இலங்கை முஸ்லீம்களுக்காக துஆ செய்வோம்.



இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தால் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக 2012ம் ஆண்டுதான் நாடளாவிய சனத்தொகை கணக்கெடுப்பு நடாத்தப்பட்டது. 1981ம் ஆண்டு சனதொகை கணக்கெடுப்பில் 7.64வீதமாக (1,134556) இருந்த முஸ்லீம்கள் புதிய கணக்கெடுப்பில் 9.71வீதமாக (1,967,227) வளர்ச்சியடைந்திருந்தனர். மதமாற்றங்களும் இதில் உள்வாங்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு பெரும்பான்மையான பெளத்தர்கள் மத்தியில் ஒரு பதட்ட நிலையை உருவாக்கியுள்ளது. பௌத்த அடிப்படைவாதிகளுக்கும் இஸ்லாமிய அடிப்படை வாதிகளுக்கும் இடையில் ஒரு முறுகள் நிலையே உள்ளது.

துஆ குறிப்புகள்
1.                   அடிப்படைவாத மோதல்களால் பாதிப்புக்குள்ளாகின்ற இளைய சமுதாயத்தை இறைவன் காக்கவும். அவர்களுக்கு சுவிசேஷத்தை செவிமடுக்கும் வாய்ப்புகள் அதிகரிக்க வேண்டும் என்றும் துஆ செய்வோம்..
2.                   இலங்கை திருச்சபைகள் இஸ்லாமியரை நேசிக்கவும் அவர்களுக்கு கிறிஸ்துவின் அன்பை காண்பிக்க முன்வரவேண்டும் என்றும் துஆ செய்வோம்.
3.                    இஸ்லாமிய பின்னணியில் இரட்சிக்கப்பட்டவர்கள் கிறிஸ்துவுக்குள் சரியான முறையில் வளரவும் தாங்கள் பெற்றுக்கொண்ட இரட்சிப்பின் அனுபவத்தை தங்கள் இனத்தவர்களுடன் பகிர்ந்துகொள்ள பரிசுத்த ஆவியானவரின் பெலன் கிடைக்க துஆ செய்வோம்.
4.              புது விசுவாசிகள் முகம் கொடுக்கும் சவால்களின்போது கிறிஸ்தவ சபை அவர்களை புரிந்துகொண்டு சரியான முறையில் வழிநடாத்த இறைவன் வழிகாட்ட வேண்டும் என்று துஆ செய்வோம்.

5.            இஸ்லாமியர் மத்தியில் ஊழியம் செய்கின்றவர்களின் பாதுகாப்புக்காகவும் ஒற்றுமைக்காகவும் பொருளாதார தேவைகளுக்காகவும் துஆ செய்வோம்.

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?