இன்ஜீலில் ஈஸா அல் மஸீஹ்வின் இறைத்தன்மை
இஸ்லாமியர்கள் இன்ஜீல் என்று அழைக்கும் சுவிசேஷ கிதாபுகளில் (மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்) ஈஸா அல் மஸீஹ் இறைவன் என்பதற்கு சான்றுகள் இல்லை என்று பகிரங்கமாக இஸ்லாமிய அறிஞர்கள் பயான் செய்துகொண்டிருக்கிறார்கள். உண்மையாக சத்தியத்தை தேடும் இஸ்லாமியர் உண்மையை புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக இந்த சிறிய கட்டுரையில் அவர்கள் குற்றச்சாட்டுகள் உண்மையா என்பதை ஆராய்வோம். ஈஸா அல் மஸீஹ் தன்னுடைய இறைத்தன்மையை வெளிப்படுத்திய வசனங்களையும் ஆராய்வோம். 1) உலகம் உண்டாவதற்கு முன்பாக ஈஸா அல் மஸீஹ் : உலகம் உண்டாவதற்கு முன்பாக தான் இருந்ததாகவும் , தனக்கு மகிமை உண்டாகி இருந்ததாகவும் பின்வறும் இன்ஜீலின் வசனங்களில் ஈஸா அல் மஸீஹ் கூறுகிறார். இன்ஜீலில் ஈஸா அல் மஸீஹ் தனக்கு இறைத்தன்மை இல்லை என்று சொன்னதாக கூறும் இஸ்லாமிய அறிஞர்களின் கண்களுக்கு இந்த வசனங்கள் மறைவாக இருந்திருக்குமோ தெரியவில்லை. பிதாவே , உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும் . ( யோவான் 17:5) பிதாவே , ...