உன்னதப்பாட்டை குறித்து முன்னால் இஸ்லாமியனின் கருத்து
அல் கிதாபில் (பைபிளில்) உன்னதபாடல் என்ற ஒரு கிதாப் உள்ளது. அது ஆபாச புத்தகம் என்று நவீனகால இஸ்லாமிய அறிஞர்கள் (அவர்கள் காபிர்கள் என்று 99 வீதமான இந்திய இஸ்லாமியர் பத்வா கொடுத்துள்ளார்கள்) என்று தங்களை காட்டிக்கொள்ளும் சிலர் முகபுத்தகங்களிலும் இணையத்தளங்களிலும், விவாதங்களிலும் ஜும்மா பயான்களிலும் ஆபாசமாக பயான் செய்துக்கொண்டிருக்கிறார்கள். ஆபாசாமாக பேசினால்தான் அநேகர் விரும்பி தங்கள் பயான்களை கேட்பார்கள் என்பது அவர்கள் விரும்பமாக இருக்கிறது. அதற்கு ஆதாரமாக முஹமது நபி மூன்று சந்தர்ப்பங்களில் பொய் சொல்ல அனுமதித்தார். அதில் ஒன்று தன் மனைவியிடம் பொய் சொல்ல முஹமது நபி அனுமதி கொடுத்திருக்கிறார். ஆகவே மனைவியை பொய்யாக வர்ணித்து அவளை ஏமாற்றலாம். இரண்டாவது இருவருக்கிடையில் சண்டை நடக்கும் போது அவர்களை பொய் சொல்லி சமாதானம் செய்யலாம். மூன்றாவது போர்களத்தில் பொய் சொல்லலாம். மனைவியை பொய்யாக வர்ணிக்கவேண்டும் என்று இந்த அறிஞர்கள் விளக்கம் கொடுப்பார்கள். ஆனால் தூய இறைவன் தன் உம்மத்தை தனது மனைவிபோல் நேசிக்கிறவர். அதாவது அவர் தனது சம