என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?
ஈஸா அல் மஸீஹ் கலிமதுல்லாஹ் என்றால், அவர் இறைவன் என்றால், “ என் இறைவா! ஏன் என்னைக் கைவிட்டீர்? ” என்று அவர் ஏன் மன்றாடினார் என்பது எம்மில் பலரும் கேட்கின்ற ஒரு கேள்வி. இதனை ஆதாரம் காட்டி, புத்திஜீவிகள் என்று காட்டிக்கொள்ளும் பலர் “ தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியாத ஒருவராயிருக்கையில், எப்படி மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காக தன் உயிரையே குர்பானாக கொடுத்தார் ” என்று தங்களை கேள்வி கேட்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். அல் கிதாப் எனும் இறைவேதம் வருடந்தோறும் மாற்றப்படுகிறது என்று பொய்க்குற்றச்சாட்டை முன்வைக்கும் அதே அறிஞர்கள், அல் கிதாபின் சத்திய போதனைகளுக்கு, “ என் தேவனே ! என் தேவனே ! ஏன் என்னைக் கைவிட்டீர் ” என்ற வசனம் அச்சுறுத்தலாக இருந்தால், ஏன் இன்னும் அதனை மாற்றாமல் அப்படியே வைத்துள்ளார்கள் என்று கொஞ்சமாவது சிந்தித்திருந்தால், அவர்களின் இரு குற்றச்சாட்டுக்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகிறதே என்று தங்களைக் குறித்துத் தாங்களே வெட்கப்பட்டிருப்பார்கள். கலிமதுல்லாஹ்வாகிய ஈஸா அல் மஸீஹ், துன்யாவின் பாவத்திற்காக சிலுவையில் குர்பானானபோது, “என் இறைவா! என் இறைவா! ஏன் என்னை கைவிட்டாய்