2016 இன் 30 நாட்கள் ஜெபத்துக்கு உங்களை வரவேற்கிறோம்!

அன்பார்ந்த ஜெப தோழர்களே,

கடந்த ஆண்டு 30 நாட்கள் ஜெபத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகமானவர்கள் கலந்து கொண்டதை நாம் காணக் கூடியதாக இருந்தது! ஆராய்ச்சியாளர் டேவிட் கெரிசன் அவர்களின் இஸ்லாமிய வீட்டுக்குள் ஒரு காற்று என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட எழுச்சியூட்டும் கட்டுரைகள் ஜெப வழிகாட்டி புத்தகத்துக்கு உற்சாகத்தை கொடுக்கும் சாட்சிகளாக அமைந்தது. நாம் இஸ்லாமிய வீட்டின் ஒன்பது அறைகளையும் ஆராய்ந்து, தொடர்ந்தும் எப்படி, எங்கே கிறிஸ்து முஸ்லீம் உலகம் முழுவதும் இயங்கிகொண்டிருக்கிறார் என்பதை இந்த வருடமும் டேவிடிடமிருந்து அறிந்துகொள்வோம்

இந்த ஆண்டு நாம் இஸ்லாமிய வீட்டுக்குள் அனைத்து வகையான இயக்கங்கள் பற்றியும் மிகவும் விழிப்புடன் இருக்கிறோம்.
போர், பயங்கரவாதம் முஸ்லீம் உலகம் முழுவதும் பரவியுள்ளது. லட்சக்கணக்கான முஸ்லிம்கள் பாதுகாப்பான வாழ்க்கையைத்தேடி நம்பிக்கையோடே புதிய இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இந்த இடம்பெயர்வு முஸ்லீம்கள் கிறிஸ்துவை சந்திக்க அதிக வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும் வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குள் இல்லாமல் இருந்தும், வேதனையான சூழ்நிலைகளில் வாழ்ந்துக்கொண்டு சத்தியத்தை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு உங்கள் ஜெபங்கள் அவர்களை விசுவாச பயணத்தில் கடந்து சென்று கிறிஸ்துவை கிட்டிச்சேர உதவியிருக்கிறது. ஆயிரக்கணக்கானவர்கள் கிறிஸ்துவைப்பற்றி அறிந்துக்கொள்ள நாம் எப்பொழுதும் ஜெபித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.


இந்த வருடமும் முஸ்லீம்கள் தேவனின் ஆழமான அன்பை புரிந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் உங்கள் ஜெபங்களில் முஸ்லீம் உலகம் முழுவதும் பயணிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

உங்கள் ஜெபத்துக்கு நன்றிகள்!

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?