தம்பியின் கேள்வியும் நானாவின் பதிலும் 2
உமரின் தம்பி எழுதிய பதில் கடிதம்: அன்புள்ள அண்ணாவுக்கு, உங்கள் தம்பி எழுதிக் கொள்வது. உங்கள் கடிதத்தை படித்தேன். இஸ்லாம் பற்றியும், ஐஎஸ் பற்றியும் உங்களுக்கு இருக்கும் அறியாமை உங்கள் கடிதத்தில் தெளிவாக வெளிப்பட்டதை என்னால் கவனிக்காமல் இருக்கமுடியவில்லை. உங்களுக்கு இஸ்லாமின் இரண்டு முக்கியமான அஸ்திபாரங்களை (கட்டளைகளை) விவரிக்க விரும்புகிறேன். முதலாவது அஸ்திபாரம், இஸ்லாமின் ஆன்மீக கட்டளைகளாகும். அதாவது மனிதனை திருத்தி, நல்வழிப்படுத்தி, இறைவனின் கட்டளைகளுக்கு கீழ்படியச் செய்து, சரியான முறையில் இறைவனை தொழுவதற்கு கற்றுக்கொடுத்து, கடைசியாக அவனை சொர்க்கத்தில் சேர்ப்பது தான் இஸ்லாமின் முதலாவது அஸ்திபாரம். இரண்டாவது அஸ்திபாரம், இஸ்லாமின் அரசு சம்மந்தப்பட்ட கட்டளைகளாகும். இஸ்லாமின் ஆன்மீக சட்டங்கள் தனி மனிதனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது போல, இஸ்லாமிய அரசு சம்மந்தப்பட்ட கட்டளைகள் இஸ்லாமிய ஆட்சி தலைவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. தனி மனிதனின் ஆன்மீக கட்டளைகளில் அன்பும் அமைதியும், ஒழுக்கமும் காணப்படுவதுபோல, இஸ்லாமின் அரசு சம்மந்தப்பட்ட கட்டளைகளில் தவறு செய்பவ