இறை புத்திரனை ஈமான் கொள்வதா?
JOHN 3:17-21 யோவான் 3:17 - 21 17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல் , அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். 18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான் ; விசுவாசியாதவனோ , தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால் , அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. 19 ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. 20 பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான் , தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு , ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். 21 சத்தியத்தின்படி செய்கிறவனோ , தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு , ஒளியினிடத்தில் வருகிறான் என்றார். யஹ்யா நபி தன்னுடைய தேசத்திலிருக்கும் பட்டுப்போன மரங்களை வெட்டி , மனுக்குலத்தை நியாயம் தீர்க்கும் மஸீஹ்வை குறித்துப் பயான் செய்தார் . ஆனால் ஈஸா அல் மஸீஹ் நிக்கோதேமுவி