Posts

Showing posts from 2016

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?

1.    ஒருவரின்   சுமையை   இன்னொருவர்   சுமக்கமுடியாது கீழ்கண்ட   வசனங்களில்   ஒருவரின்   சுமைகளை   இன்னொருவர்   சுமக்கமுடியாது   என்று   குர் - ஆன்   சொல்கிறது . குர் - ஆன்  6:164 " அல்லாஹ்வை   அன்றி   மற்றெவரையாவது   நான்   இறைவனாக   எடுத்துக்   கொள்வேனா ?  எல்லாப்   பொருள்களுக்கும்   அவனே   இறைவனாக   இருக்கின்றான்  -  பாவம்   செய்யும்   ஒவ்வோர்     ஆத்மாவும்   தனக்கே ,  கேட்டைத்   தேடிக்கொள்கிறது ;  ஓர்     ஆத்மாவின்  ( பாவச் ) சுமையை   மற்றோர்   ஆத்மா   சுமக்காது .     பின்னர் ,  நீங்கள்  ( அனைவரும் )  உங்கள்   இறைவன்   பக்கமே   திரும்பிச்   செல்ல   வேண்டியதிருக்கிறது ;  அப்போது   நீங்கள்     பிணங்கி   விவாதம்   செய்து   கொண்டிருந்தவை   பற்றி   அவன்    உங்களுக்கு   அறிவிப்பான் "  என்று  ( நபியே !)  நீர்   கூறும் .   குர் - ஆன்  17:13-15 17:13.  ஒவ்வொரு   மனிதனுடைய   செயல்   குறிப்பையும்     அவனுடைய   கழுத்தில்   நாம்   மாட்டி   இருக்கிறோம் ;  கியாமத்     நாளில்   அவனுக்காக   ஓர்   ஏட்டை   வெளிப்படுத்துவோம்  -   திறக்கப்பட்ட   நிலையில்   அதனை   அவன்   பெற்றுக