சிருஷ்டி கர்த்தாவும் அல்லாஹ்வும்
கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் என்ற இவ்விரு மார்க்கங்களை பின்பற்றுபவர்கள் சொல்லும் பொதுவான ஒரு விஷயம், "வானத்தையும் பூமியையும் படைத்த இறைவனை நாங்கள் தொழுதுக்கொள்கிறோம்" என்பதாகும். இது ஒரு அடிப்படை விஷயம் என்பதால், இதனை அதிகமாக விளக்கத்தேவையில்லை. இறைவேதமாம் பைபிள் தன் முதல் வசனத்தை தேவன் வானத்தையும் பூமியையும் படைத்த வர்ணனையோடு துவங்குகிறது (ஆதியாகமம் 1:1). இன்னும் பல இடங்களில் பைபிளின் இறைவன் தம்முடைய உருவாக்கும் வல்லமையை பறைசாற்றுவதை காணமுடியும் (பார்க்க ஏசாயா 44:24 & யோபு 38:4-6). இதே போல, குர்-ஆனிலும் அனேக இடங்களில் அல்லாஹ் வானத்தையும் பூமியையும் படைத்தவர் என்று சொல்லப்பட்டுள்ளது. குர் - ஆன் 6:73. அவன் தான் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்தான் ; அவன் " ஆகுக !" என்று சொல்லும் நாளில் , அது ( உடனே ) ஆகிவிடும் . அவனுடைய வாக்கு உண்மையானது ; எக்காளம் ( ஸூர் ) ஊதப்படும் நாளில் , ஆட்சி ( அதிகாரம் ) அவனுடையதாகவே இருக்கும் ; அவன் மறைவானவற்றையும் , பகிரங்கமானவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான் ; அவனே பூரண ஞானமுடையோன் ; ( யாவற்றையும் )