெளியேற உதவுவார்கள் என்பதை அவள் அறிந்து, அப்படி சிக

என் அழு குரலைக் கேட்க யாராவது இருக்கிறார்களா?

Image
சமீராவின் வீட்டில் அவளின் தாய் கடும் வியாதியால் பாதிக்கப்பட்டு பௌவீனமடைந்தாள். இதனால் சமீராவின் வீட்டிலுள்ள அனைவரும் துயரத்தில் வாடிக்கொண்டிருந்தனர். மூடுபனி அக்குடும்பத்தை சூழ்ந்துக் கொண்டது. சமீராவின் கேள்விக்கு யாரும் பதில் சொல்ல வில்லை. அவளின் தாயின் வியாகுல நிலையையும் அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. சமீராவின் தாயாரின் மரணத்தின் பின் எல்லோரும் அமைதியாக துக்கம் கொண்டாடினார்கள். தன் தாய்க்கு என்ன நடந்தது என்ற உண்மையை அவளால் புரிந்துகொள்ள முடியாதிருந்தது. யாரும் அது குறித்து அவளுடன் பெசவேயில்லை. “என் அழு குரலைக் கேட்க யாராவது இருக்கிறார்களா? ” என்று தனக்குள் வேதனைப்பட்டுக்கொண்டிருந்தாள் சமீரா. இப்படிப் பட்ட அநேக வேதனையான சம்பவங்கள் சவுதி அரேபியாவில் நாளார்ந்தம் நடக்கின்றது. இஸ்லாமியரைப் பொருத்தமட்டில் இறைவன் அதிக தூரத்தில் இருப்பதால் தனிப்பட்ட முறையில் தன் மீது எவ்வாறு கரிசனைக் கொள்வார் என்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. ஈஸா அல் மஸீஹ்வை ஈஸா நபியாகவே இவர்கள் கருதுவதால் அவளை தன்னுடைய இரட்சகராகவும் நண்பராகவும் அறிந்து கொண்டவர்கள் சவுதி அரேபியாவில் விரல்
Image
முஸ்லீம் முதியோருக்காக துஆ செய்வோம் . பொதுவாக இஸ்லாமிய கலாச்சாரத்தில் தீர்மானங்களை எடுப்பவர்கள் கோத்திர தலைவர்களாக இருந்துள்ளதை சரித்திர ரீதியாக பார்க்க முடிகிறது. கோத்திர தலைவன் இஸ்லாத்தை தழுவும்போது முழு கோத்திரமும் இஸ்லாத்தை தழுவிவிடுவார்கள். அதேபோல் கோத்திர முறைமை மறைந்து வரும் இந்த காலத்தில் குடும்பத்தில் முக்கிய தீர்மானங்களை எடுப்பவர்கள் முதியவர்களாக இருப்பதை அவதானிக்க முடிகிறது. எனது தாயாரின் குடும்பத்தில் ஒன்பது சகோதர சகோதரிகள். அவர்களின் 24 பிள்ளைகளின் பிள்ளைகள் என்று குடும்பம் பெருகிக்கொண்டே போகிறது. எங்கள் மூத்தம்மாவின் கணவர் தான் இப்போதைக்கு குடும்பத்தில் பெரியவர். அவர் சொல்தான் எமது குடும்பத்தின் மந்திர சொல்லாக இருக்கிறது. அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை எவ்வளவு மோசமானது என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் அவருடைய வார்த்தையை விரும்பாவிட்டாலும் யாரும் அவருக்கு முன்னால் எதிர்த்து பேசமாட்டார்கள். துஆ ·          இஸ்லாமிய குடும்ப தலைவர்கள் சத்தியத்தை அறிய வாய்ப்புகள் கிடைக்கவேண்டும் என்று துஆச் செய்வோம். ·          ஈஸா அல் மஸீஹ்வை ஈமான்கொண்டுள்ள முதிய